அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடரவேண்டும் – சமிந்த விஜேசிறி

குறைந்த விலைக்கு கொண்டுவந்த எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டும். ஒரு மாதத்துக்கு தேவையான எரிவாயு இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையியிலே தற்போது எரிவாயு விலையை அதிகரித்து மக்களை நடுத்தெருவிற்கு கொண்டுவந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (11) நடத்திய செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகாெண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

மத்திய கிழக்கில் யுத்த நிலை ஏற்பட்டுள்ள நிலையில், எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளது. என்றாலும் எமது நாட்டில் ஒரு மாதத்துக்கான எரிபொருட்கள் கைவசம் வைத்திருப்பதாகவும் இப்போதைக்கு விலை அதிகரிப்பு மேற்கொள்ளத் தேவைப்படாது எனவும் ஜனாதிபதி கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இதனை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவரும் நாட்டுக்கு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அரசாங்கம் திடீரென் எரிபொருட்களின் விலையை அதிகரித்திக்கிறது. அப்படியாயின் அரசாங்கம் கையிருப்பில் வைத்திருந்த எரிபொருட்களுக்கே அரசாங்கம் விலை அதிகரித்திருக்கிறது. குறைந்த விலைக்கு கொண்டுவந்த எரிபொருளை, அதிக விலைக்கு விற்பனை செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட இந்த அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டும்.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதுை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதிகரித்த விலைக்கு எரிபொருளை இறக்குமதி செய்திருந்தால், அதன் விலையை அதிகரிப்பது தொடர்பில் நாங்கள் அரசாங்கத்துக்கு குற்றம் சாட்டுவதில்லை. ஆனால் தற்போது அதிகரித்திருப்பது, கையிருப்பில் இருந்த எரிபொருட்களுக்காகும்.

அதேபோன்று எரிவாயு விலையை நேற்று முதல் அரசாங்கம் அதிகரித்திருக்கிறது. ஒரு மாதத்துக்கு தேவையான 8ஆயிரம் மெட்ரிக் தொன் எரிவாயு கைவசம் இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

அப்படியாயின் தற்போது எரிவாயு விலை அதிகரித்திருப்பதும் கைவசம் இருந்த எரிவாயு தொகைக்காகும். அரசாங்கத்தின் இந்த விலை அதிகரிப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த விலை அதிகரிப்பு சட்ட விராேத நடவடிக்கையாகும்.இந்த நடவடிக்கையை மேற்கொண்ட அரசாங்கத்தின் அமைச்சர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும். கடந்த கால அரசாங்கங்களை குறைகூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தில் இவ்வாறான நடவடிக்கைகளை மக்கள் எதிர்பார்க்கவில்லை.

அரசாங்கம் கறுப்புக்கடை வியாபாரிகள் போன்று செயற்பட்டு, எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளை அதிகரித்து, பாரிய லாபத்தை அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்று கறுப்பு கடை முதலாளிமார்கள் போன்று செயற்படுகிறது.

இவர்கள் எதனை செய்வதில்லை என தெரிவித்தார்களோ அதனை செய்கிறார்கள். மின்சார சபையை தனியார் மயமாக்கப்போவதில்லை என்றார்கள். அதனை தற்போது செய்திருக்கிறார்கள்.

தரம் குறைந்த நிலக்கரி கொண்டுவருவதில்லை என்றார்கள். தற்போது அதனை செய்திருக்கிறார்கள். அதனால் அரசாங்கம் செய்வதில்லை என மக்களுக்கு வாக்குறுதியளித்த அனைத்து விடயங்களையும் இன்று செய்துவருகிறது. அதனால் தொடர்ந்தும் மக்கள் இந்த அரசாங்கத்தை நம்பப்போவதில்லை என்றார்.

ham

 சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் : 2 இந்தியர்கள் பலி?

March 12, 2026

ஹார்மூஸ் நீரிணையில் தாய்லாந்து, பிரிட்டிஷ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் 2

Air ind

போர் காரண​மாக விமான கட்டணம் அதிகரிப்பு?

March 12, 2026

ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரண​மாக, விமான எரிபொருள் விலை அதி​கரித்​துள்​ள​தால், ஏர் இந்​தியா நிறு​வனம் விமானக் கட்​ட​ணங்​களை

ir

பாடசாலையில் நடத்தப்பட்ட தாக்குதல் இலக்குத் தவறு – இராணுவ விசாரணை

March 12, 2026

ஈரானின் மினாப் பகுதியில் உள்ள பாடசாலையில் நடந்த தாக்குதலுக்கு அமெரிக்கா பொறுப்பேற்க வேண்டும், இதில் 175 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்,

mod

இந்தியா எப்போதும் தனது குடிமக்களை தவிக்க விடுவதில்லை

March 12, 2026

இந்தியா எப்போதும் தனது குடிமக்களை வெளிநாடுகளில் சிக்கித் தவிக்க விடுவதில்லை. மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் அங்குள்ள இந்தியர்களுக்கு

mal

அமெரிக்க தூதுவராக பீட்டர் மண்டல்சன் நியமனம்

March 12, 2026

அமெரிக்காவிற்கான பிரித்தானியத் தூதுவராக பீட்டர் மண்டல்சன் (Peter Mandelson) நியமிக்கப்பட்டது தொடர்பான முதல் கட்ட அதிகார பூர்வ ஆவணங்களை ஐக்கிய

iran

கால்பந்தாட்ட தொடரில் ஈரான் பங்கேற்க வாய்ப்பில்லை

March 12, 2026

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பீஃபா உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளில் ஈரானின் ஆண்கள் தேசிய கால்பந்து அணி பங்கேற்கும் நிலையில்

ir

கறுப்பு மழையால் சுவாசப் பிரச்சினைகள்

March 12, 2026

ஈரானில் கறுப்பு மழை பெய்த நிலையில், கறுப்பு மழையும் அதனுடன் கலந்து வரும் அமிலமும் மக்களுக்கு ஆபத்தானது. குறிப்பாக சுவாச

du

டுபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்

March 12, 2026

ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே ஈரான் ஏவிய இரண்டு ட்ரோன்கள் விழுந்ததில்,

sr

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள்; புதிய அறிவிப்பு

March 12, 2026

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் தொடர்பான புதிய அறிவிப்பை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று (12) மற்றும்

456

மட்டக்களப்பு மாவட்ட கல்வி அபிவிருத்திக்காக பெருமளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது!

March 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி அபிவிருத்திக்காக இந்த ஆண்டு 529 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆட்சிக்காலத்தில் தேசியபாடசாலைகளுக்கே அதிகளவான

chandra

அநுர அரசாங்கம் இல்லையென்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளினால் என்ன ஏற்பட்டிருக்கும் என்பது மக்களுக்குத் தெரியும்

March 12, 2026

அநுர அரசாங்கம் இல்லையென்றால் ‘டித்வா’ புயல் மற்றும் இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளினால் என்ன நிலைமை ஏற்பட்டிருக்கும் என்பது மக்களுக்கு

aa

இலங்கையில் அயோரா தினம்!

March 12, 2026

இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகள் சங்கமான (IORA) தினம் மார்ச் 11 ஆம் தேதி இலங்கையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதன்