இலங்கையில் நடைபெறவுள்ள அமைதிக்கான நடைபயணத்திற்கு அரச அனுசரணை

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வொஷிங்டன் வரை 10 மாநிலங்களைக் கடந்து 110 நாட்கள் அமைதிக்காக நடைப்பயணம் மேற்கொண்ட கௌரவத்திற்குரிய தேரரின் பங்கேற்புடன், இலங்கையில் நடைபெறவுள்ள ‘Walk for Peace Program in Sri Lanka’ எனும் அமைதிக்கான நடைப்பயணத்திற்கு அரச அனுசரணை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல், மெல்பிட்டியே விமலகித்தி தேரர் தலைமையில் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் பங்கேற்புடன் வியாழக்கிழமை (2) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

‘Walk for Peace Program in Sri Lanka’ எனும் இந்த நடைப்பயணத்திற்காக, அமெரிக்க அமைதிக்கான நடைப்பயணத்தின் நிறுவனர் பஞ்ஞாகர தேரர் தலைமையிலான பன்னிரண்டு தேரர்கள் இம்மாதம் 21ஆம் திகதி இநநாட்டிற்கு வருகை தரவுள்ளதுடன், ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் ஏப்ரல் 28ஆம் திகதி வரை ஏழு நாட்கள், மகா சங்கத்தினர் உள்ளிட்ட குழுவினர் இந்த அமைதிக்கான நடைப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

ஏப்ரல் 21ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதிக்கு முன்பாக ஆசிர்வாதம் பெற்ற பின்னர், இந்த நடைபயணத்தின் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அடமஸ்தானாதிபதி தேரர் தலைமையிலான மகா சங்கத்தினரின் ஆசிர்வாதத்துடன், ஸ்ரீ மகா போதியின் கன்று ஒன்றும் இந்த அமைதிக்கான நடைபயணத்தில் எடுத்துச் செல்லப்படவுள்ளது.

மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலி மகா சேயவிற்கு முன்பாக நடைபெறும் விசேட மத வழிபாடுகளைத் தொடர்ந்து, அநுராதபுர மாவட்ட மக்களுக்கு அமைதிக்கான செய்தி முன்வைக்கப்படும்.

ஏப்ரல் 22 ஆம் திகதி காலை மீண்டும் தம்புள்ளை புனிதத்தலத்திலிருந்து ஆரம்பமாகும் இந்த நடைப்பயணம் நாவுல, மாத்தளை, கண்டி, கடுகண்ணாவை, கேகாலை, தோலங்கமுவ, கஜுகம, யக்கலை, மகர மற்றும் களனி வழியாக ஏப்ரல் 28ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தை வந்தடையவுள்ளது.

அமைதிக்கான நடைப்பயணத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில், கொண்டவரப்பட்ட ஸ்ரீ மகா போதியின் கன்றை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், இராஜதந்திர ரீதியாக அமெரிக்காவிலிருந்து வருகை தந்துள்ள மகா சங்கத்தினரிடம் கையளிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

Clean Sri Lanka செயலகத்தின் பங்களிப்புடன் நடைபெறவுள்ள இந்த நடைப்பயணத்தில் கலந்துகொள்ளும் தேரர்களுக்கான உணவுகளை ஏற்பாடு செய்தல், சுகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பு வழங்குதல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி. சேனாதீர, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, Clean Sri Lanka செயலகத்தின் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ். பி. சி. சுகீஷ்வர, தேசிய வடிவமைப்பு நிலையத்தின் தலைவர் சிசிர அமரபந்து, ஜனாதிபதி ஊடக ஆலோசகர் சந்தன சூரியபண்டார, பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய ஆகியோருடன் முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Sakara

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் – சாகர காரியவசம்!

October 13, 2026

நாட்டின் தேசியம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஞானசார தேரர் பலவிடயங்களை வெளிப்படுத்தினார். சிங்கள பௌத்த இனத்தை பாதுகாப்பதற்காக தவறுகளை

mini

அமைச்சரைச் சந்திக்க தமிழ் பெண்கள் சங்கம் கோரிக்கை

October 13, 2026

சிறுவர்கள் மற்றும் யுவதிகளின் கலை, கலாசாரத் திறனை மேம்படுத்தும் நோக்கில் நிறுவுவதற்கு உத்தேசித்துள்ள நவீனமயமாக்கப்பட்ட கலாலயா கலாசார மற்றும் இளைஞர்

zer

சர்வதேச இலத்திரனியல்-கழிவு தினம்; 2050 இல் பூஜ்ஜிய கார்பன் இலக்கு!

October 13, 2026

2050 ஆம் ஆண்டளவில் ‘பூஜ்ஜிய கார்பன்’ (Net Zero) இலக்கை அடைவதே அரசாங்கத்தின் முதன்மையான எதிர்பார்ப்பாகும் என சுற்றாடல் பிரதி

fue

75 புதிய அரச எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவ நடவடிக்கை

October 13, 2026

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2026

arju

அர்ச்சுனாவின் பதவியில் சிக்கல்: விரைவில் விசாரணை!

October 13, 2026

டாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மேலதிக விசாரணைக்காக எதிர்வரும்

Navi Pillay York University (6) harini

நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம் ஹரிணி சிவலிங்கம்

October 12, 2026

ஹரிணி சிவலிங்கம்-கனடா சட்டத்தரணி இந்த வாரம், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தளராத அர்ப்பணிப்பால் தனது அசாதாரணமான வாழ்க்கைப்

Chamara_Sampath_1200x675px_06_08_25

சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?

October 12, 2026

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்களை இலங்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இரத்தினக்கல் வியாபாரியொருவரிடம்

anura may 26

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் – எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு

October 12, 2026

சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் காவியுடை தொடர்பில் பௌத்தமத பீடாதிபதிகள் முன்மொழிந்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில்

batti land

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் இரா சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

844137579_1823350292179398_4868269684370359471_n

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

October 12, 2026

ஈழத் தமிழர் வரலாற்றில் இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலைகளில் ஒன்றான யாழ்_கொக்குவில்பிரம்படி_படுகொலையின்39ஆம்ஆண்டுநினைவு நாள் இன்றாகும் (அக்டோபர் 12, 2026).

gary

நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி

October 12, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளரும் 2026 நோபல் சமாதான பரிசை பெற்றுள்ளவருமான நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின்