இலங்கை அகதிகள் தமிழகத்திலிருந்து நாடு திரும்புவதற்கு விசேட உதவி

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியெழுப்பும் விசேட செயற்றிட்டமான ‘லன்ரேன்’ திட்டத்தை, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்துடன் (UNDP) இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில், புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (IOM) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழுத் தலைவர் திருமதி கிறிஸ்டின் பார்ஸோ, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் இடையிலான விசேட சந்திப்பு, ஆளுநர் செயலகத்தில் நேற்று(10.03.2026) இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில், அண்மையில் ஏற்பட்ட ‘டிட்வா’ பேரிடரால் பாதிக்கப்பட்ட யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு ஐ.ஓ.எம். நிறுவனத்தால் வழங்கப்படவுள்ள உதவிகள் தொடர்பில் ஆளுநருக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.

அவர்களுக்கு எவ்வாறான உதவிகள் வழங்கப்படவுள்ளன என்பது குறித்து விவரிக்கப்பட்டதுடன், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் பெயர்பட்டியலும் ஆளுநரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

இதேவேளை, தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளில் தமது தாய்நாட்டுக்குத் திரும்ப விருப்பம் தெரிவிப்பவர்களுக்கான உதவிகளை வழங்குவது தொடர்பில் ஆளுநர் இதன்போது விசேட கோரிக்கையொன்றை முன்வைத்தார்.

இதற்குப் பதிலளித்த ஐ.ஓ.எம். பிரதிநிதிகள், யு.என்.டி.பி. நிறுவனத்துடன் இணைந்து அடுத்த மாதமளவில் ஆரம்பிக்கப்படவுள்ள ‘லன்ரேன்’ செயற்றிட்டம் தொடர்பில் ஆளுநருக்கு விளக்கமளித்தனர். அத்துடன், அப்புதிய செயற்றிட்டத்தின் ஊடாக, இவ்வாறு நாடு திரும்பும் அகதிகளுக்கான உதவிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த சந்திப்பில், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் ஐ.ஓ.எம். நிறுவனத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

sale

சுரேஷ் சலேவுக்கு எதிராக 3 குற்றச்சாட்டுக்கள்!

March 11, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்

tha

குமார ஜயக்கொடி தொடர்பான வழக்கு தீர்ப்பினை முழு நாடும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது – தலதா அத்துகோரள

March 11, 2026

சட்டத்தின் ஆட்சி, நீதித்துறை சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டுமாயின், நீதித்துறைக்குத் தேவையான கௌரவத்தையும் மரியாதையையும் வழங்குவது மிகவும் அவசியமானதாகும். அந்த

shi

சிறப்பு கப்பல் படை தலைமையக படகுகளுக்கான அணுகல், தேடல் மற்றும் பறிமுதல் நடைமுறைகள் தொடர்புடைய பயிற்சி

March 11, 2026

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகத்தின் மூலம் (United Nations Office on Drugs and

ceb v

20 முதல் 30 சதவீதம் அதிகரிக்கும் மின் கட்டணம்?

March 11, 2026

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் மின் கட்டணங்களை 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டியிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர்

ve

இலங்கை அகதிகள் தமிழகத்திலிருந்து நாடு திரும்புவதற்கு விசேட உதவி

March 11, 2026

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியெழுப்பும் விசேட செயற்றிட்டமான ‘லன்ரேன்’ திட்டத்தை, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்

ch

கொழும்பில் சர்வதேச சிறுவர் புத்தகக் கண்காட்சி மற்றும் இலக்கிய விழா!

March 11, 2026

இலங்கையின் வாசிப்பு கலாசாரத்தை மேம்படுத்தும் நோக்கில், நாட்டில் முதன்முறையாக கொழும்பு சர்வதேச சிறுவர் புத்தகக் கண்காட்சியும் இலக்கிய விழாவும் –

po

அமைதிக்கான அழைப்பு விடுக்கும் பாப்பரசர் லியோ

March 11, 2026

ஈரானிலும் மத்திய கிழக்கு முழுவதிலும் இடம்பெற்று வரும் போரில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திப்போம் என புனித பாப்பரசர் லியோ

Judment

ஊழல் குற்றச்சாட்டு; மஹிந்தானந்தவின் மேன்முறையீடு தீர்ப்பு ஒத்திவைப்பு

March 11, 2026

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் தாக்கல்

ha

சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தைப் பார்வையிட்டார் பிரதமர்

March 11, 2026

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, புதன்கிழமை (11)

arrest

சட்டவிரோத சொத்து சேகரிப்பு; முன்னாள் தலைமை கணக்காளர் ஒருவர் கைது

March 11, 2026

சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டில், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் முன்னாள் தலைமை கணக்காளர் ஒருவரை இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு

g

சர்வதேச எரிசக்தி முகவரகம் எண்ணெய் விடுவிப்புக்கு அனுமதி

March 11, 2026

ஹோர்முஸ் நீரிணை செயலற்ற முறையில் மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகத் தடையைச் சமாளிக்க, 400 மில்லியன் பீப்பாய் எண்ணெயை விடுவிக்க

ceb

மின்சார சபை ஊழியர் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

March 11, 2026

மின்சார சபை ஊழியர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு இன்று (11) கைவிடப்பட்டுள்ளது. மின்சார சபை கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட