சென்னை:
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடியைத் தந்துள்ளதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
பணநாயக ஃபார்முலாக்கள் முறியடிப்பு:
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வாக்குகளுக்கு ஒரு பைசா கொடுக்காமல், யாரையும் பட்டியில் அடைத்து அவமானப்படுத்தாமல், திருமங்கலம், ஈரோடு கிழக்கு ஃபார்முலா என்று எந்த ஃபார்முலாவும் இல்லாமல் அன்பு மற்றும் ஜனநாயகம் காக்கும் ஃபார்முலாவை வைத்து வென்ற தேர்தல் இது. பணநாயகச் சூத்திரத்தையே அடித்து நொறுக்கிப் பெற்றுள்ள வெற்றியே இது,” எனப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மிருக குணப் பேச்சுக்குப் பதிலடி:
“கண்டகண்ட பேரங்கள் நடந்ததாக அவதூறு பேசிய மிருகக் குணப் பேச்சுக்கு எல்லாம் மக்கள் தகுந்த பதிலடியைத் தரமாகத் தந்துள்ளனர். 2 தொகுதிகளிலும் நான் 2 நாட்கள் பிரசாரம் செய்ததை நையாண்டி செய்தவர்களுக்கும் மக்கள் பதிலடி தந்துள்ளனர்,” என அவர் சாடியுள்ளார்.
கூட்டணிக்கு நன்றி:
தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள அவர், வெற்றிக்கு உழைத்த காங்கிரஸ், விசிக, மதிமுக, முஸ்லிம் லீக் தலைவர்களுக்கும், வாக்காளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைக் கூறியுள்ளார். இது பெண்கள் மீதான அவதூறுப் பேச்சுக்கும், தனிப்பட்ட தாக்குதல்களுக்கும் எதிராக ஒட்டுமொத்த மக்களுக்கும் கிடைத்த வெற்றி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#CMVijay #TVK #ByelectionVictory #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive