வத்தளை – மஹாபாகேவில் உள்ள நகைக்கடை ஒன்றில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்புச் சேவையின் 2 தீயணைப்பு வாகனங்கள் விரைவாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு, தீப்பரவல் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் எவருக்கும் உயிர் ஆபத்தோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.