உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கு பெற்ரோலியப் பொருட்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குவது, உக்ரைன் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பதிலாக அதனை நீடிப்பதற்கு உதவும் என ஜெலன்ஸ்கி விமர்சித்துள்ளார்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், அதனை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. எனினும், இதுவரை நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை.

முன்னதாக, ரஷ்யாவிடம் இருந்து சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் எரிபொருளைக் கொள்முதல் செய்வதன் மூலம் அந்த நாட்டுக்கு வருவாய் கிடைப்பதாக டிரம்ப் விமர்சித்திருந்தார். ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்முதல் செய்யும் நாடுகளுக்கு எதிராக வரி விதிக்கும் நடவடிக்கைகளையும் அமெரிக்கா முன்னெடுத்திருந்தது.

இந்நிலையில், அமெரிக்காவே ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சர்வதேச அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசியில் உரையாடிய பின்னர், அமெரிக்கா மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு டீசல் விநியோகிக்க ரஷ்யா ஒப்புக்கொண்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதன்படி, உடனடியாக 300,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான டீசல் விநியோகிக்கப்படும் என்றும், நவம்பர் மாதத்தில் மேலும் 500,000 மெட்ரிக் தொன் வழங்கப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து கூடுதலாக ஒரு மில்லியன் மெட்ரிக் தொன் டீசல் விநியோகிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் சரக்கு வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் எரிபொருள் விலை உயர்வினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டில் எரிபொருள் விலையைக் குறைப்பதே தனது முக்கிய நோக்கம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் இந்த முடிவை விமர்சித்துள்ள ஜெலன்ஸ்கி, புட்டினுக்கு வழங்கப்படும் சலுகைகள் அமைதியைக் கொண்டுவராது எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவுக்கு பெற்ரோலியப் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிப்பது, முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டிய போரை நீடிப்பதற்கான முதலீடாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ரஷ்யாவுக்கு எதிரான தடைகளைத் தளர்த்துவதற்குப் பதிலாக, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தைக் குறைப்பதற்கும் பரஸ்பர அடிப்படையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது