அச்சுவேலி பகுதியில் இயங்கிவரும் சிறுவர் சீர்திருத்தப் பாடசாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொடூரமான சம்பவம் தொடர்பான காணொளியொன்று கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கடந்த 24ஆம் திகதி நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தாக்குதல் காட்சிகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த சீர்திருத்தப் பாடசாலையில் உள்ள மாணவர்களை, கொடூரமான முறையில் தாக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவினர், குறித்த சீர்திருத்தப் பாடசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.