FACETS Sri Lanka-உத்தியோகபூர்வ நிலைச்சொத்து அனுசரணையாளராக ஜோன் கீல்ஸ் !

கொழும்பு, இலங்கை – 18 நவம்பர் 2025

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நாட்டில் இடம்பெறும் முதன்மையான சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி நிகழ்வான FACETS Sri Lanka 2026 க்கு உத்தியோகபூர்வ நிலைச்சொத்து (Real Estate) அனுசரணையாளராக தான் கைகோர்த்துள்ளமை குறித்து, இலங்கையின் மிகவும் நம்பிக்கைக்குரிய, மிகப் பாரிய மற்றும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிலைச்சொத்து நிர்மாணிப்பு நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற ஜோன் கீல்ஸ் புரொப்பட்டீஸ் (John Keells Properties JKP) அறிவித்துள்ளது.

“காலத்தால் அழியாத மரபுகள்” (Timeless Legacies) என்ற தொனிப்பொருளில் இந்த ஆண்டு நிகழ்வு இடம்பெறுவதுடன், கைவினைத்திறன், நம்பிக்கை, மற்றும் காலத்தால் அழியாத மரபு ஆகிய பண்புகளுடன் கட்டியெழுப்பப்பட்டுள்ள இந்த இரு துறைகளினதும் காலம் காலமாகத் தொடரும் மதிப்பைக் கொண்டாடும் வகையில் இது அமைந்துள்ளது.

ஜோன் கீல்ஸ் புரொப்பட்டீஸ் நிறுவனத்தின் விற்பனைகள் மற்றும் சந்தைப்படுத்தல் துறை தலைமை அதிகாரியும், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் துணைத் தலைவருமான நதீம் ஷம்ஸ் அவர்கள் இக்கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவிக்கையில்:

“ஆபரணம் மற்றும் நிலைச்சொத்து ஆகிய இரண்டும் எப்போதுமே ஆடம்பரம் என்பதற்கு அப்பாற்பட்டதாகக் காணப்படுவதுடன், காலத்தால் அழியாத நிரந்தரம் என்பதற்கு உவமானமாகக் காணப்படுகின்றன. இரத்தினக்கல்லும், இல்லமும் தனித்துவமான வரலாறுகள், மதிப்பு, மற்றும் உணர்வு ஆகியவற்றைச் சுமப்பதுடன், அவை தலைமுறை தலைமுறையாக கைமாறி வருகின்றன. FACETS நிகழ்வில் காட்சிப்படுத்தப்படுகின்ற தலைசிறந்த படைப்புக்களைப் போலவே, காலத்தால் அழியாத வாழ்விடங்களை ஜோன் கீல்ஸ் புரொப்பட்டீஸ் நிர்மாணித்து வருகின்றது.”

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் சங்கத்தின் தலைவர் அக்ரம் காசிம் அவர்கள் கருத்து வெளியிடுகையில்:

“மகத்துவம், கைவினைத்திறன், மற்றும் காலத்தால் அழியாத மதிப்பு என FACETS நிகழ்வை வரையறுக்கும் தனித்துவமான கோட்பாடுகளை ஜோன் கீல்ஸ் புரொப்பட்டீஸ் நிறுவனமும் காண்பித்து வருகின்றது. உத்தியோகபூர்வ நிலைச்சொத்து கூட்டாளராக அது கைகோர்த்துள்ளமை, உத்வேகமளிக்கும் வாழ்விடம் மற்றும் தலைமுறை தலைமுறையாக பொக்கிஷமாகப் போற்றப்படும் ஆபரணம் ஆகியவற்றுக்கு இடையிலான பிணைப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதுடன், எமது நிகழ்வுக்கு வருகை தருகின்ற பார்வையாளர்கள் அனைவருக்கும் கிடைக்கும் அனுபவத்தையும் மேம்படுத்துகின்றது.”

இலங்கையின் முதன்மையான இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி நிகழ்வாக சர்வதேச அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ள FACETS Sri Lanka, சர்வதேச கொள்வனவாளர்கள், சேகரிப்பாளர்கள், மற்றும் ஆர்வலர்களை ஈர்த்து வருகின்றது. இவ்வாண்டில் இக்கண்காட்சிக்கு புதிய பரிமாணத்தை ஜோன் கீல்ஸ் புரொப்பட்டீஸ் ஏற்படுத்தவுள்ளதுடன், கலைநயத்தை கட்டிடக்கலையுடனும், அழகுநயத்தை முதலீட்டுக்கான மதிப்புடனும் ஒன்றிணைக்கின்றது.

கொழும்பிலுள்ள Cinnamon Life City of Dreams ல் 2026 ஜனவரி 3-5 வரை FACETS Sri Lanka 2026 நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன், இலங்கையின் மிகச் சிறந்த கைவினைத்திறன், புத்தாக்கம், மற்றும் உலகளாவிய ஈர்ப்பு ஆகியவற்றை ஒன்றுசேர்க்கவுள்ளது.

By C.G.Prashanthan

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த

cen

ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

March 5, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை

he

கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

March 5, 2026

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல்,

ch

உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா

March 5, 2026

வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய

one

மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

March 5, 2026

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ்

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை