புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் சபையின் தவிசாளர் வேலாயுதம் கரிகாலன் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்போது சபையின் 18 உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன், நான்கு உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.

இதன்போது 2027ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு, 18 உறுப்பினர்களினதும் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

பாதீடு நிறைவேற்றப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சபையின் தவிசாளர் வேலாயுதம் கரிகாலன்,

2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டைத் தயாரிப்பதற்கு முன்னர் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 12 வட்டாரங்களிலும் மக்களுடனும், சபை உறுப்பினர்களுடனும் கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதன் அதனடிப்படையில், மக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளைக் கருத்திற்கொண்டு, புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளுக்குப் பொருத்தமான வகையில் பாதீடு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவுகள், சிறுவர்கள் மற்றும் நலிவுற்ற மக்களுக்கான நலத்திட்டங்கள், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கும் பாதீட்டில் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், 12 வட்டாரங்களிலும் மக்களின் தேவைகளை நேரடியாக அறிந்து, அவற்றுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டுக்கு ஆதரவளித்த சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் சார்பில் தனது நன்றிகளையும் தவிசாளர் கரிகாலன் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

ravikar

சட்ட ஒழுங்கில் மிகுந்த கரிசனையோடு செயற்பட்டவர்கள் தமிழீழ காவல்துறையினர்!

November 29, 2026

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் வடகிழக்கில் தமிழீழ காவல் துறையினர் நிலைகொண்டிருந்தனர். அவர்கள் நீலவண்ண ஆடைகளில் பணியாற்றியவர்கள். மிகுந்த ஒழுக்க சீலர்கள்.

lanka

எரிபொருள் நிலையத்தில் பாரிய நட்டம்

November 29, 2026

பொலன்னறுவை, ஹிங்குராங்கொட கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள நிலத்தடி டீசல் சேமிப்புத் தாங்கியில், தவறுதலாக 1,000 லீற்றருக்கும் அதிகமான

miy

மியன்மாரில் திருமண மண்டபம் மீது தாக்குதல்: 50க்கும் மேற்பட்டோர் பலி

November 29, 2026

மியன்மார் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்களில், திருமண நிகழ்வு நடைபெற்ற இடம் மற்றும் பாடசாலை உள்ளிட்ட பகுதிகளில் பல டசின்

abu

சிறுமி துஷ்பிரயோகம்: 21 வயது இளைஞன் தேடப்படுகின்றார்!

November 29, 2026

புத்தள பிரதேசத்தில் நடைபெற்ற பிங்கம் நிகழ்வொன்றுக்குத் தனது தாயுடன் வருகை தந்த 13 வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த 21

vat

வரி விவகாரம் : காலக்கெடு நீடிப்பு

November 29, 2026

இணையவழித் தாக்கல் கட்டமைப்பில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக, 2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை

Education

நாளை வழமை போல் பாடசாலைகள் இயங்கும்

November 29, 2026

நாளை (நவம்பர் 30) வழமையான பாடசாலை நாளாக இயங்கும் எனத் தெரிவித்துள்ள கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ, திட்டமிடப்பட்ட

crim

சந்திக்க வந்த நண்பனை கொன்று புதைத்த நபர்

November 29, 2026

கொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேகநபர்கள் கெஸ்பேவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். முருதலாவ, கருவலவத்தை பிரதேசத்தைச்

ham

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் வரலாற்றுச் சாதனை!

November 29, 2026

தங்களது துறைமுகத்தின் ஊடாக இதுவரை கையாளப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 50 இலட்சம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளதாக

spai

ஸ்பெயினில் அகதிகள் படகு விபத்து: 8 பேர் பலி!

November 29, 2026

மேற்கு ஆப்ரிக்க நாடுகளிலிருந்து அகதிகள் 100 பேர் சிறிய மரப்படகில் பயணித்துள்ளனர். அட்லாண்டிக் பெருங்கடல் மோசமாக வானிலை காரணமாக படகு

10

யாழில் மதுபோதையில் டிப்பர் செலுத்திய சாரதியால் 10 தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதம்!

November 29, 2026

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கட்டளையை மீறி, மதுபோதையில் டிப்பர் வாகனத்தைச் செலுத்திய சாரதியால் சுமார் 10 தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பு

jaff

வட மாகாண சட்ட உச்சிமாநாடு 2026

November 29, 2026

லங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டிலும், யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கங்களின் ஒத்துழைப்புடனும் ஒழுங்கமைக்கப்பட்ட ‘வட மாகாண சட்ட உச்சிமாநாடு 2026’

el

பெரு, ஈக்வடோரில் கடும் வெள்ளப்பெருக்கு!

November 29, 2026

ன் அமெரிக்க நாடுகளான பெரு மற்றும் ஈக்வடோர் ஆகியவற்றில் ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள கடும்