எம் தேசத்தின் விடுதலைக் கனவுக்காகத் தங்கள் உயிரையே அர்ப்பணித்த மாவீரர்களை, ஆழ்ந்த மரியாதையுடனும் நெஞ்சம் நிறைந்த நினைவுகளுடனும் தலைவணங்குகின்றோம் என்ற மகுட வாசகத்துடன் நாடு கடந்த தமிழீழ அரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கத்தவர்கள், செயற்பாட்டாளர்கள் தமிழ் மக்கள் மற்றும் குறிப்பாக மாவீரர்களின் குடும்ப உறவினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உணர்வுபூர்வமாக வீரவணக்கம் செலுத்தினர்.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த வலியையும், அவர்களின் நினைவுகளைச் சுமந்த வாழ்வையும் நெஞ்சில் ஏந்தி, மாவீரர்களின் குடும்ப உறவினர்கள் பங்கேற்றமை இந்நிகழ்வுக்கு ஆழமான உணர்வையும் நெகிழ்ச்சியையும் சேர்த்தது. காலங்கள் கடந்தாலும், தலைமுறைகள் மாறினாலும், மாவீரர்களின் நினைவுகள் எம் இதயங்களில் அணையாத தீபங்களாக என்றும் ஒளிரும். மாவீரர்களின் நினைவு என்றும் நிலைத்திருக்கட்டும். அவர்களின் தியாகம் எம் வரலாற்றில் என்றும் அழியாது என நாடு கடந்த தமிழீழ அரசு நிகழ்வு தொடர்பான செய்தியைப் பகிந்துள்ளது.