மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் மோதல் சூழல் உள்ளிட்ட பல்வேறு உலகளாவிய மற்றும் உள்நாட்டு காரணிகளுக்கு மத்தியில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகின்றது.
இலங்கை மத்திய வங்கி இன்று (21) வெளியிட்டுள்ள புதிய தினசரி நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை (Selling rate) 350 ரூபாயைத் தாண்டியுள்ளது.
மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை (Buying rate) 342.63 ரூபாயாகவும், விற்பனை விலை 354.03 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் (20) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 332.23 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை 342.70 ரூபாயாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைய, ஒரேநாளில் டொலரின் விற்பனை விலை 11 ரூபாய்க்கும் அதிக தொகையினால் பாரிய உயர்வைச் சந்தித்துள்ளது.