வட மாகாண சட்ட உச்சிமாநாடு 2026

லங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டிலும், யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கங்களின் ஒத்துழைப்புடனும் ஒழுங்கமைக்கப்பட்ட ‘வட மாகாண சட்ட உச்சிமாநாடு 2026’ நேற்றைய தினம் (28) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ஆரம்ப உரையை நிகழ்த்தினார். இதன்போது, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய சிறப்புரையாற்றியதுடன், சங்கத்தின் யாழ்ப்பாண வலய உப தலைவர் சட்டத்தரணி என். […]

பெரு, ஈக்வடோரில் கடும் வெள்ளப்பெருக்கு!

ன் அமெரிக்க நாடுகளான பெரு மற்றும் ஈக்வடோர் ஆகியவற்றில் ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் புயல் காரணமாக ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதோடு, பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கடந்த பல வாரங்களாகப் பெய்து வரும் கனமழையினால் கொலம்பியா எல்லைப் பகுதி முதல் வடக்கு பெரு வரையிலான பசுபிக் கடற்கரையோரப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பெருவின் வடமேற்குப் பகுதியான பியூரா (Piura) நகரில் 24 மணி நேரத்தில் 143 மில்லிமீற்றர் எனும் […]

முன்னாள் இராணுவ அதிகாரி கொலை: மூவர் கைது

காலி, ரத்கம – பூஸ்ஸ, மலியதூவ பிரதேசத்தில் முன்னாள் இராணுவ லெப்டினன்ட் கேணல் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 26ஆம் திகதி ரத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலியதூவ பிரதேசத்திலுள்ள பாழடைந்த காணியொன்றில் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமொன்று மீட்கப்பட்டது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் காலி – ரிச்மண்ட் கந்த பகுதியைச் சேர்ந்த 47 வயதான நளின் துஷார டி சொய்சா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தச் […]

இ.போ.ச பஸ் விபத்து: 22 பேர் காயம்

மஹியங்கனை – கண்டி பிரதான வீதியின் அசலக பாலம் சந்திக்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று வீதியை விட்டு விலகிப் புரண்ட இன்று (29) நண்பகல் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த சுமார் 22 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“சோனியா, ராகுல் வருகை – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை”

சென்னை: தொகுதி மறுவரையறை மசோதா விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் சென்னைக்கு விரைந்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியா கூட்டணியில் சர்ச்சை மற்றும் தலைவர்கள் வருகை: நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர் நாளை கூடும் நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. தொடக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்த திமுக மற்றும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி தற்போது இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் இந்தியா […]

“அந்த சகோதரரின் முதுகில்தான் வெட்கமே இல்லாமல் குத்தினீர்கள் ராகுல் – திமுக தாக்கு”

சென்னை: தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் மு.க.ஸ்டாலினை சகோதரர் என்று அழைத்துப் பதிவிட்ட ராகுல் காந்தியை, அந்த சகோதரரின் முதுகில்தான் வெட்கமே இல்லாமல் குத்தினீர்கள் என திமுக தொழில்நுட்பப் பிரிவு கடுமையாக விமர்சித்துள்ளது. இந்தியா கூட்டணித் தலைவர்கள் சென்னை வருகை: நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர் நாளை கூடும் நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவுக்கு திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், அதனை மாற்றிக்கொள்ள வலியுறுத்தி மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேச காங்கிரஸ் […]

வல்வெட்டித்துறை நகரசபைக்கு புதிய தவிசாளர் தெரிவு

வல்வெட்டித்துறை நகரசபைக்கு புதிய தவிசாளர் தெரிவு இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 18.12.2026 அன்று காலை 10.30 மணிக்கு வல்வெட்டித்துறை நகரசபைக்கான புதிய தவிசாளர் தெரிவு இடம்பெறும் என மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார். வல்வெட்டித்துறை நகரசபைத் தவிசாளராக பதவி வகித்த எம்.கே.சிவாஜிலிங்கம் அமரத்துவமடைந்தமையால் அந்த பதவி வெற்றிடமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வைபவ் நடிப்பில் உருவாகி வரும் ‘மணிகண்டா’

வைபவ் நடிப்பில் உருவாகி வரும் ‘மணிகண்டா’ படத்தின் இரண்டாவது பாடலான ‘கருப்பர் வந்தால் ஐய்யன் வருவார்’ பாடலை படக்குழு நவ.28 வெளியிட்டுள்ளது. நடிகர் சூர்யா இந்தப் பாடலை அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘மணிகண்டா’ படத்தில் இருந்து, ‘கருப்பர் வந்தால் ஐய்யன் வருவார்’ பாடலை வெளியிடுகிறோம். பிரியமான பிரேம் ஜி அமரனின் இசைப் பயணம் சிறக்க வாழ்த்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். ஜே.கே.சரவணாவின் வரிகளில், வி.எம்.மகாலிங்கம் பாடியிருக்கும் இந்தப் பாடல் ஐயப்பனுக்கு காவல் தெய்வமாக விளங்கும் […]

பொங்கலுக்கு வரும் ‘பாக்கெட் நாவல்’

சில கூட்டணிகள் மீண்டும் இணையும்போது ரசிகர்களிடம் இயல்பாகவே எதிர்பார்ப்பு உரு வாகும். ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள ‘பாக்கெட் நாவல்’ படம் வரும் பொங்கல் பண்டிகைக்குத் திரையரங்குகளில் வெளியாகிறது. டைலர் டர்டன், கினோ ஃபிஸ்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன. படம் குறித்து தியாகராஜன் குமாரராஜா கூறும்போது, “சுவாரசியமான கதைக்களம், நமக்கு மத்தியில் வசிக்கும் […]

டிச.18 சந்தானத்தின் ‘லவ் பைட்’ வெளியாகிறது!

சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘லவ் பைட்’ படம் டிசம்பர் 18 அன்று வெளியாக இருப்பதாக படக்குழு  அறிவித்துள்ளது. இந்தத் தகவலை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், ‘ஸோம்பி பராக்… டிசம்பர் 18 முதல் ‘லவ் பைட்’ உலகெங்கும் கடிக்க தயாராக உள்ளது’ எனத் தெரிவித்துள்ளது. இத்துடன் சந்தானம் ஸோம்பிகளுடன் ஒற்றைக்கை பலப்பரீட்சை நடத்தும் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. ‘காஞ்ஜுரிங் கண்ணப்பன்’ படத்தை இயக்கிய செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் […]