அமெரிக்காவில் டைனோசர் எலும்புக்கூடு: ரூ. 250 கோடிக்கு ஏலம்

அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட அபூர்வமான டைனோசர் எலும்புக்கூடு ஒன்று, கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரி கஸ் லிக்கிங் (Cary Gus Licking) என்பவரைக் கௌரவிக்கும் விதமாக, இந்த டைனோசருக்கு ‘கஸ் டி-ரெக்ஸ்’ (Gus T-Rex) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவில் உள்ள ஹார்டிங் கவுண்டியில், கேரி கஸ் லிக்கிங்கிற்குச் சொந்தமான நிலம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள ‘ஹெல் க்ரீக்’ (Hell Creek) பாறை அடுக்குகளின் வரலாறு மீது அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். பல ஆண்டுகளாகத் தனது பண்ணையில் பற்களையும் சிறிய எலும்புத் துண்டுகளையும் கண்டெடுத்த அவர், இப்பகுதியில் புதைபடிவங்கள் இருப்பதற்கான வலுவான சாத்தியக்கூறுகள் இருப்பதை உணர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து, தொல்லியல் வல்லுநர் ஹெய்ட்கேம்ப் (Heitkamp) மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து, 2021-ம் ஆண்டில் புதைபடிவங்களைத் தேடும் பணியை கேரி தொடங்கினார். சுமார் 6,500 ஏக்கர் பரப்பளவு கொண்ட தனது நிலத்தில், எந்தப் பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்பதை அவரே சுட்டிக்காட்டினார். எனினும், இப்பணி தொடங்கிய ஓராண்டு காலத்திலேயே கேரி கஸ் காலமானார்.

கேரி சுட்டிக்காட்டிய இடம் மிகச் சரியாக அமைந்தது. அங்கு 2023-ம் ஆண்டு சுமார் 38 அடி (11.6 மீட்டர்) நீளமும், 12.5 அடி (3.8 மீட்டர்) உயரமும் கொண்ட பிரமாண்டமான டைனோசர் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இது, இதுவரை கண்டெடுக்கப்பட்ட டைனோசர் புதைபடிவங்களில் மிக முழுமையான மற்றும் மிகப்பெரிய எலும்புக்கூடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த ஆண்டு (2026) எலும்புகள் அனைத்தும் முறையாகச் சுத்தம் செய்யப்பட்டு, முழுமையான டி-ரெக்ஸ் எலும்புக்கூடு காட்சிப்படுத்தத் தயாரானது. தனது வாழ்நாளில் இந்த அற்புதமான கண்டுபிடிப்பைக் காண முடியாத கேரியைக் கௌரவிக்கும் விதமாக, இதற்கு ‘கஸ் டி-ரெக்ஸ்’ என்று பெயரிடப்பட்டது.

இந்த எலும்புக்கூடு, வருகின்ற ஜூலை 14-ம் திகதி மாலை 7.30 மணியளவில் நியூயார்க்கில் உள்ள ‘சோத்பீஸ்’ (Sotheby’s) நிறுவனத்தின் மூலம் ஏலம் விடப்படவுள்ளது. இந்த ஏலத்தின் ஆரம்ப விலை 19 லட்சம் அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் அரிதான மற்றும் பழமையான எலும்புக்கூடு என்பதால், 20 லட்சம் முதல் 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வரை ஏலம் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தற்போதைய இந்திய மதிப்பு சுமார் ரூ. 250 கோடியாகும்.

XHFAYQV4L5FSHADV33MY3MBVHY

மின்சார ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம், சாட்சிகளைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்

July 27, 2026

11 வயது சிறுவன் ஒருவன் தனது மின்சார ஸ்கூட்டரின் (e-scooter) கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதில்

LNUXYUAULNCK7GSPUXGXBRCQKM

இது கவலையளிக்கிறது’: வெறுப்புணர்வு சார்ந்த தாக்குதல்கள் எனச் சந்தேகிக்கப்படும் சம்பவங்களில் ரொறன்ரோவிலுள்ள யூதர்களுக்குச் சொந்தமான 2 பேக்கரி கிளைகள் இலக்கு வைப்பு

July 27, 2026

பெருமளவிலான ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த (GTA) பல யூத தொழுகைக்கூடங்கள் (synagogues) மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார்

death

குளியலறையில் உருக்குலைந்த நிலையில் சடலம்

July 27, 2026

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

kava

காவடி நடனத்தை நீக்க பரிந்துரை

July 27, 2026

தேவேந்திரமுனை ஸ்ரீ உத்பலவர்ண மகா தேவாலயத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருந்த பெரஹரவில் ஊர்வலத்தில் காவடி நடனத்தை நீக்குவதற்கு பொலிஸார்

wate

இளம் பிக்கு நீரில் மூழ்கி உயிரிழப்பு

July 27, 2026

மொனராகலை- வெல்லவாய, தெலுல்ல பகுதியில் உள்ள கிரிந்தி ஓயாவில் நீராடச் சென்ற இளம் பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்

aads

மன்னாரில் 43ஆவது தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

July 27, 2026

நாடு முழுவதும் திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தின் மீது 1983ஆம் ஆண்டு, கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் இனப் படுகொலை நினைவேந்தல்

an

விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் தொடர்பில் புதிய சட்டம்

July 27, 2026

விலங்குகளை நேசித்தல், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய இலங்கையின் சட்டக்

hurm

ஹோர்முஸில் நீரிணையில் பயணித்த எண்ணெய் கப்பல் வெடிப்பு?

July 27, 2026

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று கண்ணிவெடி ஒன்றில் சிக்குண்ட நிலையில் வெடித்து சிதறியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள்

Death-2

பாடசாலை மாணவி திடீர் மரணம்: பெற்றோர் சந்தேகம்

July 27, 2026

பொகவந்தலாவை திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த

den

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு

July 27, 2026

இலங்கை முழுவதும் பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளது. அதன்படி நாட்டின் பொதுச் சுகாதாரத்துறைய​ை வலுப்படுத்தும்

sajith-2

விவசாயிகளை இழிவுபடுத்தும் அரசாங்கம் விவசாயிகளினாலேயே வீடு செல்லும்

July 27, 2026

விவசாயிகளை இழிவுபடுத்தும் அரசாங்கம், விவசாயிகளினாலேயே வீடு செல்லும் காலம் வரக்கூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அநுராதபுரம்

arrest

பெண்கள் மீது காரை ஏற்ற முயன்ற பொலிஸ் அதிகாரி கைது

July 27, 2026

இரண்டு இளம் பெண்கள் மீது காரை ஏற்ற முயன்ற ஹோமாகம சிரேஷ்ட பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி, மீகோட பொலிஸாரால் கைது