அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலால் இலங்கை கடற்கரையில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது இதன் விளைவாகவே இலங்கைக் கடற்படை ஈரானிய மாலுமிகளை மீட்கத் தொடங்கியது என்று மூன்று அமெரிக்க அதிகாரிகள் இன்று புதன்கிழமை ரொய்ட்டர்ஸ் சேவையிடம் தெரிவித்தனர் என செய்தி வெளியாகியுள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகளில் ஒருவர் இந்தத் தாக்குதல் அமெரிக்க இராணுவ நீர்மூழ்கிக் கப்பலால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.