இலங்கையின் தேசிய வளங்களைக் கைப்பற்றத் துடிக்கும் இந்தியாவினால் எமது சிறு கடிதத்தைக் கூட பெற முடியாதுள்ளது

லங்கையின் உயிரியல் தரவுகள், துறைமுகங்கள், திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் உள்ளிட்ட தேசிய வளங்களைக் கைப்பற்றத் துடிக்கும் இந்தியாவினால், இலங்கை மக்கள் தமது கோரிக்கையை முன்வைத்து கொண்டுவந்த ஒரு சிறு கடிதத்தைக் கூட பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகே குற்றம் சாட்டினார்.

உயிரளவியல் அடையாள அட்டை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அதனை இந்திய நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் கடிதம் ஒன்றை ஒப்படைப்பதற்கும் கலந்துரையாடுவதற்கும் மக்கள் போராட்ட இயக்கத்தின் குழு இன்று (4) இந்திய உயர்ஸ்தானிகராலயத்துக்கு சென்றிருந்நது.

இந்நிலையில் குறித்த கடிதத்தை இந்திய உயர்ஸ்தானிகர் ஏற்க மறுத்ததாக தெரிவித்து மேற்கண்டவாறு வசந்த முதலிகே குற்றம் சாட்டினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை மக்களின் கண்விழிப் படலம், கைரேகைகள், மரபணு, முக அமைப்பு மற்றும் குரல் பதிவு உள்ளிட்ட மிக முக்கிய உயிரியல் தரவுகளைச் சேகரித்து டிஜிட்டல் அடையாள அட்டையைத் தயாரிக்கும் திட்டத்துக்காக இந்திய நிறுவனங்களைத் தெரிவுசெய்யும் வகையில், கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இலங்கையில் தேசிய அடையாளப் பத்திரத் திணைக்களம் இயங்கிவரும் பின்னணியிலும், அதற்குப் பதிலாக புதிய டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வந்த சூழலிலும், அதனைத் தடுத்து நிறுத்திவிட்டு இத்திட்டத்தை இந்திய நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் எமது எதிர்ப்பைப் பதிவுசெய்யும் வகையிலேயே நாம் நேற்றைய தினம் இந்த மகஜரைக் கையளிக்க வந்தோம். இருப்பினும், இந்த மனுவைப் பெற்றுக்கொள்ள மறுத்த உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், இது குறித்து இலங்கை அரசாங்கத்துடனும் வெளியுறவு அமைச்சருடனும் பேசுமாறு கூறி எம்மைத் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இலங்கை மக்களின் உயிரியல் தரவுகள், துறைமுகங்கள், திருகோணமலை எண்ணெய் தாங்கிகள், பொருளாதார மண்டலத்துக்கான நிலங்கள் மற்றும் தீவுகளில் உள்ள கனிம வளங்கள் என அனைத்தையும் கைப்பற்றத் துடிக்கும் இந்தியவால், இலங்கை மக்கள் கொண்டுவந்த ஒரு சிறு கடிதத்தைக் கூட பெற்றுக்கொள்ள முடியாமல்போயுள்ளது.

டிஜிட்டல்மயமாக்கல் என்ற பெயரில் இலங்கை மக்களின் தனிப்பட்ட தரவுகளைத் திரட்டுவதற்கே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. டிஜிட்டல் அடையாள அட்டை முறைமைக்கு நாம் எதிரானவர்கள் அல்லர். ஆனால், உலகளவில் தனிமனித சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உயிரியல் தரவுகள் இன்றி டிஜிட்டல் அடையாள அட்டைகள் உருவாக்கப்படும் நடைமுறைகள் காணப்படுகின்றன. உயிரியல் தரவுகளைப் பயன்படுத்தி டிஜிட்டல் அடையாள அட்டைகளைத் தயாரிக்கும் முறைமையை உலகின் பல நாடுகள் நிராகரித்துள்ளன. கடுமையான பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்பைக் கொண்டுள்ள இஸ்ரேல் நாடு கூட உயிரியல் தரவுகளைச் சேகரிப்பது பொருத்தமானதல்ல என்ற முடிவுக்கு வந்துள்ளது.

முதலாளித்துவ சமூகக் கட்டமைப்பில் ஒவ்வொரு தனிநபருக்கும் தனது உடல் மற்றும் சுதந்திரம் சார்ந்த உரிமைகள் காணப்படுகின்றன. ஆனால், தனிநபரின் விருப்பத்துக்கு மாறாக அவர்களின் உயிரியல் தரவுகளைப் பலவந்தமாகத் திரட்டுவது ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதாக அமைவதுடன், சமூகத்தை மீண்டும் முடியாட்சி மற்றும் அடிமைத்தனத்தை நோக்கியே இட்டுச் செல்லும். மேலும், இருபது பில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்துக்கு இந்தியா பத்து பில்லியன் ரூபாவையும், இலங்கை பத்து பில்லியன் ரூபாவையும் வழங்கவுள்ளதாகக் கூறப்பட்டாலும், இத்தொகையில் இத்திட்டத்தை நிறைவு செய்ய முடியாது என இந்திய நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இதன் காரணமாக இலங்கை மக்களின் வரிப்பணமே மேலதிகமாக விரையமாக்கப்படும் நிலை தோன்றியுள்ளது.

மறுபுறம், அரசாங்கத்தின் திறைசேரித் தரவுகள் அண்மையில் கணினி ஊடுருவல்களால் காணாமல்போயிருந்த நிலையில், எவ்விதப் பாதுகாப்பு உத்தரவாதமும் இன்றி மக்களின் உயிரியல் தரவுகளைச் சேகரிக்க முற்படுவது பெரும் ஆபத்தானது. இத்தரவுகள் வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டாலோ அல்லது கணினித் தகவல் திருடர்களின் கைகளுக்குச் சென்றாலோ தனிநபர்களின் பாதுகாப்பும் உரிமைகளும் முற்றிலும் இல்லாமல்போய்விடும்.

இந்தியாவை பெரிய அண்ணனாகவும், இலங்கை அரசாங்கத்தை தம்பியாகவும் கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த செயற்பாடுகள், எதிர்காலத்தில் நாட்டை முழுமையான கண்காணிப்பு அரசாங்கமாக மாற்றுவதற்கே வழிவகுக்கும். எனவே, மக்களின் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு இத்திட்டத்துக்கு எதிராக நாம் எமது கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்கின்றோம் என்றார்.

hiv

இலங்கையில் ஆண்களுக்கு எச்.ஐ.வித் தொற்று அதிகரிப்பு

October 14, 2026

இலங்கையில் எச்.ஐ.வி (HIV) தொற்று அதிகரிப்பதற்கு ஆண்களுக்கிடையில் நடைபெறும் பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக பாலியல் நோய்கள் தொடர்பான

china

கொழும்பு போர்ட் சிட்டியில் சீன பாதாள குழுவின் முக்கியத் தலைவர் கொழும்பில் கைது

October 14, 2026

கொழும்பு போர்ட் சிட்டியில் (Colombo Port City) முதலீடு செய்ய வந்த சீன முதலீட்டாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து, அவர்களிடம்

Saji

அனோஜனின் மரண தண்டனை இரத்துக்கு நன்றி தெரிவித்தார் சஜித்

October 14, 2026

கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்தவரும், சவூதி அரேபியாவில் பணிபுரியச் சென்றவருமான பொறியாளர் அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை இரத்துச் செய்வதற்கு

rai

இலங்கையை அண்மித்த கீழ் வளிமண்டல கொந்தளிப்பு நிலை

October 14, 2026

நாட்டை அண்மித்துள்ள வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் கீழ் வளிமண்டல கொந்தளிப்பு நிலை காரணமாக, மழை அளவு மேலும் அதிகரிக்கும்

vimal

போலிப் புகைப்படத்தைப் பயன்படுத்தியதாக விமல் வீரவன்ச மீது குற்றச்சாட்டு

October 14, 2026

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியொன்றில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியாக உருவாக்கப்பட்ட புகைப்பட

GL

சிறையில் உள்ள மதத் தலைவர்களின் ஆடை குறித்து அரசு ஏமாற்று வேலை செய்கிறது – ஜீ.எல். பீரிஸ்

October 14, 2026

சிறைச்சாலையில் உள்ள பௌத்த பிக்குகள் உள்ளிட்ட மதத் தலைவர்களை வெளியிலும் நீதிமன்றங்களுக்கும் அழைத்துச் செல்லும்போது அவர்கள் அணியவேண்டிய உடைகள் குறித்து

basil

பசிலை கைதுசெய்யுங்கள் – சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறுங்கள் -நீதவான் உத்தரவு

October 14, 2026

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கைதுசெய்து தன்முன்னாள் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்தின்

srisena

அரசமைப்பினை பின்பற்றியே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பை வழங்கினேன்- மைத்திரி

October 14, 2026

அரசமைப்பின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையிலேயே பொதுபலசேனாவின் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பை வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

nihal abeyasinga

புதிய அரசியலமைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் ஜனவரியில்

October 14, 2026

அரசியலமைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் 2027 ஜனவரியில் ஆரம்பமாகலாம் என தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான

anojan

அனோஜனின் மரணதண்டனை இரத்து

October 14, 2026

இலங்கையரான அனோஜன் சிவராஜாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனையை சவுதிஅரேபிய நீதிமன்றம் இரத்து செய்துள்ளது என பிரதிவெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

IMG_9428

விஜேராம பகுதியில் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மையம்

October 14, 2026

சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் விஜேராம பகுதியில் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மையம் ஒன்றைத் நிறுவுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார

IMG_9427

திக்கம் வடிசாலையை மீள இயக்க நடவடிக்கை!

October 14, 2026

யாழ்ப்பாணம் திக்கம் வடிசாலையை மீள இயக்கி, ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்றொழில், நீரியல்