ஆகஸ்ட் 30: சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழில் மாநாடு!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுக்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பில் பொதுக் கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை (14) நடைபெற்றது.

எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சர்வதேச மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாநாட்டுக்கு வலுச்சேர்க்கும் வகையிலும், மாநாட்டுக்கான பொதுமக்கள், அரசியல் பிரதிநிதிகள், மதகுருமார் மற்றும் சிவில் சமூகத்தினரின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த பொதுக் கலந்துரையாடல் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவி அ. அமலநாயகி தலைமையில் மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இக்கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், ஞா. சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் ச. சிவயோகநாதன், மதகுருமார், அமெரிக்கன் மிஷன் அருட்தந்தை டேவிட், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலின்போது சர்வதேச மாநாடு தொடர்பான முக்கிய விடயங்கள் பகிரப்பட்டதுடன், மாநாட்டை மேலும் வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகளும் பெறப்பட்டன.

மாநாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு அனைவரினது ஒத்துழைப்பும் ஆதரவும் கோரப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசின் உள்ளகப் பொறிமுறைகளில் நம்பிக்கை இழந்துள்ள நிலையில், சர்வதேச நீதிப் பொறிமுறையின் அவசியத்தை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்வதே இம்மாநாட்டின் பிரதான நோக்கமாகும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

விசாரணைக்காகவும், பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படுவதாகவும் கூறி அரச அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இலங்கை அரசு இதுவரை உரிய பொறுப்புக்கூறலை முன்னெடுக்கத் தவறியுள்ளது. இதனாலேயே தாம் சர்வதேச நீதியை வலியுறுத்தி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் தலைவி அ. அமலநாயகி தெரிவித்தார்.

மேலும், தமது உறவுகளைத் தேடி நீண்டகாலமாகப் போராடி வந்தவர்களில் 600க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அவர்களின் போராட்டங்களும், சாட்சியங்களும் எதிர்கால சந்ததியினருக்கும் சர்வதேச சமூகத்திற்கும் சென்றடையும் வகையில், உயிரிழந்த உறவுகளின் சாட்சியங்களைப் பதிவு செய்து நூல் வடிவில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், “அழிக்கப்பட்ட சாட்சியங்கள்” என்ற தலைப்பிலான நூல் ஒன்றையும், இதுவரை தமது போராட்டங்களின் ஊடாக முன்வைக்கப்பட்ட அறிக்கைகளைத் தொகுத்து மற்றுமொரு நூலாகவும் வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சர்வதேச மாநாட்டில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் சிறப்புரைகள், ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை உள்ளடக்கிய கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுடன் பேரணிகளும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பல ஆண்டுகளாக எதிர்கொண்டுவரும் வலிகளையும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துரைக்கும் முக்கிய தளமாக இம்மாநாடு அமைய வேண்டும் எனவும் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.

இம்மாநாட்டில் அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்த பொதுமக்கள், அரசியல் பிரதிநிதிகள், மதகுருமார், சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பங்கேற்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் நீதிக்கான போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.

“நடைபெற்ற அநீதிக்கு சர்வதேச நீதி வேண்டும்” என்ற கோரிக்கையை வலுப்படுத்தும் வகையில், எதிர்வரும் ஆகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டில் அனைவரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

vikatan_2024-10-04_jsw1i91t_WhatsApp-Image-2023-12-26-at-1.12.38-PM

“சாலைகளில் ரத்த ஆறு ஓடுகிறது… விஜய் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!” – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் கடந்த ஐந்து மாதங்களாகச் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2

“நிரந்தர முதல்-அமைச்சராக விஜய் இருப்பார்!” – அமைச்சர் என்.ஆனந்த் அதிரடிப் பேச்சு!

October 9, 2026

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மண்டல மாநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்

parliment

உயர் நீதிமன்றத் தீர்மானம் அறிவிப்பு!

October 9, 2026

நச்சுக்கள், அபின்கள் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் இரண்டு திருத்தச் சட்டமூலங்களையும் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என

thu

சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில் புத்தசாசனத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்க முடியாது!

October 9, 2026

சிறைச்சாலையிலுள்ள கலபொடஅத்தே ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சம்பவமானது மிகவும் பாரதூரமானது என ‘தேசத்தைக் காக்கும்

kal

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

October 9, 2026

களுத்துறை, நாகொட பகுதியில் உணவகம் ஒன்றில் இன்று (9) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில்

images - 2026-10-09T112650.899

“மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக தொடர்ந்து முன்னிலை!” – வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு

October 9, 2026

தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று

tvkmadhuranthagam-down-28521791085533

“மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல் முடிவுகள் – 11 மணி நிலவரம்!” – தவெக வேட்பாளர்கள் முன்னிலை!

October 9, 2026

சென்னை: தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக