இடமாற்றம் என்ற பெயரில் வடக்கு மாகாணக் கல்வி அழிக்கப்படுகின்றது!

வடமாகாணத்தில் சேவையின் தேவை கருதி இடம்மாற்றம் என்ற பெயரில் கல்வியை மோசமாகப் பாதிக்கும் வகையில் செயற்பாடுகள் அமைந்துள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(21) நடைபெற்ற அமர்வின் போது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அவர், வட மாகாணத்தில் “சேவையின் தேவை கருதிய இடமாற்றம்” என்ற பெயரில் கல்வி துறையை பாதிக்கும் வகையில் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும் தெரிவிக்கையில், இடமாற்றங்கள் பின்வரும் சந்தர்ப்பங்களிலேயே மேற்கொள்ள முடியும்

1. வருடாந்த இடமாற்றம்

2. சேவையின் அவசிய தேவை (Exigencies of service)

3. ஒழுக்காற்று நடவடிக்கை ஆகிய தருணங்களிலேயே இடமாற்றம் மேற்கொள்ள முடியும்.

சேவையின் அவசிய தேவை (Exigencies of service) கருதிய இடமாற்றம் கீழ்வரும் மூன்று சந்தர்பங்களிலேயே மேற்கொள்ளப்பட முடியும்.

• ஒரு ஆசிரியரது தேவை மிக அவசரமாகத் தேவையடுமிடத்தில்

• குறித்த ஆசிரியரது சேவையே குறித்த பாடசாலைக்குத் தேவைப்படுமிடத்து

• ஓரு ஆசிரியரை குறித்த நிலையத்தில் வைத்திருப்பதால் அவரால் பிரச்சினை வளர்கிறது. என்னும் நிலை இம் மூன்று காரணம் இருந்தால் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அழிக்கப்படும் வடக்கு மாகாணக் கல்வி – சபையில் அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார் எம்.பி | Northern Province Education Being Destroyed

ஆனாலும் வடக்கு மாகாண கல்வி அதிகாரிகளால் ஆசிரியர் தொழிற் சங்கங்களுடனான கலந்துரையாடலோ, அச்சங்கங்களின் பங்களிப்புகளோ இன்றி, பெருந்தொகை ஆசிரியர்களுக்கு வடமாகாண கல்வி அதிகாரிகளால் ‘சேவையின் தேவை கருதிய இடமாற்றம்’ என்ற அடிப்படையில் 193 ஆசிரியர்களுக்கு ஜனநாயக விரோதமானதும், சர்வாதிகாரமான முறையிலும் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் தாபன விதிக்கோவையின் அத்தியாயம் IIi பிரிவு 3.3 இன் பிரகாரம் “இடமாற்றத்தக்க 25 அல்லது அதனிலும் கூடிய தொகையினரைக் கொண்ட பணியாளர்கள் உள்ள ஒவ்வொரு திணைக்களத்திலும் இடமாற்றச்சபை ஒன்றோ அதற்கு மேற்பட்டனவோ நிறுவப்படவேண்டும் என்று 2013.07.03ம் திகதிய 1817/30 ம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்ட வடக்கு மாகாண அரச சேவைக்கான தாபன நடைமுறை ஒழுங்கு விதிக்கோவையின் 188 வது பிரிவில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டு வடமாகாண ஆளுநரால் 25 ற்கும் மேற்பட்ட இடமாற்றங்கள் இடமாற்ற சபையின் தீர்மானத்தை மீறி தன்னிச்சையாக நிறுத்தப்பட்டிருந்தன.

ஏற்கனவே வெளிமாவட்ட சேவைக்கு ஒத்த தீவகம், வடமாராட்சி கிழக்கு போன்ற பகுதிகளில் பணியாற்றியோருக்கு இடமாற்றச் சபை கூட்டப்படாமல் சட்டவிரோதமான 2026 இல் தன்னிச்சையாக இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்ட பல ஆசிரியர்களை குறித்த பாடசாலைகளிலிருந்து வடமாகாண கல்வி அதிகாரிகள் இன்னும் விடுவிக்கவில்லை.

சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் மேன்முறையீடுகளின் பரிசீலனையும் அரசியல்தலையீடு, பாரபட்சங்கள், பழிவாங்கல் எண்ணம் கொண்ட வகையிலேயே வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம், பாதிக்கப்பட்ட பல ஆசிரியர்களின் அடிப்படை உரிமைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு, ஆசிரியர்களினதும், அவர்களை தங்கிவாழ்வோரதும் வாழும் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

trai

ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு; வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு!

May 31, 2026

வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதியதே

vick

பிரான்ஸில் சேம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வன்முறை: 400 பேர் கைது

May 31, 2026

சேம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நாட்டின் ஆர்செனல் அணியை வீழ்த்தி, பிரான்ஸின் பிஎஸ்ஜி (பாரீஸ் ஜெயண்ட் ஜெர்மன்) அணியினர்

Breast can

இலங்கையில் மார்பகப் புற்றுநோயை கண்டறியும் அதிநவீன இயந்திரங்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

May 31, 2026

நாட்டில் மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும், சிகிச்சைக்குப் பின்னரான பராமரிப்பை மேம்படுத்துவதற்கும், வைத்தியசாலைகளில் நிலவும் நீண்ட காத்திருப்புப் பட்டியல்களைக் குறைக்கும்

arre

மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை மேலே தூக்கி அதிரடி காட்டிய ’பைக் ரேஸர்கள்’ கைது!

May 31, 2026

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில், கதான மற்றும் வெலிகம்பிட்டிய இடைப்பட்ட பகுதியில், மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை மேலே

pala

பலாலி வீதியூடான போக்குவரத்து மேலும் ஒரு மணி நேரம் நீடிப்பு

May 31, 2026

வெசாக் தினத்தில் இருந்து பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு இராணுவத்தினர் மேலும் ஒரு மணி நேரத்தை நீடித்துள்ளனர். பலாலி வீதியில்

ble

‘நீல நிலா’ இன்றிரவு வானில் தோன்றும் அதிசயம்

May 31, 2026

இன்று (31) வானில் அரிய விண்வெளி நிகழ்வான ‘நீல நிலா’ (புளூ மூன்) தோன்ற உள்ளது. பொதுவாக ஒரு மாதத்தில்

canada road11

மிசிசாகாவில் உள்ள 401 நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் பெண் பலி

May 31, 2026

சனிக்கிழமை இரவு மிசிசாகாவில் உள்ள 401 நெடுஞ்சாலையில் (Highway 401) ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஒருவர்

canada police2555

‘நெஞ்சை உலுக்கும் சம்பவம்’: டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சாலையைக் கடந்த பாதசாரி விபத்தில் பலி

May 31, 2026

டொராண்டோவின் எக்லிண்டன் அவென்யூ வெஸ்ட்டில் (Eglinton Ave. West) வாகனம் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்தது குறித்து டொராண்டோ காவல்துறை

accused

மரண வழக்கின் விசாரணைக்காக காத்திருந்த நபர் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக (Stunt Driving) மீண்டும் வழக்குப்பதிவு

May 31, 2026

2024 ஆம் ஆண்டு நடந்த விபத்து மரண வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக காத்திருக்கும் உட்ஸ்டாக் (Woodstock) நகரைச்

photo-collage.png (42)

அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதும் தமிழ்த் தேசியத்தை அழிக்க முயன்றதும் ராஜபக்ச ஆட்சிக்காலம் தான்!

May 31, 2026

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள் தமிழ்த் தேசிய

water

கடல் அலையில் சிக்கி மாயமான மூன்று மாணவர்களும் இன்று சடலங்களாக மீட்பு!

May 31, 2026

அம்பாந்தோட்டை – ஹுங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களமெட்டிய கடற்பகுதியில் நேற்று(30.05.2026) நீராடிக் கொண்டிருந்த போது இராட்சத அலையில் சிக்கி இழுத்துச்

ssasee

ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயல்களில் பொலிஸார் ஈடுபடுகின்றார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

May 31, 2026

பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும் என