அமெரிக்காவின் முற்றுகையை மீறி வெளியேறிய 34 ஈரான் கப்பல்கள்

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ள போதிலும் அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல், அதன் கட்டுப்பாட்டை மீறி, 34 ஈரான் கப்பல்கள் எல்லை தாண்டிச் சென்றுள்ளதாக பைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை இப்போது அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், ஈரான் மீதான கடல்சார் முற்றுகை உத்தி ‘மிகப்பெரிய வெற்றி’ அடைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

ஈரானுடன் “இறுதி ஒப்பந்தம்” எட்டப்படும் வரை இந்தத் தடைகள் நீக்கப்படாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில், பைனான்ஷியல் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் இந்த முற்றுகையை மீறி ஈரானுடன் தொடர்புடைய சுமார் 34 கப்பல்கள் தடையின்றிப் பயணம் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முற்றுகையை மீறிச் சென்ற 34 கப்பல்களில் 19 கப்பல்கள் ஈரானுடன் தொடர்புடையவை. இவை வளைகுடாவிலிருந்து வெளியேறிவிட்டன.

ஏனைய 15 கப்பல்களும் அரபிக் கடலிலிருந்து வளைகுடாவுக்குள் நுழைந்து ஈரானை நோக்கிச் சென்றுள்ளன.

வெளியேறிய கப்பல்களில் குறைந்தது 6 கப்பல்கள் ஈரானிய மசகு எண்ணெயை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த 6 கப்பல்களிலும் மொத்தமாக சுமார் 10.7 மில்லியன் பீப்பாய்களில் எண்ணெய் இருந்ததாகக் கூறப்படுகிறது.

பொதுவாக ப்ரெண்ட் (Brent) மசகு எண்ணெய் விலையை விட, சர்வதேச பொருளாதாரத் தடைகள் காரணமாக ஈரானிய எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 10 டொலர் குறைவாக விற்கப்படுகிறது.

இந்த அடிப்படையில், தடையை மீறிச் சென்ற இந்த எண்ணெய் மூலமாக ஈரானுக்கு சுமார் 910 மில்லியன் டொலர் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்படுகிறது.

ஏப்ரல் 13ஆம் திகதி ஈரான் மீதான பொருளாதார வர்த்தகத்தை முடக்கும் நோக்கில் அமெரிக்கா, ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவதாக அறிவித்தது.

போர் நடவடிக்கைகளுக்குப் பயன்படக்கூடிய பொருட்கள் மற்றும் மசகு எண்ணெய் பரிமாற்றத்தைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கம்.

முற்றுகையிட்டதிலிருந்து இதுவரை ஓமன் வளைகுடாவில் ஒரு சரக்குக் கப்பலை மட்டுமே அமெரிக்கப் படைகளால் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முடிந்தது. இந்தோ – -பசிபிக் பிராந்தியத்தில் ஒரு எண்ணெய் கப்பல் சோதனையிடப்பட்டது.

இதுவரை ஹோர்முஸ் நீரிணையில் பயணிக்கவிருந்த 28 கப்பல்களை அமெரிக்கா திருப்பி அனுப்பியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகமானது (CENTCOM) தெரிவித்துள்ளது.

இத்தனை அச்சுறுத்தலுக்கும் ஆபத்தான் சூழ்நிலைக்கும் மத்தியில் அமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு ஈரானுடன் தொடர்புடைய 34 கப்பல்கள் கடந்து சென்றிருப்பது சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

pillayan

சிறைச்சாலையில் பிள்ளையானுடன் ரோஹன் குணரத்ன இரகசியச் சந்திப்பு: ஈஸ்டர் விசாரணையில் புதிய திருப்பம்

April 23, 2026

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிள்ளையான் விளக்கமறியலில் இருந்தபோது, பேராசிரியர் ரோஹன் குணரத்ன

image_42b0480610

$2.5 மில்லியன் நிதி மோசடி: பொலிஸ் மா அதிபரிடம் புகார்; உயர்மட்ட அதிகாரிகளுக்கு தொடர்பு என குற்றச்சாட்டு

April 23, 2026

இலங்கை திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டாலர் நிதி மாயமானது குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரி, பொலிஸ் மா

us navy 115

இந்தியப் பெருங்கடலில் ஈரானிய எண்ணெய்க் கப்பலை மறித்தது அமெரிக்கா

April 23, 2026

ஈரானில் இருந்து எண்ணெய் ஏற்றிச் சென்ற, சர்வதேசத் தடைகளுக்கு உள்ளாகியிருந்த M/T Majestic X என்ற கப்பலை அமெரிக்கப் படைகள்

dailythanthi_2026-04-23_p6g756c0_hennai33

வரலாற்றுச் சாதனை படைத்த தமிழகத் தேர்தல்: 2011-ம் ஆண்டு சாதனையை முறியடித்துப் புதிய மைல்கல்!

April 23, 2026

சென்னை, தமிழகத்தின் 17-வது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது. சுட்டெரிக்கும் கோடை வெயிலையும்

air canada157

எரிபொருள் தட்டுப்பாடு: கனடாவில் ரத்தாகும் விமானங்கள்; உயரும் பயணக் கட்டணங்கள்

April 23, 2026

ஹார்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக விமான எரிபொருள் விலை கடந்த ஆண்டை விட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் கனடா

_117337117_963b4151-687c-47fd-b0e9-e50e4faf5f6a.jpg

மாலை 5 மணிக்கே சாதனை! தமிழகத் தேர்தல் வரலாற்றில் புதிய மைல்கல் – 82.24% வாக்குப்பதிவு!

April 23, 2026

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இறுதி நிலையை எட்டியுள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவிற்குக் கடுமையான கோடை வெயிலையும்

Harshana-Suriyapperuma

திறைசேரி நிதி மாயம்: மின்னஞ்சல் ஊடாக ஊடுருவிய ஹேக்கர்கள் – நிதி அமைச்சின் செயலாளர் விளக்கம்

April 23, 2026

திறைசேரியிலிருந்து சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்ட 2.5 மில்லியன் டாலர் நிதியில், முடிந்தவரை அதிகப்படியான தொகையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக

kanamal

யாழில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் நடாத்திய விசேட சந்திப்பு

April 23, 2026

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP)காணாமல் போன நபர்களுடைய குடும்பங்களினை வலுப்படுத்துவதற்கும் OMP ஆணையினை சிறப்பாக நிறைவேற்றுவதற்குமான கூட்டாண்மைகளை

Mujibar Rahuman

சோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதியை விசாரிக்க வேண்டும்!

April 23, 2026

சோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில், ஜனாதிபதி அநுர விடயத்திற்கு

warnig

மண்சரிவு எச்சரிக்கை விடுப்பு

April 23, 2026

குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி

government

மொழிகளை பணிகளில் பயன்படுத்துவது குறித்த பின்தொடர் பொறிமுறை

April 23, 2026

சிங்கள மற்றும் தமிழ் மொழிகளைப் படித்த ஊழியர்கள் அதனை பணிகளில் பயன்படுத்துவது குறித்து ஒரு பின்தொடர் பொறிமுறையை நடைமுறைப்படுத்துமாறு நீதி

fue

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் முக்கிய அறிவிப்பு

April 23, 2026

இந்த வருடம், ஜூலை மாதம் இறுதி வரை தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யும் அளவுக்கு எரிபொருள் கையிருப்பு உள்ளதாக புதிய