ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிப்பு

மத்திய கிழக்குப் பிராந்தியத்திலுள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் மற்றும் ஏனைய இலக்குகள் மீது ஈரான் புதிய தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளது. எவ்வாறாயினும், ஈரானால் அவ்வாறு ஏவப்பட்ட 7 பலிஸ்டிக் ஏவுகணைகளைத் தாம் அழித்துள்ளதாகச் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இதேவேளை, ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் விமானங்களைத் தமது வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகமும் (UAE) குறிப்பிட்டுள்ளது.

9 மாவட்டங்களில் நன்னீர் மீன்பிடிப் படகுகளின் திருத்தப் பணிகள் நிறைவு!

திட்வா புயலால் நாடு முழுவதிலும் உள்ள மீனவ சமூகத்தின் மீன்பிடிக் கலன்கள் மற்றும் உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதங்களை ஆறு (06) மாதங்களுக்குள் முழுமையாக வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்காக கடற்றொழில் அமைச்சு துரித வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. அமைச்சின் கீழ் இயங்கும் சீ-நோர் (Cey-Nor) மன்றம் மற்றும் நோர்த் சீ (North Sea) நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன. அழிவடைந்த மீன்பிடிப் படகுகளைத் திருத்தியமைத்தல் மற்றும் புதிதாக உற்பத்தி செய்யும் பொறுப்பு சீ-நோர் நிறுவனத்திற்கும், வலைகள் உள்ளிட்ட […]

12,000 இற்கும் அதிகமான மின் தடைகள்!

கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, பேருவளை, புத்தளம் மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் நேற்று (10) பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் மின்சாரத் தடைகள் ஏற்பட்டுள்ளன. இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, நாடளாவிய ரீதியில் 12,000 இற்கும் அதிகமான மின்சாரத் தடைகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை சரிவு

உலகச் சந்தையில் மிக வேகமாக அதிகரித்து வந்த கச்சா எண்ணெய் விலையானது தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக, கடந்த திங்கட்கிழமை ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 2022 ஜூலை மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக 100 அமெரிக்க டொலர்களைக் கடந்ததுடன், அதிகபட்சமாக 119 டொலர்கள் வரை பதிவாகியிருந்தது. இவ்வாறானதொரு பின்னணியில், “போர் மிக விரைவில் முடிவுக்கு வரும்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் […]

ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம்

ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் உணவுப் பொருட்களின் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்றும், அது “வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை தீவிரப்படுத்தும்” என்றும் ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி அமைப்பான UNCTAD கவலை வெளியிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட புதிய அறிக்கையில் UNCTAD பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது: எரிசக்தி, உரம் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயரக்கூடும். இது குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை மேலும் தீவிரப்படுத்தும். UNCTAD இன் […]

இலங்கைத் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள், சமூக வலைதளங்கள் மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தும்போது அறிமுகமில்லாத செய்திகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு அங்குள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான அபாயம் காணப்படுவதால், இலங்கைத் தொழிலாளர்கள் இது குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: “இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கப் படைகள் தொடர்புபட்டுள்ள மத்திய கிழக்குப் போர்ச் சூழல் 11 நாட்களாக நீடித்து வரும் […]

பராமரிப்பு நிலையத்தில் 18 மாதக் குழந்தை குளத்தில் விழுந்து உயிரிழப்பு

பகல்நேர பராமரிப்பு நிலையம் ஒன்றில் இருந்த 18 மாதக் குழந்தை ஒன்று, அங்கிருந்த குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ள சோகமான சம்பவம் பதிவாகியுள்ளது. மெதமுலன, கதமடித்த பிரதேசத்தைச் சேர்ந்த 18 மாதக் குழந்தையான எயோன் தீசர அவிநாத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குழந்தையின் தாய், வழமை போல குழந்தையைப் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு தனது வேலைக்குச் சென்றுள்ளார். பின்னர், குறித்த பராமரிப்பு நிலையத்தின் காப்பாளர் தாயைத் தொடர்புகொண்டு மித்தெனிய காரியமடித்த வைத்தியசாலைக்கு வருமாறு கோரியுள்ளார். அங்கு சென்ற பின்னரே […]

பிராம்டனில் வாகனங்களை திருடிய இளைஞர் கைது

பீல் பிராந்தியத்தின் மத்திய கொள்ளைத் தடுப்பு பிரிவு (Central Robbery Bureau) விசாரணையாளர்கள், பிராம்டனில் இடம்பெற்ற இரண்டு தனித்தனி ரைடு-ஷேர் வாகன பறிமுதல் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளனர். கடந்த மார்ச் 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை வாடிக்கையாளராக நடித்துக் கொண்டு முகமூடி அணிந்திருந்த சந்தேக நபர், கையடக்கத் துப்பாக்கியை காட்டி, ஓட்டுநரை வாகனத்திலிருந்து இறங்குமாறு மிரட்டி, பின்னர் அந்த வாகனத்துடன் தப்பிச் சென்றார். அடுத்து, மார்ச் 2, திங்கட்கிழமை இரவு சுமார் 11:05 மணியளவில், […]

அரசாங்கம் மக்களின் சுமையை மேலும் அதிகரித்திருக்கிறது – யுக்திய கூட்டமைப்பு

அரசாங்கம் நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியதன் மூலம், ஏற்கனவே மக்கள் முகங்கொடுத்திருக்கும் தாங்கமுடியாத சுமையை மேலும் அதிகரிக்கும் வகையில் செயற்பட்டிருப்பது குறித்து யுக்தி கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் உழைக்கும் மக்களின் இயக்கங்களையும் ஜனநாயகத்தையும் நீதியையும் வென்றெடுப்பதற்கு மக்களால் நடாத்தப்படும் போராட்டங்களையும் ஆதரிக்கும் மக்கள் மன்றமான யுக்திய கூட்டமைப்பினால் நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை […]

தோட்டத் தொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய், கோதுமை மாவை மானிய விலையில் வழங்குக

மத்திய கிழக்கு போர்ச் சூழல் தீவிரமடைவதற்கு முன்னரே இலங்கையில் மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு குறித்து எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள பாரிய விலை உயர்வுகள் சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சீர்குலைத்துள்ளதாகவும் விலையேற்றத்தால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய், கோதுமை மாவை மானிய விலையில் வழங்க வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று (10) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு […]