கொழும்பிற்கு இடமாற்றலாகிச் செல்லும் யாழ்ப்பாண மாவட்டத்தின் 512 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேட் கொமாண்டர் ருவான் குணரத்ன அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம்
(04.05.2026) காலை 11.00 மணிக்கு மரியாதை நிமித்தம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இக் கலந்தரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. க.சிவகரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா. ஜெயகரன், மாவட்ட பிரதம கணக்காளர் திரு. எஸ். கிருபாகரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு. இ சுரேந்திரநாதன், மாவட்ட செயலாளர் செல்வி உ.தர்ஷினி ஆகியோர் உடனிருந்தார்கள்.