தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு பருத்தித்துறை நகரில் அஞ்சலி நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரசபையின் ஏற்பாட்டில் நகரின் மத்தியில் பந்தல் அமைக்கப்பட்டு சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு மாவீரர் நாள் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நேற்று (23/11/2026) மாலை 6.00 மணிக்கு மாவீரர் ஒருவரின் தாயார் மாவீரர் நினைவு பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார். அகவணக்கம் இடம்பெற்று மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன், நகரசபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்று அஞ்சலி செலுத்தியிருந்தனர்.