எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச சவுதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராஜா அனோஜனின் குடும்பத்தினரை இன்றுசந்தித்து உரையாடியுள்ளார்
கொழும்பில் எதிர்கட்சி தலைவரின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் அனோஜனின் தாயார், அவரது சகோதரர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பு இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை எதிர்கட்சி தலைவர் சவுதிஅரேபியாவிற்கான இலங்கை தூதுவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினார்.
எதிர்கட்சி தலைவர் சிறையில் உள்ள அனோஜனை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார், பின்னர் அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து அறிந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சரின் செயலாளரை தொடர்கொண்டார் என எதிர்கட்சி தலைவரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அனோஜனின் விடுதலையை சாத்தியமாக்குவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என எதிர்கட்சி தலைவர் அனோஜனின் குடும்பத்தினருக்கு உறுதியளித்துள்ளார்.