செம்மணி மனித புதைகுழி: மேலும் 8 எலும்புக்கூடுகள்; மொத்தமாக 562 அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்களுக்கு முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், 53 ஆவது நாளான இன்றைய தினம் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 10 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், செம்மணியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 107 நாள் அகழ்வுப் பணிகளின் போது, மொத்தமாக 562 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 557 எலும்புக்கூடுகள் இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்து?

கசின் சிறைச்சாலையின் சிறை அதிகாரிகள் பற்றிய தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்ட குரல் பதிவுகள் அடங்கிய கையடக்கத் தொலைபேசியுடன், சந்தேகநபர் ஒருவர் பொரல்லை, வனாத்தமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டதாக சஹஸ்புர பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரிடம் இருந்து 5 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறைச்சாலை வளாகத்துக்குள் போதைப்பொருள் அடங்கிய பந்துகளை தயாரித்து வீசுவதில் பிரபலமான “பந்து சுரேஷ்” என்பவருக்குச் சொந்தமான பொரல்லை, வனாத்தமுல்ல பகுதியில் உள்ள வீட்டில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் […]

மசகு எண்ணெய் விலையைக் குறைப்பதுதான் முதல் இலக்கு

ஈரான் மீதான போரில், மசகு எண்ணெய் விலையைக் குறைப்பதுதான் முதல் இலக்கு என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார். ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிராக, கடந்த பெப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து ஈரானின் முக்கிய நகரங்களின் மீது நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையே போர் வெடித்த நிலையில், கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான அமைதி ஒப்பந்தத்தை […]

நகைக்கடை ஒன்றில் பாரிய தீ

வத்தளை – மஹாபாகேவில் உள்ள நகைக்கடை ஒன்றில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டிருந்தது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்புச் சேவையின் 2 தீயணைப்பு வாகனங்கள் விரைவாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு, தீப்பரவல் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் எவருக்கும் உயிர் ஆபத்தோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் விசேட கவனம்?

இலங்கையின் ஜனநாயக ஆட்சி முறைமை, அரசியலமைப்பு ரீதியான கட்டமைப்பு மற்றும் அரச நிறுவனங்களின் சுயாதீனம் ஆகியவற்றை பாதுகாப்பது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அழைப்பின் பேரில் கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் சர்வதேச பிரதிநிதிகளுடனான உயர்நிலைச் சந்திப்பொன்று நடைபெற்றது. இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தூதுவராலயங்களின் பிரதானிகள், தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் இராஜதந்திரிகளுடன் அண்மையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். மேல்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை […]

(no-name)

இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை (15) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவரின் வாசஸ்தலத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டு, சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன. இன்று காலை 9 மணியளவில் இந்திய தேசியக் கொடியை துணைத் தூதர் சாய் முரளி ஏற்றிவைத்தார். அதனை தொடர்ந்து, சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவரின் வாழ்த்துச் செய்தியை துணைத் தூதர் வாசித்தார். இந்த நிகழ்வில் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், […]

தற்போதைய காலநிலை குறித்து எச்சரிக்கை

ட்டின் சில பகுதிகளில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் கனமழையுடன் கூடிய வானிலை மாற்றங்கள் காரணமாக குழந்தைகளிடையே நோய் பரவுவதற்கான அதிக வாய்ப்புள்ளதாக குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா கூறியுள்ளார். நிலவும் கடும் வெப்பத்தால் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படக்கூடும் என்றும், எனவே அதிக தண்ணீர் அருந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, ஒரு சராசரி வயது வந்தவர் ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்துமாறும் […]

கிழக்கு ஜப்பானில் வரலாறு காணாத கனமழை

கிழக்கு ஜப்பானின் சிபா மாகாணத்தில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டோக்கியோவை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை நீடித்து வருகிறது. வழக்கமாக ஒகஸ்ட் மாதத்தில் பெய்யும் மழையின் அளவை விட 3 மடங்கு அதிகமான மழை வெறும் அரை நாளில் பதிவாகியுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழை வெள்ளம் காரணமாக […]

அங்குலானவில் விபத்துக்குள்ளான படகில் இருந்த 11 பேர் மீட்பு

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகில் இருந்த 11 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா (Dora) படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, அந்தப் படகில் உள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடற்படையினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, குறித்த படகில் உள்ளவர்களை மீட்பதற்காக இலங்கை விமானப்படையின் உதவியும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, விபத்துக்குள்ளான படகைக் கண்காணிப்பதற்காக விமானப்படைக்குச் சொந்தமான எம்.ஐ. […]

மன்னார் மடு தேவாலய ஆவணித் திருவிழா!

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் மடு தேவாலயத்தின் ஆவணித் திருவிழா திருப்பலி இன்று காலை 6 மணியளவில் ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் தலைமையில் இந்த திருப்பலி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பதுளை மறைமாவட்ட ஆயர் யூட் நிஷாந்த சில்வா, மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் நோபட் அன்ராடி […]