கனடா மிசிசாகா பிரதேச திருட்டு விசாரணை; 13 வாகனங்கள் மீட்பு

பீல் பிராந்தியம் – 11 டிவிஷன் தானியங்கிப் பதில் வழங்கிக் குழு (Break and Enter Auto Response Unit)மற்றும் சமூக தலையீடு மற்றும் மறுமொழி குழு (Community Intervention and Response Team) அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் மூலம் திட்டமிட்ட வாகனத் திருட்டு குழுவிடமிருந்து சுமார் $800,000-க்கும் அதிக மதிப்புள்ள 13 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. 2025 அக்டோபரில், பல திருடப்பட்ட வாகனங்கள் தொடர்புடைய ஒரு திட்டமிட்ட குற்றக் குழுவை குறித்து பீல் பிராந்திய காவல்துறையினர் விசாரணையைத் […]
84 ஈரானிய சடலங்களையும் ஒப்படைக்குமாறு உத்தரவு
அமெரிக்கா நீர்மூழ்கி கப்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் இரண்டு குளிர்சாதன பெட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு காலி தலைமை நீதவான் காலியில் உள்ள தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.
டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வோஷிங்டனில் பரபரப்பு

மெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற ‘நேஷனல் மால்’ (National Mall) பகுதியில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் மறைந்த குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் ஆகியோரின் சர்ச்சைக்குரிய சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகப்புகழ் பெற்ற ‘டைட்டானிக்’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஜாக் மற்றும் ரோஸ் கப்பலின் முன்பகுதியில் நிற்பது போன்ற அதே பாணியில், டிரம்ப் மற்றும் எப்ஸ்டீன் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்தபடி இருக்கும் வகையில் இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் […]
நாட்டில் பேக்கரித் தொழில் பாதிப்பு!

நாட்டில் தற்போது டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட எரிசக்தி மூலங்களைப் பெற்றுக்கொள்வதில் பேக்கரித் தொழில்சார்ந்தோர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அரசாங்கம் முறையான வேலைத்திட்டம் ஒன்றினை வகுத்துத் தர வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ள அவர், இவ்வாறான இக்கட்டான சூழலிலும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார். ரத்தொழுகமவில் புதன்கிழமை (11) காலை 10.00 மணியளவில் நடைபெற்ற […]
நாவிதன்வெளியில் விசேட தேவையுடையவருக்கு வாழ்வாதார உதவி

நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் கு. புவனரூபனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், விசேட தேவையுடைய ஒருவருக்கு கோழிக்கூடு மற்றும் கோழிக்குஞ்சுகள் வாழ்வாதார உதவியாக வழங்கி வைக்கப்பட்டன. 2025ஆம் ஆண்டுக்கான பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்தில், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் விசேட தேவையுடையோருக்காக ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி இந்த உதவித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, அன்னமலை 02, குடியிருப்புமுனையைச் சேர்ந்த வீரகுமாரன் சோமசுந்தரம் என்பவருக்கு கோழி வளர்ப்பினை ஊக்குவிக்கும் நோக்கில் நேற்றைய தினம் (10) இவ்வுதவிகள் […]
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முன்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் சார்பாக திருகோணமலை வலய முன்பள்ளி ஆசிரியர்கள் புதன்கிழமை (11) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த ஆசிரியர்கள், பின்னர் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் ஆளுநரிடம் கையளித்தனர்.
யாழ்.கொடிகாமத்தில் பேருந்துக்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இன்று புதன்கிழமை (11) அதிகாலை பேருந்து ஒன்றிற்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து சேவையில் ஈடுபட்டு வரும் இரு தரப்பினரிடையே நிலவிய நீண்டகால முரண்பாடு காரணமாக, பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கொடிகாமம் பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபரின் பணம் மோசடி?

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரின் வங்கி அட்டையை (ATM Card) திருடி, அதிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை எடுத்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் புதன்கிழமை (11) அன்று காலி குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொஸ்கொட பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 9ஆம் திகதி மாலை, ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில், மறுநாள் குறித்த சந்தேகநபரின் […]
சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

இலங்கையில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல் (Leptospirosis) சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், கிட்டத்தட்ட 300 மரணங்கள் சம்பவித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. உலகளவில் எலிக்காய்ச்சல் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதாக தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் துஷானி தாபரேரா சுட்டிக்காட்டியுள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. முன்னதாக 2025ஆம் ஆண்டில் இந்த நோயால் சுமார் […]
இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி; மரத்தன் மாணவன் விழுந்து பலி
புத்தல துட்டுகெமுனு தேசிய பாடசாலையின் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டியின் மரத்தன் ஓட்டத்திற்காக ஏனைய மாணவர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவர் ஒருவர், ஓடிக்கொண்டிருந்த போதே கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் புதன்கிழமை (11) காலை இடம்பெற்றுள்ளது. புத்தல – படல்கும்புரை வீதி, வெஹெர கொட போகஹஎல்ல பகுதியைச் சேர்ந்த, புத்தல துட்டுகெமுனு தேசிய பாடசாலையில் 12ஆம் வகுப்பில் கல்வி பயிலும் டி.எம். மலீஷ சந்தகெலும் (15 வயது) என்ற மாணவனே இவ்வாறு […]