இலங்கையில் 12 மாதகாலத்தில் 89 மத அடிப்படையிலான மீறல்கள்

இலங்கையில் கடந்த 2024 நவம்பர் – 2025 ஒக்டோபர் வரையிலான 12 மாத காலப்பகுதியில் மத அடையாளத்தின் அடிப்படையில் 89 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும், தரவுகளின் பிரகாரம் கிறிஸ்தவ மற்றும் இந்து மதங்களைச் சேர்ந்தவர்களே இக்காலப்பகுதியில் அதிகம் இலக்குவைக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் 2024 நவம்பர் – 2025 ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் பதிவான மத சுதந்திர மீறல்கள் தொடர்பில் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவின் ‘இணைப்பாதைகளில் உரிமைகள் : இலங்கையில் இடம்பெற்ற மத ரீதியான தாக்குதல்கள் பற்றிய சட்ட ஆய்வு’ எனும் தலைப்பிலான ஆய்வறிக்கை நேற்று முன்தினம் வியாழக்கிழமை (14) வெளியிடப்பட்டது.

அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள தரவுகளின் பிரகாரம் மேற்குறிப்பிட்ட 12 மாதகாலத்தில் மத மற்றும் நம்பிக்கை சுதந்திரத்தை மீறும் வகையிலான 29 சம்பவங்களும், 19 பிரிவினைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இந்தப் பிரிவினைச் சம்பவங்களில் பெரும்பாலானவை வழிபாட்டுத் தலங்களைப் பதிவு செய்யுமாறு கோரி மேற்கொள்ளப்பட்டவையாகும். அதேபோன்று அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களுடன் தொடர்புடைய 15 சம்பவங்களும், 5 பொதுச்சொத்து சேத சம்பவங்களும், உடலியல் ரீதியான வன்முறைச் சம்பவங்கள் 4 உம் பதிவாகியுள்ளன.

அதேவேளை இக்காலப்பகுதியில் கிறிஸ்தவர்களும் இந்துக்களுமே அதிகளவில் இலக்குவைக்கப்பட்டிருப்பதாகவும், அதன்படி கிறிஸ்தவர்களுக்கு எதிராக 58 தாக்குதல் சம்பவங்களும், இந்துக்களுக்கு எதிராக 22 தாக்குதல் சம்பவங்களும் இடம்பெற்றிருப்பதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் சமூகவலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைப் பொறுத்தமட்டில் முஸ்லிம்களே பிரதானமாக இலக்குவைக்கப்பட்டிருப்பதாகவும், அவ்வாறான 15 சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும் அறிக்கையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று இத்தாக்குதல்கள் மற்றும் மீறல்களின் பின்னணியில் இருப்பவர்கள் பற்றி நோக்குகையில், அவற்றில் அரச தரப்பினரின் பங்களிப்பு உயர்வாகக் காணப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பொலிஸாரின் பங்களிப்புடன் 36 மீறல் சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதுடன், ஏனைய அரச அதிகாரிகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களினாலும் மத சுதந்திரத்துக்கு இடையூறு விளைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் உடலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் சொத்துச்சேதங்கள் போன்ற சம்பவங்களை நிகழ்த்தியவர்கள் தனிநபர்களேயாவர்.

மேலும் மாவட்ட ரீதியாக நோக்குகையில் கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான சம்பவங்கள் (15) பதிவாகியிருப்பதுடன், அதற்கு அடுத்ததாக கிளிநொச்சி (12) மற்றும் திருகோணமலை (11) ஆகிய மாவட்டங்களில் மத ரீதியிலான மீறல்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் இத்தகைய மத அடிப்படையிலான வன்முறைகள் மற்றும் மீறல் சம்பவங்கள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்துவதற்கு இணையவெளியில் மத ரீதியான பதற்றங்கள் அதிகரிப்பதைத் தடுப்பதற்காக எச்சரிக்கை முறைமைகளை உருவாக்கல், சமூக ஊடகங்களைக் கண்காணித்தல் மற்றும் சட்ட ரீதியிலான விழிப்புணர்வை ஏற்படுத்தல் ஆகிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவு அவ்வறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

namal

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சி – நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு

July 27, 2026

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிக்கும் தார்மீக

756724618_1047290304383453_223524354740937400_n

திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியில் வாகன விபத்து ஒருவர் பலி சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்.

July 27, 2026

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் விநாயகபுரம் 01 பிரதான வீதியில் திருக்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இன்று

suresh11

சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு; நாளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்

July 27, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு

SPHU2A42SZGE7MVH4PDL2ITFMY

காணாமல் போன கால்கரி சிறுவன் பார்க்கர் வெல்ஸ் கடத்தப்படவில்லை; காவல்துறை தகவல்

July 27, 2026

11 வயதான பார்க்கர் வெல்ஸைக் கண்டறிவதற்கு வேறு என்னென்ன வழிமுறைகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்பது குறித்து கனடாவின் காணாமல் போன குழந்தைகளுக்கான

NJBRXZLYK5F3BKA4TRRZ2H2UBA

பிஃபா உலகக் கோப்பை போட்டிகளைத் தொடர்ந்து கனடாவில்  பலர்அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பம்

July 27, 2026

2026 பிஃபா (FIFA) உலகக் கோப்பை போட்டிகளுக்காக கனடாவுக்குப் பயணம் செய்த பலர் நபர்கள், போட்டிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அந்நாட்டில்

8

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு ‘சிக்கல்’ – லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

July 27, 2026

சென்னை: கடந்த 2015-2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்த வைத்திலிங்கம், அடுக்குமாடி வீடு

55OGDDGBRNDMDLRPGLCJT6AH5Q

கேப் பிரெட்டன் (Cape Breton) தீ விபத்து நடந்த இடத்தில் சடலம் மீட்பு; காவல்துறையினர் தீவிர விசாரணை

July 27, 2026

மெக்ஆடம்ஸ் ஏரி பகுதியில் நடந்த உயிரிழப்பை ஏற்படுத்திய தீ விபத்து குறித்து கேப் பிரெட்டன் பிராந்திய போலீசார் விசாரணை நடத்தி

7

அடையாளம் தெரியாத நபர் தொல்லை: மேயர் பிரியா பரபரப்பு புகார்!

July 27, 2026

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி மேயராக பதவி வகித்து வரும் பிரியா, தனக்கு சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம்

6

ஆட்சிக்கு வந்த இரண்டரை மாதங்களில் ரூ.20,881 கோடி கடன்- தவெக அரசை விளாசிய கீதாஜீவன்!

July 27, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்

ED5JQPYN5NF6XDCAHMETPYHFMM

காணாமல் போன 23 வயது டொராண்டோ பெண்ணைத் தேட கட்டளை மையம் (Command Post) அமைப்பு

July 27, 2026

டிக்சன் மற்றும் மார்ட்டின் குரோவ் வீதிகளுக்கு அருகே கடைசியாகக் காணப்பட்ட 23 வயது பெண்ணை டொராண்டோ போலீசார் தேடி வருகின்றனர்.

AAFNGBSIVY7P5CLUU3MZCILP4M

ஆஜாக்ஸ் பூங்காவில் சிறுவர்கள் நிறைந்திருந்த விளையாட்டுப் பகுதியில் காரை ஓட்டிச் சென்றதாக நபர் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்குப்பதிவு

July 27, 2026

இம்மாத தொடக்கத்தில், ஆஜாக்ஸ் (Ajax) பகுதியிலுள்ள பூங்கா ஒன்றில் சிறுவர்கள் நிறைந்திருந்த விளையாட்டுப் பகுதியிலும் நடைபாதைகளிலும் காரை ஆபத்தான முறையில்

XUP2KI6NKFC6BB6QNVCW5Y4UCQ

அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு; அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

July 27, 2026

அமெரிக்க தூதரகத்திற்கு அருகே அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை திங்கட்கிழமை அதிகாலை அமெரிக்க தூதரகத்திற்கு