சர்வதேச எரிசக்தி முகவரகம் எண்ணெய் விடுவிப்புக்கு அனுமதி

ஹோர்முஸ் நீரிணை செயலற்ற முறையில் மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகத் தடையைச் சமாளிக்க, 400 மில்லியன் பீப்பாய் எண்ணெயை விடுவிக்க சர்வதேச எரிசக்தி முகவரகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாத்திஹ் பிரோல் அறிவித்துள்ளார். சர்வதேச எரிசக்தி முகவரகம், தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான மூலோபாய எண்ணெய் இருப்புக்களை சந்தைக்கு விடுவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, மொத்தம் 400 மில்லியன் பீப்பாய் எண்ணெய் விநியோகிக்கப்படவுள்ளது. உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைக் குறைப்பதற்கும், எரிபொருள் விலையேற்றத்தைக் […]

மின்சார சபை ஊழியர் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

மின்சார சபை ஊழியர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு இன்று (11) கைவிடப்பட்டுள்ளது. மின்சார சபை கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட புதிய நிறுவனங்களின் நிர்வாகத்திற்கும், ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் கூட்டு ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திடுவது உள்ளிட்ட 8 பிரதான கோரிக்கைகளை முன்வைத்தே கடந்த 9 ஆம் திகதி முதல் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தொழில் ஆணையாளர் மற்றும் புதிய நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஏற்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதாக […]

454 ஆப்பிள் ரக கையடக்கத் தொலைபேசிகள் தொகை பறிமுதல்

சுமார் ஒரு கோடியே 36 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய 454 ஆப்பிள் ரக கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்த மூன்று வெளிநாட்டவர்கள் புதன்கிழமை (11) அன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தின் கிரீன் சேனல் ஊடாக செல்ல முயன்றபோதே, விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மலேசியாவின் கோலாலம்பூரைச் சேர்ந்த 26, 49 மற்றும் 22 […]

இன்று நள்ளிரவு முதல் லாஃப் விலையும் அதிகரித்தது

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப் சமையல் எரிவாயு விலையும் அதிகரித்துள்ளது. 12.5 கிலோ சிலிண்டர் 300 ரூபாய் அதிகரித்து 4,630 ரூபாய் ஆகவும், 5 கிலோ சிலிண்டர் 120 ரூபாய் அதிகரித்து 1,862 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆபத்தான கண்ணிவெடிகளை ஹார்முஸ் ஜலசந்தியில் இறக்கிய ஈரான்!

உலகின் மிக முக்கியமான எரிசக்தி மையங்களில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதியில் ஈரான் ஆபத்தான கண்ணிவெடியை வைத்துள்ளமையினால் அமெரிக்கா பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்டவற்றிற்கு வளைகுடா நாடுகளை நம்பியுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையை தாண்டிய இடத்தில் ஈரான் கண்ணி வெடிகளை வைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனவே “ஈரான் இதுவரை இல்லாத அளவில் கண்ணிவெடிகளை ஹார்முஸ் நீரிணையில் வைத்திருக்கிறது. இது தவிர […]

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அவரது மகள், போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட மூலோபாய க்ரூஸ் ஏவுகணை சோதனைகளை கண்காணித்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அமெரிக்கா–தென் கொரியா இராணுவ பயிற்சிகளுக்கு பதிலடி கொடுப்போம் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ள சூழலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. Korean Central News Agency வெளியிட்ட படங்களில், ஒரு மாநாட்டு அறையில் அமர்ந்திருந்த இருவரும், ஒரு திரையில் Choe Hyon என்ற போர்க்கப்பலில் இருந்து ஆயுதங்கள் ஏவப்படும் காட்சிகளை […]

வடக்கின் பங்களிப்பு தேசிய பொருளாதாரத்தில் 10 சதவீதமாக உயரும்!

இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கு வளமான வடக்கு மாகாணத்தின் பங்களிப்பானது தற்போது 4.5 சதவீதமாகக் கடைசி மட்டத்திலேயே காணப்படுகின்றது, எதிர்வரும் சில ஆண்டுகளில் இப்பங்களிப்பை ஆகக்குறைந்தது 10 சதவீதமாக உயர்த்துவதற்கான இலக்கை நோக்கி நாம் தற்போது தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கியுள்ளோம் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘வடக்கு மாகாண தொழில்முனைவோர் விருதுகள் – 2025’ வழங்கும் விழா, மன்றத்தின் தலைவர் கு.வசீகரன் தலைமையில் நேற்று […]

சிறையில் சுரேஷ் சலேவை கொலை செய்ய சதித் திட்டம்?

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை சிறையில் கொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று (11.03.2026) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் தூசிகள் நிறைந்த சுத்தம் செய்யப்படாத சிறையில் அடைக்கப்பட்டு படுப்பதற்கு ஒரு பாய் கூட வழங்காமல் தரையில் பத்திரிகை விரித்து நித்திரை கொள்கிறார். மேலும் அவர் இருக்கும் சிறை […]

நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் மண்டைதீவு சுற்றுலா மையம் தொடர்பாக முறைப்பாடு

வேலணை – மண்டைதீவு சுற்றுலா மையத்தின் உருவாக்கலில் (எகோ ரூரிசம்) அரச நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் அரச உயர் அதிகாரிகளுக்கு எதிராக கொழும்பு நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதனால் இந்த முறைப்பாடு இன்று (11.03.2026) பதிவு செய்யப்பட்டுள்ளது. மண்டைதீவில் சுற்றுலா அமைச்சினால் அமைக்கப்பட்ட “எக்கோ ரூறிசம்” திட்டம் தோல்வியடைய அன்றிருந்த அரச அதிகாரிகளே காரணம் என குற்றம் சாட்டப்பட்டுவரும் […]

ஒன்டாரியோவில் ஸ்டீவன்சன் ஞாபகார்த்த மருத்துவமனை விரிவாக்கப்பணிகள் ஆரம்பம் – முதல்வர் டக் பேர்ட்

ஒன்டாரியோ அரசு 174 மில்லியன் டொலர் முதலீட்டுடன் ஸ்டீவன்சன் ஞாபகார்த்த மருத்துவமனை (Stevenson Memorial Hospital)புனரமைப்புத் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. மேலும் நியூ டெகம்செத் மற்றும் அதைச் சுற்றியுள்ள சமூகங்களில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீட்டு அருகில் வசதியான மற்றும் உயர்தர சுகாதார சேவையை வழங்கும் அரசின் இலக்கை நிறைவேற்றவும் இது உதவும் என ஒன்டாரியோ முதல்வர் டக் பேர்ட் தெரிவித்துள்ளார். அடுத்த 10 ஆண்டுகளில் ஒன்டாரியோ முழுவதும் 50க்கும் மேற்பட்ட பெரிய மருத்துவமனை […]