தமிழீழ விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் சின்னங்கள் மற்றும் அடையாளங்கள் பயன்படுத்தப்பட்டால் சட்ட நடவடிக்கை!

வடக்கில் நடைபெற்ற மாவீரர் நிகழ்வுகள் தொடர்பில் பொலிஸார் விசேட அவதானம் செலுத்தியுள்ளனர். இதன்போது விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் சின்னங்கள் மற்றும் அடையாளங்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட விடயங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அது தொடர்பில் சட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை (28) நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர உரையாற்றும் போது, வடக்கில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவிக்கையில்,

இவர் பொய்யான சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். குறிப்பாக கடந்த சில தினங்களாக வடக்கில் உயிரிழந்த உறவினர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிலையில் 2011இல் விடுதலைப் புலிகள் தடைச் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை நினைவுகூருவதும் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் விடுதலைப் புலிகளின் சின்னங்கள் உள்ளிட்ட அதனுடன் தொடர்புடைய எதனையும் பயன்படுத்த முடியாது. அது தொடர்பான வர்த்தமானிக்கு அமைய இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கடந்த வாரங்களில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பில் பொலிஸார் விசேட அவதானம் செலுத்தியுள்ளனர். அது தொடர்பில் அவதானம் செலுத்தி, குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அப்பால் நடக்கும் சகல விடயங்கள் தொடர்பாகவும் சட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி மன்னாரில் பிரபாரகரனின் உருவப் படத்தை காட்சிப் படுத்தி நடத்தப்பட்ட நிகழ்வு தொடர்பில் சில நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் முல்லைத்தீவு பகுதியில் அதுபோன்ற படத்தை காட்சிப்படுத்தி நிழ்வை நடத்திய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை திலீபன் தொடர்பான நிகழ்வு விடயத்தில் நீதிமன்றத்திற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமையில் சிலருக்கு தமது இருப்பை உறுதிச் செய்துகொள்ள இனவாதத்தை தூண்டி தமது அரசியல் நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவையுள்ளது. மக்கள் இனவாதம், மதவாதத்தை நிராகரித்துள்ளனர். அவ்வாறானவர்களுக்கு இந்த நாட்டில் இடமில்லை. இங்கு மூவினத்தவர்களும் ஒன்றாக இருக்கின்றனர். தமது உறவினர்கள் உயிரிழந்திருந்தால் அவர்களை நினைவுகூருவதற்கு இடமுள்ளது. அது வடக்கு, கிழக்கு, தெற்காக இருந்தாலும் ஒன்றே.

ஆனால் உயிரிழந்த உறவினர்களை நினைவுகூருவதை தவிர விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் எவ்வித நடவடிக்கைகளுக்கும் இடமளிக்கப்படாது. அவ்வாறான செயற்பாடுகளை தடுக்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் சில அடையாளங்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட சகல நினைவுகூரல்களும் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

ravikar

சட்ட ஒழுங்கில் மிகுந்த கரிசனையோடு செயற்பட்டவர்கள் தமிழீழ காவல்துறையினர்!

November 29, 2026

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் வடகிழக்கில் தமிழீழ காவல் துறையினர் நிலைகொண்டிருந்தனர். அவர்கள் நீலவண்ண ஆடைகளில் பணியாற்றியவர்கள். மிகுந்த ஒழுக்க சீலர்கள்.

lanka

எரிபொருள் நிலையத்தில் பாரிய நட்டம்

November 29, 2026

பொலன்னறுவை, ஹிங்குராங்கொட கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள நிலத்தடி டீசல் சேமிப்புத் தாங்கியில், தவறுதலாக 1,000 லீற்றருக்கும் அதிகமான

miy

மியன்மாரில் திருமண மண்டபம் மீது தாக்குதல்: 50க்கும் மேற்பட்டோர் பலி

November 29, 2026

மியன்மார் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்களில், திருமண நிகழ்வு நடைபெற்ற இடம் மற்றும் பாடசாலை உள்ளிட்ட பகுதிகளில் பல டசின்

abu

சிறுமி துஷ்பிரயோகம்: 21 வயது இளைஞன் தேடப்படுகின்றார்!

November 29, 2026

புத்தள பிரதேசத்தில் நடைபெற்ற பிங்கம் நிகழ்வொன்றுக்குத் தனது தாயுடன் வருகை தந்த 13 வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த 21

vat

வரி விவகாரம் : காலக்கெடு நீடிப்பு

November 29, 2026

இணையவழித் தாக்கல் கட்டமைப்பில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக, 2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை

Education

நாளை வழமை போல் பாடசாலைகள் இயங்கும்

November 29, 2026

நாளை (நவம்பர் 30) வழமையான பாடசாலை நாளாக இயங்கும் எனத் தெரிவித்துள்ள கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ, திட்டமிடப்பட்ட

crim

சந்திக்க வந்த நண்பனை கொன்று புதைத்த நபர்

November 29, 2026

கொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேகநபர்கள் கெஸ்பேவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். முருதலாவ, கருவலவத்தை பிரதேசத்தைச்

ham

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் வரலாற்றுச் சாதனை!

November 29, 2026

தங்களது துறைமுகத்தின் ஊடாக இதுவரை கையாளப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 50 இலட்சம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளதாக

spai

ஸ்பெயினில் அகதிகள் படகு விபத்து: 8 பேர் பலி!

November 29, 2026

மேற்கு ஆப்ரிக்க நாடுகளிலிருந்து அகதிகள் 100 பேர் சிறிய மரப்படகில் பயணித்துள்ளனர். அட்லாண்டிக் பெருங்கடல் மோசமாக வானிலை காரணமாக படகு

10

யாழில் மதுபோதையில் டிப்பர் செலுத்திய சாரதியால் 10 தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதம்!

November 29, 2026

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கட்டளையை மீறி, மதுபோதையில் டிப்பர் வாகனத்தைச் செலுத்திய சாரதியால் சுமார் 10 தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பு

jaff

வட மாகாண சட்ட உச்சிமாநாடு 2026

November 29, 2026

லங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டிலும், யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கங்களின் ஒத்துழைப்புடனும் ஒழுங்கமைக்கப்பட்ட ‘வட மாகாண சட்ட உச்சிமாநாடு 2026’

el

பெரு, ஈக்வடோரில் கடும் வெள்ளப்பெருக்கு!

November 29, 2026

ன் அமெரிக்க நாடுகளான பெரு மற்றும் ஈக்வடோர் ஆகியவற்றில் ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள கடும்