கொழும்பில் சர்வதேச சிறுவர் புத்தகக் கண்காட்சி மற்றும் இலக்கிய விழா!

இலங்கையின் வாசிப்பு கலாசாரத்தை மேம்படுத்தும் நோக்கில், நாட்டில் முதன்முறையாக கொழும்பு சர்வதேச சிறுவர் புத்தகக் கண்காட்சியும் இலக்கிய விழாவும் – 2026 மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை கொழும்பு இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் தினேஷ் குலதுங்க இதனை குறிப்பிட்டுள்ளார்

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த நாற்பது ஆண்டுகளில் டிஜிட்டல் ரீதியிலான கவனச்சிதறல்கள் காரணமாக இலங்கையின் வாசிப்பு கலாசாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனை மீளக்கட்டியெழுப்பும் நோக்கோடும், இலங்கையை தெற்காசியாவின் சிறுவர் இலக்கிய மையமாக மாற்றும் கனவோடும் இந்த கண்காட்சியை நாங்கள் முதன்முறையாக முன்னெடுக்கிறோம். இது வெறும் புத்தக விற்பனை சந்தையாக மாத்திரமன்றி, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான இலக்கிய விழாவாகவும் அமையும். மார்ச் 24 முதல் 29 வரை காலை 9.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை இக்கண்காட்சி பொதுமக்களுக்காக திறந்திருக்கும்.

இந்த விழாவின் மற்றுமொரு முக்கிய அங்கமாக புத்தக தானத் திட்டம் அமையும். இதன் மூலம் சபரகமுவ மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் தித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகள் உட்பட மொத்தம் 165 பாடசாலை நூலகங்களுக்கு தலா 3 இலட்சம் ரூபா பெறுமதியான புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன. வாசிக்கும் தேசமே தலைமைத்துவம் வழங்கும் தேசமாக மாறும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.

எனவே, எமது எதிர்கால சந்ததியினரின் அறிவுப் பசியைத் தீர்க்கும் இந்த மகத்தான முயற்சிக்கு ஊடகங்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சங்கத்தின் பொதுச்செயலாளர் லசித உமகிலிய தெரிவிக்கையில்,

சுமார் 26 ஆண்டுகளாக கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியையும், 20 ஆண்டுகளாக கண்டி புத்தகக் கண்காட்சியையும் வெற்றிகரமாக நடாத்தி வரும் எமது சங்கம், தற்போது சிறுவர்களுக்கென பிரத்யேகமாக இந்த சர்வதேச விழாவை வடிவமைத்துள்ளது.

சர்வதேச சிறுவர் புத்தக தினமான ஏப்ரல் 2ஆம் திகதிக்கு இணைவாக இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படுகின்றது. சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் உலகத்தரம் வாய்ந்த இலக்கியங்களை ஒரே கூரையின் கீழ் எமது பிள்ளைகள் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

நிகழ்வின் சிறப்பம்சங்கள் குறித்து ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் தீபால் மொராயஸ் விளக்குகையில்,

இங்கு புத்தகக் கண்காட்சிகளுடன் இணைந்து கதை சொல்லும் அமர்வுகள், எழுத்தாளர்களுடனான சந்திப்புகள், ஆக்கத்திறன் பயிலரங்குகள் மற்றும் பல்வேறு போட்டிகள் இடம்பெறவுள்ளன. குறிப்பாக, மருத்துவர்கள் மற்றும் சிறுவர்களுக்கிடையிலான சந்திப்பு எனும் தொனிப்பொருளில் சுகாதார விழிப்புணர்வு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படும்.

அத்தோடு, பல்கலைக்கழக பட்டப்படிப்பு வரை கல்வி கற்பதற்கு உதவும் வகையில் 20 சிறுவர்களுக்கு தருதிரிய புலமைப்பரிசில் திட்டமும் இங்கு அறிமுகப்படுத்தப்படும் என சுட்டிக்காட்டினார்.

இந்த பாரிய தேசிய முயற்சிக்கு இலங்கையினது முன்னணி நிறுவனங்கள் பல கைகோர்த்துள்ளன. இம்முறை கண்காட்சியினது பிரதான அனுசரணையாளராக எம். டி. குணசேன நிறுவனம் செயற்படுகின்றது. பிளாட்டினம் அனுசரணையாளர்களாக அகுரா, ரத்பிய , ஐ.பி.எம்.சி. , சமுத்ரா, சுபஹா மற்றும் ஜுபெரி ஆகிய நிறுவனங்கள் இணைந்துள்ளன. தங்க அனுசரணையாளர்களாக இமாஷி, ஜோன் கீல்ஸ் மற்றும் தயாவன்ச ஜெயகொடி ஆகிய நிறுவனங்கள் பங்களிப்பு செய்கின்றன.

அத்தோடு, இக்கண்காட்சியினது சிறுவர் செயற்பாட்டுப் பங்காளராக புக் ஸ்டுடியோமற்றும் இலக்கிய விழாப் பங்காளராக ரூம் டு ரீட் அமைப்பும் செயற்படுகின்றன. அச்சு ஊடகப் பங்காளராக வீரகேசரி மற்றும்மிதின ஆகிய நாளிதழ்கள் செயற்படுவதுடன், இலத்திரனியல் ஊடகப் பங்காளராக சேனல் ஒன், ஏ பிளஸ் மற்றும் பாக்ஸ் வானொலி போன்றனவும், உபசரிப்பு பங்காளராக மெக்கீன் நிறுவனமும் இணைந்துள்ளன.

இலங்கையின் சிறுவர் இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையவுள்ள இந்த சர்வதேச சிறுவர் புத்தகக் கண்காட்சியானது, சிறுவர்களின் கற்பனைத் திறனைத் தூண்டுவதோடு, அவர்களிடையே சமூக நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் ஒரு பாலமாக அமையும் என நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அதிதிகள் நம்பிக்கையினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

iran

ஐக்கிய மக்கள் சக்தியின்பொறுப்புகளில் இருந்து விலகிய இரான் விக்ரமரத்ன

April 30, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு மற்றும் நிர்வாகக்

child-abuse-copy

பாடசாலை மாணவிகள் காருக்குள் துஷ்பிரயோகம்; ஆசிரியர் கைது

April 30, 2026

கம்பஹாவில் பாடசாலை மாணவியுடன் முறையற்ற வகையில் செயற்பட்ட ஆசிரியர் அதிசொகுசு கார் ஒன்றுக்குள் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். லக்கல, பக்கமுன

Srith

“நாம் நீலகாமம்” அறவழிப் போராட்டத்துக்கு தமிழரசு கட்சி ஆதரவு

April 30, 2026

“நாம் நீலகாமம்” அறவழிப் போராட்டத்துக்கு நாமும் எமது முழு பங்களிப்பை வழங்குவோம் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் –

ir

ஈரான் மீதான துறைமுக முற்றுகை இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்பு?

April 30, 2026

ஈரான் மீதான துறைமுக முற்றுகை இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ள நிலையில், உலகளாவிய எண்ணெய் சந்தையை நிலைப்படுத்துவது குறித்து

hea

அதிக வெப்பநிலையால் மராட்டியத்தில் 109 பேர் உயிரிழப்பு

April 30, 2026

மராட்டிய மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ள நிலையில், வெப்பத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவகின்றன. மாநில

Sri-Lankan-Parliament-Complex

விரைவில் சமர்ப்பிக்கப்படுகின்றது பாராளுமன்றின் முழுமையான கணக்கறிக்கை

April 30, 2026

8ஆவது மற்றும் 9ஆவது பாராளுமன்ற அமர்வுகளின் நிதிப் பயன்பாடு குறித்து அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய முழுமையான தணிக்கையினை மேற்கொண்டு, அந்த

heat

இன்று அதிக வெப்பநிலை

April 30, 2026

இன்று(30) பல பகுதிகளில் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண், மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது “கவனம் செலுத்த வேண்டிய” மட்டத்தில்

Arrest_1

பெண் வைத்தியர்களை தகாத விதத்தில் வீடியோ பதிவு செய்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கைது!

April 30, 2026

கருத்தரங்கு ஒன்றிற்காக வருகை தந்து நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பெண் வைத்தியர்கள் சிலர் குளியலறையில் நீராடிக்கொண்டிருந்த

anu

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் போனமை தொடர்பாக ஜனாதிபதி விசேட உரை!

April 30, 2026

திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, அரசாங்க நிதிப் பற்றிய குழுவில் ஆஜராக மறுக்கவில்லை என ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்ய

Ha6t

பஸ் விபத்தில் ஒருவர் பலி – 34 பேர் காயம்

April 30, 2026

ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியில் நேற்று(29) பிற்பகல் இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்தோரில் ஒருவர் உயிரிழந்தார். அவர் காயமடைந்து

m5

பெருந்தோட்ட துறைப் பிரதான தொழிற்சங்கங்கள் மே தின கூட்டங்களை நடத்தவில்லை?

April 29, 2026

பெருந்தோட்ட துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தொழிற்சங்கங்கள், இந்த ஆண்டு மே தின பேரணிகளையோ அல்லது பொதுக்கூட்டங்களையோ நடத்துவதில்லை என தீர்மானித்துள்ளன.

arrest

இலங்கையில் பிரான்ஸ் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் கைது

April 29, 2026

பிரான்ஸ் நாட்டு பெண்ணொருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில், வாடகை வாகன சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட