மேற்கு ஆப்ரிக்க நாடுகளிலிருந்து அகதிகள் 100 பேர் சிறிய மரப்படகில் பயணித்துள்ளனர். அட்லாண்டிக் பெருங்கடல் மோசமாக வானிலை காரணமாக படகு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு அருகே நடுக்கடலில் தத்தளித்த படகைக் கண்டறிந்த ஸ்பெயின் கடலோர மீட்புப் படையினர் விரைந்தனர்.
இந்த விபத்தில் அகதிகள் 8 பேர் உயிரிழந்தனர். 90க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஆறு பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். படகில் அதிக எடை காரணமாக விபத்து நிகழ்ந்ததாக விசாரணையில் தெரியவந்தது. ஸ்பெயின் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.