ஈழத் தமிழர்களுக்கு நீதி வேண்டும்: தமிழகத்துக்கு பயணம் மேற்கொண்ட 10 பெண்கள்!

வடக்கு கிழக்கு எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த 10 பெண்கள், ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரியும், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் 48 இற்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகளைச் சந்தித்து தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி இந்தியாவின் தமிழ்நாட்டுக்குப் பயணமான குறித்த பெண்கள், 20 நாட்கள் அங்கு தங்கியிருந்து ஈழத் தமிழ் மக்களின் குரலாக பல்வேறு அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து, ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

இதன்போது, தி.மு.க. முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், புதுச்சேரி முதலமைச்சர் ந.ரங்கசாமி , புதுச்சேரி அமைச்சர் பெ.ராஜவேலு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.பாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர் ஞானதாஸ் வி.விக்னேஸ்வரன், மலேசியாவின் பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வரும், மலேசிய உரிமைக் கட்சியின் தலைவருமான பேராசிரியர் இராமசாமி பழனிச்சாமி, தருமபுரி சட்டமன்றத் தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள், திரைப்பட இயக்குநர்கள், புலவர்கள், சட்டத்தரணிகள், தொழிலதிபர்கள், வைத்தியர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களையும் ஈழத் தமிழ்ப் பெண்கள் குரல் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இப்பயணத்தின் ஒரு பகுதியாக, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர்., கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்கும் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்தத் தொப்புள்கொடி பயணத்தைத் தொடர்ந்து இலங்கைக்குத் திரும்பிய பெண்கள், கடந்த வாரம் திருகோணமலையில் மாநாடு ஒன்றையும் நடத்தியுள்ளனர்.

குறித்த மாநாட்டில் மதகுருமார்கள், திருகோணமலை மாநகர சபை முதல்வர் க. செல்வராஜா, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறீநேசன் மற்றும் இ. சிறீநாத், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன், திருகோணமலை மாநகர சபை உறுப்பினர் ர.விஜயதர்சினி , ஓய்வுநிலை அதிபர், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்ட சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்களின் ஊடாக ஈழத் தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கைகளைப் பரந்துபட்ட தரப்பினரிடம் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_0816

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

October 27, 2026

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக, பல மாவட்டங்களின் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மூன்றாம் நிலை சிவப்பு

IMG_0815

வங்காள விரிகுடாவில் மீண்டும் உருவாகும் தளம்பல் நிலை ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

October 27, 2026

வங்காள விரிகுடா கடற்பகுதியில் எதிர்வரும் 31 ஆம் திகதியளவில் மீண்டும் ஒரு தளம்பல் நிலை உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்

IMG_0814

இலங்கையில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

October 27, 2026

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அண்மைய புள்ளிவிபரங்களின்படி, நாடு முழுவதும் மொத்தமாக இதுவரையில் 105,295 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

8

“பழக்க தோஷத்தில் ஆவின் பொருள்களை பிளாக்கில் விற்றுவிடாதீர்கள்” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

October 27, 2026

சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஆவின் நெய், வெண்ணெய் மற்றும் இனிப்புப் பலகாரங்களின் விலையைத் தமிழக வெற்றிக் கழக அரசு

7

“8 பேர் அமைச்சர் ஆகிவிட்டதால் மட்டும் அனைத்தும் ஒரே நாளில் மாறிவிடாது” – அமைச்சர் வன்னி அரசு!

October 27, 2026

கோயம்புத்தூர்: சாதிய வன்கொடுமையால் கோவையில் சமீபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பள்ளி மாணவர் அகிலனின் இல்லத்திற்குச் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி

6

“முதல்வர் ஒரு ஃபைலை திறந்ததற்கே முன்னாள் அமைச்சர் கைது!” – நிர்மல்குமார் பேட்டி!

October 27, 2026

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதில் பல நூறு கோடி ரூபாய் மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் திமுக

5

“அன்பில் மகேஷ் கைது எதிரொலி; இனி வரும் காலம் திமுகவிற்கு திக் திக் நிமிடங்கள்..!” – தவெக பதிவு!

October 27, 2026

சென்னை: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைதைத் தொடர்ந்து, இனி வரும் காலம் திமுகவிற்குத் திக் திக் நிமிடங்கள் என்று

4

“திமுக தீய சக்தி என்றால் தவெக கொடிய தீய சக்தி!” – சீமான் கடும் விமர்சனம்!

October 27, 2026

சிவகங்கை: திமுக தீய சக்தி என்றால், ஆளும் தமிழக வெற்றிக் கழகம் ஒரு கொடிய தீய சக்தி என்று நாம்

3

“வெளியில் குற்றவாளிகள்… கைதிகளும் தப்பியோட்டம்” – மு.க.ஸ்டாலின் சாடல்!

October 27, 2026

சென்னை: தேனி மாவட்டச் சிறையில் இருந்து பதினேழு கைதிகள் ஒட்டுமொத்தமாகத் தப்பிச் சென்ற மாபெரும் அதிர்ச்சிச் சம்பவத்திற்குத் திராவிட முன்னேற்றக்

2

“அன்பில் மகேஷ் கைது: மிரட்டலுக்கு திமுக அஞ்சாது” – சேகர்பாபு!

October 27, 2026

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு முறையான அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் நானூறு கோடி ரூபாய் அளவுக்கு மாபெரும் மோசடி

1

“சிறையில் இருந்து தப்பிய மேலும் 8 கைதிகள் சிக்கினர்!” – எஞ்சியுள்ள 4 பேரை தேடும் பணி தீவிரம்!

October 27, 2026

சென்னை: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் அமைந்துள்ள மாவட்டச் சிறையில் இருந்து தப்பிச் சென்ற 17 கைதிகளில் மேலும்

Toronto-Election-1536x783

டொராண்டோ மாநகராட்சித் தேர்தல் 2026: நகரசபைக்குத் தேர்வானவர்கள் மற்றும் வெளியேறியவர்களின் முழுமையான பட்டியல்

October 27, 2026

திங்கள்கிழமை நடைபெற்ற டொராண்டோ மாநகராட்சித் தேர்தலில் 7 புதிய கவுன்சிலர்களை வாக்காளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இதன் மூலம் தற்போதைய கவுன்சிலர்கள்