Business Global International award அமைப்பின் ‘Excellence Award’ நிகழ்வு!

Business Global International award அமைப்பானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி ‘Excellence Award’ என்ற நிகழ்வை யாழ்ப்பாணம் திவ்ய மஹால் மண்டபத்தில் மாலை 4 மணிக்கு நடாத்தவிருக்கின்றது.

எமது சமூகத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்ற பலர் இருக்கின்றார்கள். தொழில் முனைவோர், சமூக சேவையாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுடைய திறமை, உழைப்பு மற்றும் சமூகப் பங்களிப்புகளை பாராட்டி, அவர்களுக்கு சர்வதேச தரத்திலான ஒரு கௌரவத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே Excellence Awards நிகழ்வை நடத்தும் எண்ணம் உருவான எனவும் Business Global International award – இன் நோக்கமும் சிறந்த சாதனையாளர்களை அடையாளம் கண்டு, அவர்களை கௌரவிப்பதுடன், மேலும் பலரை சாதனைப் பாதையில் பயணிக்க ஊக்குவிப்பது எனவும் Business Global International award அமைப்பு அறிவித்திருக்கின்றது.

BGIA என்பது தொழில், சமூக சேவை, தலைமைத்துவம், கலை, ஊடகம், கல்வி, சுகாதாரம், சுற்றுலா, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களின் திறமை, உழைப்பு மற்றும் சமூகப் பங்களிப்புகளை பாராட்டி, அவர்களுக்கு சர்வதேச தரத்திலான ஒரு கௌரவத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே Excellence Awards நிகழ்வை நடத்தும் எண்ணம் உருவானது எனவும் வட மாகாணத்தில் உள்ள சாதனையாளர்களை கொழும்பு போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்வதை விட, அவர்களுடைய சொந்த மண்ணிலேயே அவர்களை கௌரவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் யாழ்ப்பாணத்தைத் தெரிவு செய்தோம் எனவும் விழா ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

BGIA கடந்த காலங்களில் பல்வேறு விருது மற்றும் சமூக அங்கீகார நிகழ்வுகளை நடத்தியுள்ளது.

குறிப்பாக கொழும்பு BMICH-ல் சர்வதேச விருது விழா நடத்தப்பட்டுள்ளது. மேலும் கத்தாரிலும் சமூக சேவையாளர்களை கௌரவிக்கும் விருது நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. சமூக சேவையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் Social Service Awards போன்ற நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாகவே தற்போது வடமாகாணத்தில் Excellence Awards 2026 நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.

“சாதனையாளர்களை அடையாளம் காண்போம் – அவர்களை கௌரவிப்போம் அடுத்த தலைமுறையை சாதிக்க ஊக்குவிப்போம்” என்பதே எமது பயணத்தின் முக்கிய நோக்கமாகும் எனவும்
இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும் திறமையான தொழில் முனைவோர், சமூக சேவையாளர்கள் மற்றும் சாதனையாளர்களை அடையாளம் கண்டு அவர்களை தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் அறிமுகப்படுத்துவதே தமது முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் எனவும்
இளைஞர்களை ஊக்குவித்தல், தொழில் முனைவோர் வளர்ச்சிக்கு ஆதரவளித்தல், சமூகப் பொறுப்புத் திட்டங்களை முன்னெடுத்தல் மற்றும் சர்வதேச மட்டத்தில் இலங்கையின் திறமையாளர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்க நாம் எதிர்பார்க்கின்றோம் எனவும் BGIA மேலும் தெரிவித்திருக்கின்றது.

நிகழ்வில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் அல்லது விருது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் ஏற்பாட்டுக் குழுவை பின்வரும் இலக்கத்தின் ஊடாக நேரடியாகத் தொடர்புகொள்ளலாம் – தொடர்பு இலக்கம்: 0773653989 என்பது குறிப்பிடத்தக்கது.

விருது தொடர்பான பரிந்துரைகள், பங்கேற்பு மற்றும் நிகழ்வு பற்றிய மேலதிக தகவல்களையும் இந்த இலக்கத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

IMG_8285

முல்லைத்தீவு, வவுனியா உட்பட பல பகுதிகளுக்கு எச்சரிக்கை!

September 20, 2026

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கும் பலத்த இடி மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை

toiler

டெய்லரால் சச்சினின் சாதனை முறியடிப்பு!

September 20, 2026

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக காலம் விளையாடிய இந்தியாவின் சச்சின் டென்டுல்கரின் சாதனையை சிம்பாப்வேயின் பிரெண்டன் டெய்லர் முறியடித்துள்ளார். சிம்பாப்வேயில்

Tamil_News_lrg_4326569

சென்னையில் இன்று பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்: 23,000 போலீஸார் குவிப்பு; ட்ரோன்கள் மூலம் தீவிரக் கண்காணிப்பு!

September 20, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளைக் கடலில் கரைக்கும் மாபெரும் ஊர்வலம் இன்று (செப். 20,

IMG_MADRAS_DAY_WALK_FORT_8_1_8TCDE18M

ஒரே இடத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம்: தவெக அரசின் அதிரடி உத்தரவு!

September 20, 2026

சென்னை: அரசு அலுவலகங்களில் ஒரே இடத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து பணியாற்றும் ஊழியர்களைக் கண்டறிந்து, அவர்களை இடமாற்றம் செய்வதற்கான

images - 2026-09-20T133143.535

“பண்ணையார் ஆட்சியில் மந்திரி ஆகியிருக்கும் வன்னி அரசு மன்னிப்பு கேட்பாரா?” – திமுக எம்.எல்.ஏ கோவி. செழியன் சரமாரி கேள்வி!

September 20, 2026

சென்னை: வேங்கைவயல் விவகாரத்தில் திமுக பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் எனச் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு விமர்சித்திருந்த

hindutamil-prod_2026-08-24_dprojm1d_1150195

“பொதுச்சொத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதா?” – முதலமைச்சர் விஜய்க்கு வேல்முருகன் கண்டனம்

September 20, 2026

சென்னை: சென்னை விமான நிலையத்தை நிர்வகிக்கும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்குப் (AAI) பதிலாக மாற்று ஆபரேட்டரை நியமிக்கக் கோரி

7

“ஒரு ரூபாய் செலவு; ஒரு லட்சத்துக்கு விளம்பரம்!” – தவெக அரசை ‘ரீல்ஸ்’ எனச் சாடிய எடப்பாடி பழனிசாமி

September 20, 2026

சேலம்: சேலத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆளும் தவெக அரசின் திட்டங்களையும், முதலமைச்சர்

a32ab75805882ace72a2369c24bd7934

“மாணவர் பாரதிதாசன் குடும்பத்தை மிரட்டியதாகக் கூறுவது திட்டமிட்ட அவதூறு!” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்

September 20, 2026

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வன்னி அரசு, வெளிநாட்டில் பயிலும் மாணவர் பாரதிதாசன்

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“வெளியில் மின்சாரம் வாங்கினாலும் மின்கட்டணம் உயராது!” – அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டம்!

September 20, 2026

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், மாநிலத்தில் நிலவும் மின் தட்டுப்பாடு, புதிய தலைமைச் செயலகம் மற்றும் கல்விக்

images - 2026-09-20T131623.526

“மதுராந்தகம், தாராபுரத்தில் 9 நாள்கள் சூறாவளிப் பிரச்சாரம்!” – நாளை முதல் களமிறங்குகிறார் சீமான் !

September 20, 2026

சென்னை: மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் தனித்துக் களம் காணும்

images

“கடலூரில் சிப்காட் மற்றும் NLC விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் திட்டம்” – அன்புமணி கண்டனம்

September 20, 2026

சென்னை: கடலூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் வளாகம் அமைப்பதற்காகவும், என்.எல்.சி (NLC) சுரங்க விரிவாக்கத்திற்காகவும்கூடுதல் நிலங்களைக் கையகப்படுத்தத் தமிழக அரசு

TVK-Star-Campaigners

“தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் கூட்டணிக் கட்சித் தலைவர்களா?” – சட்ட விதிகளின்படி அதிமுக, பாஜக கடும் எதிர்ப்பு!

September 20, 2026

சென்னை: தவெக சார்பில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 40 பேர் கொண்ட நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் காங்கிரஸ், விசிக, மதிமுக