Business Global International award அமைப்பு ‘Excellence Award’ என்ற நிகழ்வை யாழ்ப்பாணம் திவ்ய மஹால் மண்டபத்தில் கடந்தவாரம் நடாத்தியிருந்தது.
BGIA என்பது தொழில், சமூக சேவை, தலைமைத்துவம், கலை, ஊடகம், கல்வி, சுகாதாரம், சுற்றுலா, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை அடையாளம் கண்டு கௌரவிக்கும் ஒரு விருது வழங்கும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
அந்தவகையில் மேற்படி நிகழ்வில் Behind Me Media வுக்கு Best Media Personalty Award வழங்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எமது சமூகத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்ற தொழில் முனைவோர், சமூக சேவையாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுடைய திறமை, உழைப்பு மற்றும் சமூகப் பங்களிப்புகளை பாராட்டி, அவர்களுக்கு சர்வதேச தரத்திலான ஒரு கௌரவத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் Excellence Awards நிகழ்வை நடத்தும் எண்ணம் உருவானது எனவும் Business Global International award -வின் நோக்கமும் சிறந்த சாதனையாளர்களை அடையாளம் கண்டு, அவர்களை கௌரவிப்பதுடன், மேலும் பலரை சாதனைப் பாதையில் பயணிக்க ஊக்குவிப்பது எனவும் Business Global International award அமைப்பு அறிவித்திருக்கின்றது.