இ.போ.சபைக்கு புதிய கலாசாரத்தைக் கொண்டு வர பாடுபடுவோம்

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, வினைத்திறனான,தொடர்ச்சியான மற்றும் ஒரு பலமான பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை நிறுவுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், அதற்காக அரசாங்கம் தற்போது தேசியக் கொள்கை ஒன்றை உருவாக்கி வருவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். உரிய தரத்துடனான புதிய பஸ்களைச் சேவையில் இணைப்பதற்கும், பழைய பஸ்களைப் படிப்படியாக போக்குவரத்து கட்டமைப்பிலிருந்து நீக்குவதற்குமான திட்டங்களை அரசாங்கம் தற்போது தயாரித்து வருவதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது ஒரே தடவையில் மேற்கொள்ளக் கூடியதல்ல என்றாலும், சில ஆண்டுகள் திட்டமிட்ட […]

140 அமெரிக்க வீரர்கள் காயம் – பென்டகன்

ஈரான் மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் ஆரம்பத்திலிருந்து இதுவரை சுமார் 140 அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் எட்டு பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் பென்டகன் ஊடகப் பேச்சாளர் ஷான் பார்னெல் நேற்று (10) தெரிவித்தார். “Operation Epic Fury ஆரம்பமானது முதல் கடந்த 10 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களில் சுமார் 140 அமெரிக்க இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்” என பார்னெல் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். “காயமடைந்தவர்களில் பெரும்பான்மையானோருக்குச் சிறிய அளவிலான காயங்களே ஏற்பட்டுள்ளன. அவர்களில் 108 பேர் […]

பொருளாதார கண்காணிப்புக் குழு ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது

வெளிவாரியான அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணவும், குடிமக்களின் நலனைப் பாதுகாக்கவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முன்மொழிவுக்கமைய அமைக்கப்பட்ட ‘பொருளாதார கண்காணிப்புக் குழு’, நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சரும் தொழிலமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்ற இக்குழுவின் செயலாளராகவும் அழைப்பாளராகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் (நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள்) ரசல் அபொன்சு செயற்படுகிறார். இக்கூட்டத்தில் மத்திய வங்கி ஆளுநர் […]

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட) சட்டத்தின் பிரகாரம், 2026 மார்ச் 09 ஆம் திகதி முதல் இலங்கை மின்சார சபையின் (CEB) செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக தனியார் நிறுவனங்களிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபியூஷன் லங்கா (EDL) மற்றும் நெஷனல் ட்ரான்ஸ்மிஷன் நெட்வொர்க் சர்விஸ் ப்ரொவைடர் (NTNSP) ஆகிய நிறுவனங்களின் முகாமைத்துவம் அனைத்து ஊழியர்களுக்கும் கடும் உத்தரவை பிறப்பித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அடிப்படைப் பகிர்வுத் திட்டத்தின்படி, அனைத்து மின்சார சபை ஊழியர்களும் உரிய […]

ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய ஆரம்பகட்டத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட தனது தந்தையார் அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகு, கடந்த திங்கட்கிழமை மொஜ்தபா கமேனி புதிய தலைவராகப் பெயரிடப்பட்டார். ஈரானிய மக்களின் இந்தத் தெரிவை வடகொரியா ஆதரிப்பதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மீள்குடியமர்த்தலுக்கான கொடுப்பனவு தொகை அதிகரிப்பு

மண்சரிவு மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக குடும்பங்களை மீளக்குடியமர்த்தல் தொடர்பான வேலைத்திட்டத்தின் கீழ் வீடொன்றை நிர்மாணிப்பதற்கான கொடுப்பனவுத் தொகையை திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மண்சரிவு மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக தமது வதிவிடங்களிலிருந்து வேறு இடங்களில் குடியமர்த்த வேண்டிய குடும்பங்களை அடையாளங் கண்டு மீளக்குடியமர்த்தும் வேலைத்திட்டம், பயனாளியால் வீடொன்றை நிர்மாணித்துக் கொள்ளும் பொறிமுறைக்கமைய அமுல்படுத்தப்படுகின்றது. குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக உயர்ந்தபட்சம் 1.6 மில்லியன் ரூபா அடையாளங் காணப்படுகின்ற குடும்பமொன்றுக்கு வழங்கப்படுவதுடன், இத்தொகையை வீடொன்றுக்கு […]

மொரட்டுவ முன்னாள் மேயரை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கோரிக்கை

‘மக நெகும’ நகர்ப்புற மற்றும் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மொரட்டுவ மாநகர சபையின் 112 அபிவிருத்தி திட்ட ஒப்பந்தங்களுக்கான கொடுப்பனவுகளில் நிதி விதிமுறைகளை மீறி, தனது ஆதரவாளர்களுக்கு பணம் வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பிணையில் இருக்கும் மொரட்டுவை முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவை, வழக்கு முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நேற்று செவ்வாய்க்கிழமை(10) கொழும்பு நீதவான் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தது. இச்சம்பவம் தொடர்பாக […]

தவறான நிர்வாகத்தினால் ஏற்பட்டுள்ள சிக்கல்களை மத்திய கிழக்கு மோதல்களுடன் சுமத்த வேண்டாம் – ஜி.எல்.பீரிஸ்

தவறான நிர்வாகத்தினால் ஏற்பட்டுள்ள சிக்கல்களை அரசாங்கம் மத்திய கிழக்கில் தற்போது தோற்றம் பெற்றுள்ள மோதல் மீது சுமத்தி விட்டு பொறுப்பில் இருந்து விலக முயற்சிக்கிறது. அரசியல் நோக்கமின்றிய வகையில் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, நிமல் சிறிபாலடி சில்வா, லசந்த அழகியவன்ன, ஜீ.எல்.பீரிஸ், அனுர பிரியதர்ஷன யாப்பா உட்பட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து கலந்துரையாடினார்கள். இந்த […]

வெளிநாட்டவர்களுக்கு கட்டண அறவீடின்றி வீசா கால நீடிப்பு!

மத்தியகிழக்கு ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டமையால் பாதிப்புக்குள்ளாகியுள்ள வெளிநாட்டவர்களுக்கு கட்டண அறவீடின்றி வீசாவுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவுகின்ற சூழ்நிலையால் இப்பிராந்தியத்திற்கு 2026.02.28 தொடக்கம் விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டமையால், எமது நாட்டிலிருந்து வெளியேறிச் செல்வதற்கு திட்டமிட்டிருந்த வெளிநாட்டவர்கள் தமது வீசா காலப்பகுதி முடிவடைவதற்கு முன்னர் வெளியேறிச் செல்வதற்கு இயலாமல் போயுள்ளது. இவ்விசேட நிலைமையைக் கருத்தில் கொண்டு, அவ்வாறான பயணிகளுக்கு மாற்று வழிப்பயணங்களை […]

போதைப்பொருளைக் கடத்தி வந்த கனடா நாட்டுத் தம்பதி கைது!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்குப் பெருந்தொகையான ‘குஷ்’ போதைப்பொருளைக் கடத்தி வந்த கனடா நாட்டுத் தம்பதியினர் சுங்கப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கனடாவின் அல்பர்ட்டா பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய கணவன் மற்றும் 29 வயதுடைய மனைவி என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 23 பொதிகளில் அடைக்கப்பட்டு இரண்டு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 32 கோடி ரூபா பெறுமதியான 32 கிலோகிராம் 159 கிராம் எடையுடைய ‘குஷ்’ […]