சட்ட ஒழுங்கில் மிகுந்த கரிசனையோடு செயற்பட்டவர்கள் தமிழீழ காவல்துறையினர்!

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் வடகிழக்கில் தமிழீழ காவல் துறையினர் நிலைகொண்டிருந்தனர். அவர்கள் நீலவண்ண ஆடைகளில் பணியாற்றியவர்கள். மிகுந்த ஒழுக்க சீலர்கள். குடிபோதையை முற்றுந் துறந்தவர்கள். வீதிப்போக்குவரத்திலும் சட்டம் ஒழுங்கிலும் மிகுந்த கரிசனையோடு செயற்பட்டவர்கள். அவர்களின் காலத்தில் வாழ்ந்து பழக்கப்பட்ட எங்களுக்கு தற்போதைய பொலிஸாரின் அணுகுமுறை மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக தெரிகின்றது என வன்னிமாவட்ட எம்.பி துரைராசா ரவிகரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (28) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் […]
எரிபொருள் நிலையத்தில் பாரிய நட்டம்

பொலன்னறுவை, ஹிங்குராங்கொட கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள நிலத்தடி டீசல் சேமிப்புத் தாங்கியில், தவறுதலாக 1,000 லீற்றருக்கும் அதிகமான பெட்ரோல் இறக்கப்பட்டமையினால், அங்கிருந்த எரிபொருள் இருப்பு பயன்படுத்த முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) அதிகாரிகள், நவம்பர் 28ஆம் திகதி குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் சென்று இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வினைத் தொடர்ந்து, கலப்படமான குறித்த எரிபொருளை மீண்டும் பவுசரில் ஏற்றி, மேலதிக பரிசோதனைகளுக்காக இலங்கை பெற்றோலியக் […]
மியன்மாரில் திருமண மண்டபம் மீது தாக்குதல்: 50க்கும் மேற்பட்டோர் பலி

மியன்மார் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்களில், திருமண நிகழ்வு நடைபெற்ற இடம் மற்றும் பாடசாலை உள்ளிட்ட பகுதிகளில் பல டசின் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு ஷான் மாநிலத்தில் உள்ள மோ பை (Moe Bye) கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றின் மீது சனிக்கிழமை (28) பிற்பகல் நடத்தப்பட்ட தாக்குதலில், குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 35 பேர் காயமடைந்துள்ளதாகவும் மீட்புப் பணியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அத்துடன், எதிர்ப்புப் படைகள் தீவிரமாகச் செயற்படும் மத்திய மியன்மாரின் மக்வே (Magway) பிராந்தியத்தில் […]
சிறுமி துஷ்பிரயோகம்: 21 வயது இளைஞன் தேடப்படுகின்றார்!

புத்தள பிரதேசத்தில் நடைபெற்ற பிங்கம் நிகழ்வொன்றுக்குத் தனது தாயுடன் வருகை தந்த 13 வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த 21 வயது இளைஞனைக் கைது செய்வதற்கான விசாரணைகளைப் புத்தள பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். குறித்த சிறுமி, நவம்பர் 07ஆம் திகதி தனது தாயுடன் புத்தள பிரதேசத்திலுள்ள உறவினர் ஒருவரின் பிங்கம் வீட்டுக்குச் சென்றுள்ளார். இவ்வாறு இருந்தவேளை, சிறுமி காணாமல்போய்விட்டதாகத் தாய் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த புத்தள பொலிஸார், கோனகங்கார பிரதேசத்திலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த […]
வரி விவகாரம் : காலக்கெடு நீடிப்பு

இணையவழித் தாக்கல் கட்டமைப்பில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக, 2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை டிசம்பர் 14ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது. முதலில் அறிவிக்கப்பட்ட நவம்பர் 30ஆம் திகதிக்குள் வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறிய போதிலும், டிசம்பர் 14ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அறிக்கைகளைத் தாக்கல் செய்யும் வரி செலுத்துவோருக்கு அபராதம், இயல்புநிலை மதிப்பீடுகள் அல்லது சட்ட நடவடிக்கைகள் எவையும் விதிக்கப்பட மாட்டாது […]
நாளை வழமை போல் பாடசாலைகள் இயங்கும்
நாளை (நவம்பர் 30) வழமையான பாடசாலை நாளாக இயங்கும் எனத் தெரிவித்துள்ள கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ, திட்டமிடப்பட்ட அனைத்துக் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளையும் எவ்வித இடையூறுமின்றி எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யுமாறு சகல பாடசாலைகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார். இன்று (நவம்பர் 29) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நவம்பர் 30 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரமானது, 2026 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணையின் இறுதி […]
சந்திக்க வந்த நண்பனை கொன்று புதைத்த நபர்
கொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேகநபர்கள் கெஸ்பேவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். முருதலாவ, கருவலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய தனது கணவர் காணாமல் போயுள்ளதாகக் கூறி, அவரது மனைவியினால் கடந்த 24ஆம் திகதி பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. தனது கணவர் இறுதியாக கெஸ்பேவை பிரதேசத்திலுள்ள நண்பரொருவரைச் சந்திப்பதற்காகச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சென்றதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, பேராதனை பொலிஸார் வழங்கிய தகவலின் அடிப்படையில் […]
ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் வரலாற்றுச் சாதனை!

தங்களது துறைமுகத்தின் ஊடாக இதுவரை கையாளப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 50 இலட்சம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக நிர்வாகம் அறிவித்துள்ளது. துறைமுகத்தின் வாகன மீள் ஏற்றுமதி (Transshipment) நடவடிக்கைகளில் இதுவொரு முக்கிய சாதனையாகப் பதிவாகியுள்ளது. வாகனக் கையாளுகை மற்றும் களஞ்சியப்படுத்தல் கொள்ளளவை மேலும் அதிகரிக்கும் நோக்கில், பிரத்தியேகமான வாகனக் கப்பல் இறங்குதுறை ஒன்றையும் புதிய வாகனத் தரிப்பிட வளாகம் ஒன்றையும் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய உட்கட்டமைப்பு வசதிகள் ஊடாகத் […]
ஸ்பெயினில் அகதிகள் படகு விபத்து: 8 பேர் பலி!

மேற்கு ஆப்ரிக்க நாடுகளிலிருந்து அகதிகள் 100 பேர் சிறிய மரப்படகில் பயணித்துள்ளனர். அட்லாண்டிக் பெருங்கடல் மோசமாக வானிலை காரணமாக படகு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு அருகே நடுக்கடலில் தத்தளித்த படகைக் கண்டறிந்த ஸ்பெயின் கடலோர மீட்புப் படையினர் விரைந்தனர். இந்த விபத்தில் அகதிகள் 8 பேர் உயிரிழந்தனர். 90க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஆறு பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். படகில் அதிக எடை காரணமாக விபத்து […]
யாழில் மதுபோதையில் டிப்பர் செலுத்திய சாரதியால் 10 தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதம்!

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கட்டளையை மீறி, மதுபோதையில் டிப்பர் வாகனத்தைச் செலுத்திய சாரதியால் சுமார் 10 தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமடைந்ததால் அப்பகுதிக்கான தொலைத்தொடர்பு சேவைகள் தடைப்பட்டுள்ளன. அத்துடன், தப்பியோடிய டிப்பர் வாகனம் வீதிகளில் மணலைக் கொட்டிச் சென்றுள்ளமையால் வீதிப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. கொடிகாமம் பொலிஸார் இன்று (29) அதிகாலை வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த டிப்பர் வாகனத்தை பொலிஸார் மறித்துள்ளனர். எனினும், […]