சென்னை:
தமிழ்நாட்டில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றியை முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுடன் வைரல் சைகை காட்டிக் கொண்டாடியுள்ளார்.
அபார வெற்றி:
காலியாக இருந்த 7 தொகுதிகளில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்குக் கடந்த 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில், மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 19,303 வாக்குகள் வித்தியாசத்திலும், தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமா 9,471 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
வைரல் சைகை கொண்டாட்டம்:
இந்த மாபெரும் வெற்றியைத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் அருண்ராஜ் ஆகியோருடன் கொண்டாடினார். அப்போது சட்டமன்றத்தில் அவர் காட்டிய வைரல் சைகையை மீண்டும் அமைச்சர்களுடன் இணைந்து காட்டியுள்ளார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
#CMVijay #TVK #ByelectionVictory #ViralGesture #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive