நடிகர் ஸ்ரீ ஆதவ் நடிக்கும் ‘கோரைக்காரன் ‘படத்தின் முன்னோட்டம் வெளியீடு

அறிமுக நடிகர் ஸ்ரீ ஆதவ் கதையின் நாயகனாக – முன்கோபம் கொண்ட கிராமத்து இளைஞனாக – நடித்திருக்கும் ‘கோரைக்காரன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் எம். ஏ. ஸ்ரீ ஆதவ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கோரைக்காரன்’ திரைப்படத்தில் ஸ்ரீ ஆதவ், வெண்மதி ஸ்ரீ ஆதவ், ‘திருப்பாச்சி’ பெஞ்சமின், மணிமாறன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. சீனிவாசன்- எஸ். தர்வேஷ் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மு. பாலசுப்பிரமணி இசையமைத்திருக்கிறார். உண்மை சம்பவத்தை தழுவி […]
முடிந்த அளவிற்கு மன உறுதியுடன் இருக்க முயற்சி செய்கிறேன்…

இராமாயணா படத்தில் சாய் பல்லவி சீதையாக நடித்தது வெளியானதில் இருந்து அவரை சுற்றி ஏதாவது ஒரு விமர்சனம் வந்து கொண்டே இருக்கிறது. முதலில் சீதை கதாபாத்திரத்துக்கு அவர் பொருத்தமானவரா? என்ற கேள்வி எழுப்பினார்கள். பின்னர் அந்த கதாபாத்திரத்தில் அவருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று விமர்சித்தார்கள். இப்போது வேறு ஒரு பாடலுக்கு அவர் டான்ஸ் ஆடியதையும் ட்ரோல் செய்து வருகின்றனர். இப்படி தொடர்ந்து வரும் விமர்சனங்களுக்கு சாய் பல்லவி பதிலடி கொடுத்து இருக்கிறார். இந்த சூழலில் […]
கொழும்பின் முக்கிய அடையாளங்கள் செம்மஞ்சள் நிறத்தில்!

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் முன்னெடுக்கப்படும் உலகளாவிய 16 நாள் செயற்பாட்டுப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, கொழும்பின் முக்கிய அடையாளச் சின்னங்கள் நவம்பர் 25 முதல் 27ஆம் திகதி வரை செம்மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்தன. Women In Need (WIN) அமைப்பினால், நெதர்லாந்து இராச்சியத் தூதரகம் மற்றும் கொழும்பு மாநகர சபையின் ஆதரவுடன் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை […]
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் நினைவேந்தலுக்கு அனுமதியளிக்கும் அரசு பிக்குகள் தாக்கப்படுவதற்கு இடமளிக்கின்றது – தயாசிறி ஜயசேகர

அநுராதபுரத்தில் பிக்குகளை சிங்கங்கள் போல் தாக்கி ஜீப் வண்டிகளில் ஏற்றிச் செல்லும் பொலிஸார் யாழ்ப்பாணத்தில் நாய்கள் போன்று நடக்கின்றனர். விடுதலைப் புலி பயங்கரவாதிகளின் நினைவு தினத்தை நடத்துவதற்கு இடமளித்துவிட்டு இந்த அரசாங்கம் பார்த்துக்கொண்டிருகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட எம்.பி.யான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (28) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை […]
நாளை நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறைப் போராட்டம்

027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 25,000 ரூபா இடைக்காலக் கொடுப்பனவை வழங்குதல் உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நாளை திங்கட்கிழமை (30) காலை 6.30 மணி முதல் செவ்வாய்க்கிழமை (01) காலை 6.30 மணி வரை நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறையைப் பதிவு செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தின் பிரதம செயலாளர் தம்பிட்டியே சுகதானந்த தேரர், […]
தமிழீழ விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் சின்னங்கள் மற்றும் அடையாளங்கள் பயன்படுத்தப்பட்டால் சட்ட நடவடிக்கை!

வடக்கில் நடைபெற்ற மாவீரர் நிகழ்வுகள் தொடர்பில் பொலிஸார் விசேட அவதானம் செலுத்தியுள்ளனர். இதன்போது விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் சின்னங்கள் மற்றும் அடையாளங்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட விடயங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அது தொடர்பில் சட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை (28) நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் […]
விக்டோரியா மாநில முதல் பெண் பிரதமராகிறார் Jess Wilson

அவுஸ்திரேலிய வரலாற்றில் முதன்முதலில் ஒரு இளம் ஆட்சியாளராக தனது 36 ஆவது வயதில் இந்த வெற்றியை அவர் பெற்றிருக்கிறார். விக்டோரியா மாநிலத்தின் முதல் பெண் பிரதமரும் இவரே. இவர் சார்ந்த Liberal–National கூட்டணிக்கு அறுதிப் பெரும்பான்மையும், இதுவரை ஆட்சியில் இருந்த தொழில் கட்சிக்குப் பெரும் பின்னடைவும் ஏற்பட்டிருக்கிறது. இதே பிரதிபலிப்பு எதிர்வரும் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரதிபலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பேருந்து மீது கற்பாறைகள் புரண்டு விழுந்ததில் பயணி பலி; பெண் படுகாயம்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கலுகல பகுதியில், அரச பேருந்து மீது பாரிய கற்பாறைகள் சரிந்து விழுந்ததில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று(28.11.2026) பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொல்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். ஹட்டன் நகரிலிருந்து பிற்பகல் 1.00 மணியளவில் கொழும்பு நோக்கிப் பயணத்தை ஆரம்பித்த ஹட்டன் சாலைக்குச் சொந்தமான அரச பேருந்து, கலுகல பகுதியை அண்மித்தபோது, அப்பகுதியிலுள்ள மலைப்பாங்கான […]
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இலங்கை வீரர்களை கௌரவித்த டயலொக்

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குநரும் விளையாட்டுத் துறையின் பிரதான ஊக்குவிப்பாளருமான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இலங்கை வீரர்களை வியாழக்கிழமை காலை தனது தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வைபவத்தில் கௌரவித்தது. ஜப்பானின் ஐச்சி-நாகோயாவில் (Aichi-Nagoya) நடைபெற்ற 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலம் உள்ளடங்கலாக மொத்தம் ஒன்பது பதக்கங்களை வென்று நாடு திரும்பிய இலங்கையின் பாரா தடகள வீரர்களின் […]
நளிந்த ஜயதிஸ்ஸ – மாலைதீவு உயர்ஸ்தானிகர் சந்திப்பு

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சுகாதாரம் மற்றும் ஊடகத்துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் கலந்துரையாடியுள்ளன. சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் ஆகியோருக்கு இடையிலான இந்தச் சந்திப்பு நேற்று முன்தினம் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் நடைபெற்றுள்ளது. இரு நாடுகளினதும் சுகாதாரக் கட்டமைப்புகளுக்கு இடையில் அறிவு, அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுதல், சுகாதாரத்துறை பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் […]