இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை

இலங்கை கடற்பரப்புக்கு அருகில் சிக்கியுள்ள ஈரானிய எண்ணெய் தாங்கி கப்பல்களுக்குத் தேவையான அத்தியாவசியச் சேவைகளை வழங்கினால், இலங்கை மீது தடைகள் விதிக்கப்படலாம் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளதாக அமெரிக்காவின் ‘வோல்ஸ்ட்ரீட் ஜர்னல்’ (The Wall Street Journal) செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக அமெரிக்க அதிகாரிகள் இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கடல்சார் முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடைகள் காரணமாக, இலங்கையின் தென்மேற்கு கடற்கரையில் இருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில் 20 வெற்று ஈரானிய எண்ணெய் தாங்கி கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன.

இந்தக் கப்பல்களில் உள்ள மாலுமிகள் உணவு, எரிபொருள் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவுக்கு ஈரானிய கச்சா எண்ணெயை விநியோகித்துவிட்டுத் திரும்பிய இக்கப்பல்கள், இலங்கை மற்றும் மலேசிய எல்லைகளுக்கு அருகில் முடங்கியுள்ளன.

ஈரானியக் கப்பல்களுக்கு முன்னரும் இலங்கை சேவைகளை வழங்கியிருந்ததால், மலேசியாவுக்கு அருகில் இருந்த பல கப்பல்கள் கடந்த இரண்டு மாதங்களில் இலங்கையை நோக்கிய நகர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், இந்தக் கப்பல்களுக்குச் சேவை வழங்கும் உள்நாட்டு நிறுவனங்கள் மீது ‘இரண்டாம் நிலைத் தடைகள்’ விதிக்கப்படலாம் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கடந்த ஆகஸ்ட் மாதம் எச்சரித்திருந்தது.

இதன் காரணமாக, கொழும்பு துறைமுக எல்லையை வந்தடைந்த ஈரானியக் கொடியுடன் கூடிய இரு கொள்கலன் கப்பல்களுக்குச் சேவைகளை வழங்குவது ‘சாமர்த்தியமான செயலல்ல’ என இலங்கை துறைமுக அதிகாரசபையும் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.

மேலும், இந்தத் தடைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இலங்கை அதிகாரிகள் 40 பேரைக் கொண்ட குழுவுக்கு அமெரிக்கத் தூதரகம் கடந்த செப்டம்பர் மாதம் மூன்று நாட்கள் பயிற்சிப் பட்டறையொன்றையும் நடத்தியுள்ளது.

அதேவேளை, கப்பல்களில் உள்ள மாலுமிகளிடமிருந்து உணவுக்காக உருக்கமான கோரிக்கைகள் கிடைக்கப்பெற்ற போதிலும், அரசாங்கத்தின் முறையான அனுமதியின்றி சேவைகளை வழங்க முடியாது என இலங்கை கப்பல் முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

bre

நாளாந்தம் 15–17 மார்பகப் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்!

October 2, 2026

ட்டில் நாளாந்தம் சுமார் 15 தொடக்கம் 17 வரையான மார்பகப் புற்ற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதோடு, நாள்தோரும் 3 பேர் உயிரிழப்பதாக

s

இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை

October 2, 2026

இலங்கை கடற்பரப்புக்கு அருகில் சிக்கியுள்ள ஈரானிய எண்ணெய் தாங்கி கப்பல்களுக்குத் தேவையான அத்தியாவசியச் சேவைகளை வழங்கினால், இலங்கை மீது தடைகள்

dr

2 மாதங்களில் போதைப்பொருள் தொடர்பான 17,506 இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகள் வெளியீடு

October 2, 2026

கடந்த இரண்டு மாதங்களில் போதைப்பொருள் தொடர்பாக 17,506 இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர்

7

“ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு!” – மதுராந்தகம் பிரச்சாரக் களத்தில் விசிக நிலைப்பாட்டை உறுதி செய்த தொல். திருமாவளவன்!

October 2, 2026

மதுராந்தகம்: மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.

5

“மதுராந்தகம் தொகுதியில் முதலமைச்சர் விஜய் சாலை வலம்!” – வழிநெடுக மலர் தூவி உற்சாக வரவேற்பளித்த பொதுமக்கள்!

October 2, 2026

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய்

4

“2031-லும் விஜய்யே முதலமைச்சர்!” – மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரக் களத்தில் முதலமைச்சர் விஜய்க்கு வைகோ புகழாரம்!

October 2, 2026

செங்கல்பட்டு: எதிர்வரும் 2031 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று விஜய்யே முதலமைச்சராகத் தொடர்வார் என மதிமுக

Soumiya-anbumani-2024-03-9bafa948f012b541ca11b19b49b71553-3x2

“மது இல்லாத் தமிழகம்!” – பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி தொடங்கிய புதிய இயக்கம்; முழு ஆதரவு கோரும் அன்புமணி!

October 2, 2026

சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மதுப்பழக்கத்திலிருந்து மக்களை மீட்கும் நோக்கில், பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி “மது இல்லாத் தமிழகம்”

1200-675-27091173-thumbnail-16x9-ministerramesh

“கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உதயநிதிக்கு ஸ்டாலின் கற்றுத்தரவில்லை!” – இரட்டை அர்த்தப் பேச்சுகளுக்கு அமைச்சர் ரமேஷ் கடும் கண்டனம்!

October 2, 2026

திருச்சி: அண்ணாவின் கொள்கைகளான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை மு.க. ஸ்டாலின் தனது மகனான உதயநிதிக்கு முறையாகக் கற்றுத்தரவில்லை என

van

வங்கதேசத்தில் கால்வாயில் மிதந்து வந்த டிரம்மில் இருந்து இந்து மதத்தை சேர்ந்தவரின் உடல் மீட்பு

October 2, 2026

வங்கதேசத்தில் கால்​வா​யில் மிதந்த டிரம்​மில் இருந்து இந்து மதத்​தைச் சேர்ந்​தரின் உடல் கண்​டெடுக்​கப்​பட்ட சம்​பவம் கடும் அதிர்ச்​சியை ஏற்​படுத்தி உள்​ளது.

download

வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா 2026!

October 2, 2026

வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா கடந்தவாரம் யாழ். முற்றவெளியில் ஆரம்பமாகி யாழ் நகரின் வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது. இப்பகுதியின் பாரம்பரிய

WhatsApp Image 2026-10-02 at 09.10.41

சாகித்யம் நுண்கலைக் கழகத்தில் புதிய மாணவர் சேர்க்கை

October 2, 2026

கொழும்பு, வெள்ளவத்தையில் கர்நாக சங்கீத ஆசிரியை திருமதி சாகித்யா கஜமுகனால் நிர்வகிக்கப்பட்டுவரும் சாகித்யம் நுண்கலைக் கழகத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி

sa

சட்டவிரோத மீன்பிடி; 59 பேர் கடற்படையினரால் கைது

October 2, 2026

ப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சட்டவிரோத மீன்பிடி