சுரேஷ் சலேவுக்கு எதிராக 3 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக 3 பிரதான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (11) நீதிமன்றத்தில் தெரிவித்தது. கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றப் புலனாய்வு திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டது. குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சமர்ப்பித்த 25 பக்கங்கள் கொண்ட மேலதிக […]
குமார ஜயக்கொடி தொடர்பான வழக்கு தீர்ப்பினை முழு நாடும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது – தலதா அத்துகோரள

சட்டத்தின் ஆட்சி, நீதித்துறை சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டுமாயின், நீதித்துறைக்குத் தேவையான கௌரவத்தையும் மரியாதையையும் வழங்குவது மிகவும் அவசியமானதாகும். அந்த வகையில் அமைச்சர் குமார ஜயக்கொடி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பை முழு நாடும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார். கொழும்பிலுள்ள அமாரி ஹோட்டலில் புதன்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இன்று நாட்டிற்குள் எவ்வாறானதொரு சந்தர்ப்பம் உருவாகியுள்ளது […]
சிறப்பு கப்பல் படை தலைமையக படகுகளுக்கான அணுகல், தேடல் மற்றும் பறிமுதல் நடைமுறைகள் தொடர்புடைய பயிற்சி

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகத்தின் மூலம் (United Nations Office on Drugs and Crime – UNODC) திருகோணமலை, சிறப்பு கப்பல் படை தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள படகுகளுக்கான அணுகல், தேடல் மற்றும் பறிமுதல் நடைமுறைகள் தொடர்புடைய பிராந்திய பயிற்சி பாடநெறி மற்றும் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்துவது குறித்த பயிற்சி பாடநெறி வெற்றிகரமாக நிறைவடைந்ததுடன், மேலும் சான்றிதழ் வழங்கும் விழா 2026 மார்ச் 06 ஆம் திகதி சிறப்பு கைவினைப் படை […]
20 முதல் 30 சதவீதம் அதிகரிக்கும் மின் கட்டணம்?

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் மின் கட்டணங்களை 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டியிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்துள்ளார். கொழும்பில் வைத்து அவர் இந்த விடயத்தை அவர் கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கம் வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் அழைக்கப்படும் நிலக்கரி டெண்டரை நான்கு மாதங்கள் தாமதப்படுத்தியுள்ளது. தகுதிகளைத் தளர்த்தி நட்பு நிறுவனங்களுக்கு வாய்ப்பளித்துள்ளது. 42 நாள் டெண்டர் காலம் 21 நாட்களாகக் குறைக்கப்பட்டு செயற்கையான அவசரம் உருவாக்கப்பட்டாலும், டெண்டரை இரண்டு மாதங்கள் […]
இலங்கை அகதிகள் தமிழகத்திலிருந்து நாடு திரும்புவதற்கு விசேட உதவி

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியெழுப்பும் விசேட செயற்றிட்டமான ‘லன்ரேன்’ திட்டத்தை, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்துடன் (UNDP) இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில், புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (IOM) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழுத் தலைவர் திருமதி கிறிஸ்டின் பார்ஸோ, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் தெரிவித்துள்ளார். புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் இடையிலான விசேட சந்திப்பு, ஆளுநர் செயலகத்தில் நேற்று(10.03.2026) இடம்பெற்றுள்ளது. இந்த […]
கொழும்பில் சர்வதேச சிறுவர் புத்தகக் கண்காட்சி மற்றும் இலக்கிய விழா!

இலங்கையின் வாசிப்பு கலாசாரத்தை மேம்படுத்தும் நோக்கில், நாட்டில் முதன்முறையாக கொழும்பு சர்வதேச சிறுவர் புத்தகக் கண்காட்சியும் இலக்கிய விழாவும் – 2026 மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை கொழும்பு இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து […]
அமைதிக்கான அழைப்பு விடுக்கும் பாப்பரசர் லியோ

ஈரானிலும் மத்திய கிழக்கு முழுவதிலும் இடம்பெற்று வரும் போரில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திப்போம் என புனித பாப்பரசர் லியோ தெரிவித்துள்ளார். ஈரான் போரில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று ஈரான், மத்திய கிழக்கு முழுவதிலும் அப்பாவி குழந்தைகள் உட்பட பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என பாப்பரசர் லியோ கவலை தெரிவித்துள்ளார். மேலும், இஸ்ரேலிய தாக்குதல்களால் குறிவைக்கப்பட்ட லெபனான் மக்களையும் நினைவுகூர்ந்தார். அந்நாடு பெரியதொரு சோதனையை கடந்து வருவதாகவும் கூறினார். புதன்கிழமை (11) செயின்ட் […]
ஊழல் குற்றச்சாட்டு; மஹிந்தானந்தவின் மேன்முறையீடு தீர்ப்பு ஒத்திவைப்பு
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் இன்று (11) நிறைவு செய்தது. இதனையடுத்து, இந்த மேன்முறையீடுகளின் மீதான தீர்ப்பு தொடர்பான அறிவிப்பை உயர் நீதிமன்றம் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஐந்து நீதியரசர்களைக் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. […]
சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தைப் பார்வையிட்டார் பிரதமர்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, புதன்கிழமை (11) பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸில் (Los Baños) அமைந்துள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் (IRRI) தலைமையகத்தைப் பார்வையிட்டார். இதன்போது, அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி யுவோன் பின்டோவை (Yvonne Pinto) சந்தித்த பிரதமர், இலங்கையின் நெற்பயிர்ச்செய்கை மற்றும் விவசாயத்துறையின் நிலையான அபிவிருத்திக்காக இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவான கலந்துரையாடல்களை […]
சட்டவிரோத சொத்து சேகரிப்பு; முன்னாள் தலைமை கணக்காளர் ஒருவர் கைது
சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டில், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் முன்னாள் தலைமை கணக்காளர் ஒருவரை இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு இன்று (11) முற்பகல் கைது செய்துள்ளது. இலஞ்ச ஊழல் சட்டத்தின் 23 (அ) (1) பிரிவின் கீழ், 2011.03.31 முதல் 2013.08.03 வரையான காலப்பகுதியில் தனது சட்டபூர்வமான வருமானத்தை மீறி 4,428,305.70 ரூபாய் பெறுமதியான சொத்துக்களைச் சேர்த்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.