இந்தியப் படையினர் இலங்கையில் இருந்த காலத்தில் கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,000க்கும் அதிகம்!

இந்திய அமைதிப்படை காலத்தில் கொல்லப்பட்ட அல்லது காணாமலாக்கப்பட்ட பத்தாயிரம் பேர் குறித்த விபரங்களை தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச நீதி மற்றும் உண்மைக்கான திட்டம் வெளியிட்டுள்ளது
இது குறித்து சர்வதேச நீதி மற்றும் உண்மைக்கான திட்டம் மேலும் தெரிவித்துள்ளதாவது.

1980களின் இறுதிப்பகுதியில் இந்திய அமைதிகாக்கும் படை
இலங்கையில் இருந்த காலத்தில் கொல்லப்பட்ட அல்லது காணாமல்போன பத்தாயிரத்திற்கும்
மேற்பட்டவர்களது பெயர்விபரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது வெறும்
எண்ணிக்கையல்ல| இல்லாமலாக்கப்பட்ட மனித உயிர்களின் பதிவாகும். இவர்களில்
பெரும்பாலானவர்கள் தமிழ் ஆண்களாவர்.


‘இந்த வன்முறை டிஜிற்றல் காலத்திற்கு முன்பு இடம்பெற்றது – இதில் பாதிக்கப்பட்டவர்களது
முழுமையான விபரங்கள் ஒருபோதும் கணக்கிடப்படவில்லை, அதிகாரபூர்வமாகப்
பதிவுசெய்யப்படவுமில்லை, வரலாற்றிலிருந்து முற்றிலிலுமாக அழிக்கப்பட்டனர்” என சர்வதேச நீதி மற்றும் உண்மைக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்தார். ‘திட்டமிட்டு அழிக்கப்பட்ட
அடையாளங்களை மனித கண்ணியத்துடன் மீட்டெடுப்பதே நாம் இப்போது
செய்துகொண்டிருக்கும் பணியாகும்.”

இந்திய அமைதி காக்கும்படை, இலங்கை அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்பட்ட இருதரப்பு
உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தமிழ்
ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களைக் களைவதற்காக 1987ஆம் ஆண்டு ஒக்ரோபரில்
இலங்கைக்கு அனுப்பப்பட்டு, 1990 மார்ச் வரை அங்கே இருந்தது. இக்காலப்பகுதியில், இலங்கை
இராணுவம் முகாம்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இந்தியப் படையினரும்
அவர்களுடன் இணைந்து செயற்பட்டவர்களும் பல கூட்டுப்படுகொலைகள், கொலைகள்,
சட்டத்திற்கு முரணான படுகொலைகள், வலிந்த காணாமல் ஆக்கப்படுதல் போன்ற உட்பட
பரவலானதும் திட்டமிட்டதுமான துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டதாக நம்பகரமான
குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இங்கே பட்டியலிடப்பட்டவர்கள் அனைவருமே இந்தியப்
படைகளாலும் அவர்களுடன் இணைந்து செயற்பட்டவர்களாலும் மட்டும்
பாதிக்கப்பட்டவர்களல்ல என்றபோதிலும், இந்தத் தரவுகளின் தொகுப்பானது, இந்தியப்படைகள்,
அவர்களுடன் இணைந்து செயற்பட்டவர்கள், மற்றும் இலங்கையின் தமிழ் ஆயுதக்குழுக்கள்
உட்பட பல தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட பாரதூரமான வன்முறைகளின் ஒரு
அமைப்புசார் வடிவத்தினை வெளிப்படுத்துகின்றது. பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களும்,
அதற்குப் பொறுப்புக்கூறல் இன்மையும் மறுக்கப்படமுடியாத ஒன்றாகும்.

இந்தத் தரவுத்தளம் அன்றைய காலப்பகுதியில் பெறப்பட்ட சத்தியப்பிரமாணங்கள், அரச சார்பற்ற
அமைப்புக்களின் அறிக்கைகள், குடும்ப உறுப்பினர்களிடமிருந்து நேரடியாகப் பெறப்பட்ட
தகவல்கள், சரிபார்க்கப்பட்ட ஊடக அறிக்கைகள் ஆகியவற்றிலிருந்து
பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் – சர்வதேச மனித உரிமைகள் ஆவணப்படுத்தல் நியமங்களை
நிவர்த்தி செய்யத்தக்க வகையிலும், அவற்றிற்கு அமைவாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரதேசம், பாலினம், காலப்பகுதி, இனம் ஆகியவற்றின் அடிப்படையில் பெயர்களை தேடும்
வகையிலும் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
‘இது ஒரு உயிருள்ள ஆவணக் களஞ்சியம். குடும்பங்களே இச்செயற்பட்டின் மையமாக
உள்ளனர் – சாட்சிகளாக மட்டுமன்றி, உண்மையின் பாதுகாவலர்களகவும் அவர்கள்
உள்ளார்கள்” இவ்வாறு இச்செயற்றிட்டத்திற்கு ஆலோசகராகச் செயற்பட்ட மனித உரிமைகள்
தரவு ஆய்வுக்குழுவைச் சேர்ந்த மிசேல் டுகிச்
தெரிவித்தார்.
‘முப்பது வருடங்கள் கடந்துவிட்டன, இனி கேள்வி என்ன நடந்தது என்பதல்ல. மாறாக எதற்காக
யாரையும் பொறுப்புக்கூறலுக்கு உள்ளாக்கவில்லை – இன்னும் எத்தனை காலம்தான்
தண்டனையின்மை நீடிக்க அனுமதிக்கப்படும் என்பதே கேள்வி” என யஸ்மின் சூக்கா
தெரிவித்தார்.

 

 

trai

ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு; வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு!

May 31, 2026

வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதியதே

vick

பிரான்ஸில் சேம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வன்முறை: 400 பேர் கைது

May 31, 2026

சேம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நாட்டின் ஆர்செனல் அணியை வீழ்த்தி, பிரான்ஸின் பிஎஸ்ஜி (பாரீஸ் ஜெயண்ட் ஜெர்மன்) அணியினர்

Breast can

இலங்கையில் மார்பகப் புற்றுநோயை கண்டறியும் அதிநவீன இயந்திரங்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

May 31, 2026

நாட்டில் மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும், சிகிச்சைக்குப் பின்னரான பராமரிப்பை மேம்படுத்துவதற்கும், வைத்தியசாலைகளில் நிலவும் நீண்ட காத்திருப்புப் பட்டியல்களைக் குறைக்கும்

arre

மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை மேலே தூக்கி அதிரடி காட்டிய ’பைக் ரேஸர்கள்’ கைது!

May 31, 2026

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில், கதான மற்றும் வெலிகம்பிட்டிய இடைப்பட்ட பகுதியில், மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை மேலே

pala

பலாலி வீதியூடான போக்குவரத்து மேலும் ஒரு மணி நேரம் நீடிப்பு

May 31, 2026

வெசாக் தினத்தில் இருந்து பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு இராணுவத்தினர் மேலும் ஒரு மணி நேரத்தை நீடித்துள்ளனர். பலாலி வீதியில்

ble

‘நீல நிலா’ இன்றிரவு வானில் தோன்றும் அதிசயம்

May 31, 2026

இன்று (31) வானில் அரிய விண்வெளி நிகழ்வான ‘நீல நிலா’ (புளூ மூன்) தோன்ற உள்ளது. பொதுவாக ஒரு மாதத்தில்

canada road11

மிசிசாகாவில் உள்ள 401 நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் பெண் பலி

May 31, 2026

சனிக்கிழமை இரவு மிசிசாகாவில் உள்ள 401 நெடுஞ்சாலையில் (Highway 401) ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஒருவர்

canada police2555

‘நெஞ்சை உலுக்கும் சம்பவம்’: டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சாலையைக் கடந்த பாதசாரி விபத்தில் பலி

May 31, 2026

டொராண்டோவின் எக்லிண்டன் அவென்யூ வெஸ்ட்டில் (Eglinton Ave. West) வாகனம் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்தது குறித்து டொராண்டோ காவல்துறை

accused

மரண வழக்கின் விசாரணைக்காக காத்திருந்த நபர் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக (Stunt Driving) மீண்டும் வழக்குப்பதிவு

May 31, 2026

2024 ஆம் ஆண்டு நடந்த விபத்து மரண வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக காத்திருக்கும் உட்ஸ்டாக் (Woodstock) நகரைச்

photo-collage.png (42)

அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதும் தமிழ்த் தேசியத்தை அழிக்க முயன்றதும் ராஜபக்ச ஆட்சிக்காலம் தான்!

May 31, 2026

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள் தமிழ்த் தேசிய

water

கடல் அலையில் சிக்கி மாயமான மூன்று மாணவர்களும் இன்று சடலங்களாக மீட்பு!

May 31, 2026

அம்பாந்தோட்டை – ஹுங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களமெட்டிய கடற்பகுதியில் நேற்று(30.05.2026) நீராடிக் கொண்டிருந்த போது இராட்சத அலையில் சிக்கி இழுத்துச்

ssasee

ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயல்களில் பொலிஸார் ஈடுபடுகின்றார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

May 31, 2026

பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும் என