அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தினால் ஜனநாயகம் மரணிக்கும் – சாணக்கியன்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதாக குறிப்பிட்டுக் கொண்ட அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் சட்டமானால் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் மரணிக்கும்.மக்களாணையை பயன்படுத்திக் கொண்டு அரசாங்கம் ஜனநாயகத்துக்கு முரணான சட்டங்களையே இயற்றுகிறது.

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுத்தல் சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ் பெற வேண்டும்.இல்லையேல் எதிர்காலத்தில் மிக மோசமான விளைவுகளை நாட்டு மக்கள் எதிர்கொள்ள நேரிடும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் எச்சரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (26) நடைபெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல் சட்டமூல வரைவை தயாரித்தது யார் என்பதை நீதியமைச்சர் பாராளுமன்றத்துக்கும், நாட்டு மக்களுக்கும் அறிவிக்க வேண்டும்.இந்த கேள்விக்கு பதிலளிப்பதற்கு அமைச்சருக்கு இடமளிக்கிறேன்.

எனது கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கவில்லை. அவ்வாறாயின் சட்டவரைவை தயாரித்தது யார் என்று அவருக்கு தெரியாதா, மக்கள் பாரிய எதிரர்பார்ப்புடன் தான் இந்த அரசாங்கத்துக்கு ஆணை வழங்கினார்கள். மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளார்கள் என்பதற்காக அரசாங்கம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிராக செயற்படுகிறது. நீதித்துறை தொடர்பில் பல கேள்விகள் எழுந்துள்ள பின்னணியில் மனசாட்சிக்கு அமைய உரையாற்ற முடியாத காரணத்தால் தான் நீதியமைச்சர் குறிப்பு எழுதிக் கொண்டு வாசித்தார்.

அரசியலமைப்பால் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமையை முடக்கும் வகையில் அரசாங்கம் அண்மைகாலமாக பல சட்டமூலங்களை கொண்டுள்ளது.நாட்டு மக்களின் பெரும்பாலானோருக்கு இவ்வாறான சட்டங்கள் குறித்து போதுமான விளக்கம் போதாது. இந்த சட்டங்கள் எதிர்காலத்தில் மிக மோசமாக பயன்படுத்தப்படும் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுத்தல் மற்றும் வெளிநாட்டு பயங்கரவாத செயற்பாடுகளை தடுத்தல் உள்ளிட்ட சட்டமூலங்களை அரசாங்கம் கொண்டு வரப்பட்டுள்ளது.இந்த சட்டமூலங்கள் நாட்டு மக்களின் அப்படை மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கும் முற்றிலும் விரோதமானது.நாட்டு மக்கள் மீது அரசாங்கம் பற்றுக் கொண்டுள்ளதாயின் ஏன் இவ்வாறான சட்டமூலங்களை கொண்டு வந்துள்ளது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதாக குறிப்பிட்டுக் கொண்டு பாரதூரமான வகையில் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை அரசாங்கம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் பிளஸ் என்றே குறிப்பிட வேண்டும். இந்த சட்டமூலம் அண்மையில் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில் ஆராயப்பட்ட போது முன்வைத்த கேள்விகளுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தால் பதிலளிக்க முடியவில்லை. அந்தளவுக்கு இந்த சட்டமூலம் பாரதூரமானது. ஆகவே இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

நீதித்துறையை பலப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை கொண்டு வந்தது. இதன் பின்னரே ஜனநாயக விரோத சட்டமூலங்களை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் கடந்த காலங்களை காட்டிலும் மிக மோசமான சட்டங்களை கொண்டு வந்துள்ளது.

செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் எழுந்துள்ள கேள்விகள் மற்றும் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் பதிலளிக்கவில்லை. பல குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள இராணுவ அதிகாரிகளுக்கு சமீபத்தில் பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.இதுதான் இந்த நாட்டின் நிலைமை.

வலிந்து காணாமல் போனோர் விவகாரத்துக்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை. நீதிக்கோரி போராட்டத்தில் ஈடுபடும் உறவுகளுக்கு இடையூறு விளைவிக்கப்படுகிறது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நீதிக்காக இன்றுவரை போராடுகிறார்கள்.ஆகவே அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.அதற்காகவே நாங்களும் போராடுகிறோம் என்றார்.

ramc

சவூதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஹூதிகள் மீண்டும் தாக்குதல்

November 27, 2026

சவூதி அரேபியாவின் ஜசான் (Jazan) நகரில் அமைந்துள்ள ‘சவூதி அரம்கோ’ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது, ஈரான் ஆதரவு பெற்ற

rup

வங்கி கணக்கிலிருந்து மோசடி; அதிகாரி ஒருவர் கைது

November 27, 2026

தனியார் வங்கியொன்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை போன்ற ஒரு இணையதளத்தை உருவாக்கி, தனிநபரின் வங்கி கணக்கிலிருந்து 10 இலட்சம் ரூபாய் மோசடி

sana

அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தினால் ஜனநாயகம் மரணிக்கும் – சாணக்கியன்

November 27, 2026

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதாக குறிப்பிட்டுக் கொண்ட அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் சட்டமானால்

na

திருப்பெருந்துறை வீதியில் அநாதரவாக விடப்பட்ட பெண் மீட்பு

November 27, 2026

மட்டக்களப்பு திருப்பெருந்துறை வீதியில் நோயாளியான பெண் ஒருவர் அநாதரவாக பரிதவிக்க விட்டு சென்ற நிலையில் அவரை பொலிஸார் மீட்டு மட்டு

rain

இலங்கையின் 5 மாகாணங்களில் இன்று பலத்த மழை

November 27, 2026

இலங்கையின் 5 மாகாணங்களில் இன்று (27) சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்

arre

மாவீரர் தின நிகழ்வில் ஈடுபட்ட இளைஞர் கைது

November 27, 2026

மன்னாரில் மாவீரர் தின நிகழ்வில் ஈடுபட்ட 25 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மாவீரர் தின பதாகையொன்றை

images (1)

வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள்

November 27, 2026

தமிழ் இனத்தின் விடிவுக்காகவும், தமிழர்களின் உரிமைக்காகவும் போராடி சாவினைத் தழுவிய வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் இன்றாகும். தமிழர்

net

நெதர்லாந்து கண்டி இராச்சியத்தின் துப்பாக்கிகளை மீள கையளிக்க முடிவு

November 27, 2026

ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கண்டி இராஜ்ஜியத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இலங்கைக்கு உரித்தான இரண்டு துப்பாக்கிகளை மீண்டும் நாட்டிற்கே கையளிப்பதற்கு நெதர்லாந்து

sunil sen

இந்து கோயில்களைப் பதிவு செய்ய விசேட வேலைத்திட்டம் – அமைச்சர் சுனில் செனவி

November 27, 2026

மலையக பிரதேசங்களில் உள்ள இந்து கோயில்களை பதிவு செய்யும் பணிகளை துரிதப்படுத்தவும், அதற்கான வசதிகளை வழங்கவும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. சர்வமத

arre

சிசு​வை புதைத்த தந்தை கைது

November 27, 2026

தனது திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவிலிருந்த பெண் பிரசவித்த பச்சிளம் குழந்தையை இரகசியமாகப் புதைத்ததாகக் கூறப்படும் 30 வயதுடைய இரு பிள்ளைகளின்

WhatsApp Image 2026-11-26 at 09.25.11

வீரத்தின் அடையாளமாய், தியாகத்தின் வரலாறாய் வாழும் மாவீரர்களை நினைவுகூரும் புனித நாள்…

November 27, 2026

மாவீரர் நாள் நினைவேந்தல் 2026 நிகழ்வு இன்று நவம்பர் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி முதல் Mississaugaவில்

148

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 148 வீடுகள் திறப்பு

November 26, 2026

தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், 8.52 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட 148