போலிச் சுற்றுலா வழிகாட்டி கைது

காலி – உனவட்டுன பகுதியில் முறையான அனுமதியின்றி சுற்றுலா வழிகாட்டியாக நடித்து, நாட்டிற்கு வருகை தந்த ரஷ்ய சுற்றுலாப் பயணியான பெண் ஒருவருக்குத் தொல்லை கொடுத்து, தாக்கி, பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை உனவட்டுன சுற்றுலாப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த நவம்பர் 05 ஆம் திகதி சுற்றுலா விசாவில் நாட்டுக்கு வருகை தந்து, உனவட்டுன பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த 40 வயதுடைய ரஷ்ய நாட்டுப் பெண்ணே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் போது தெரியவந்ததற்கமைய, சந்தேகநபர் தன்னை சுற்றுலா வழிகாட்டியாக அறிமுகப்படுத்திக் கொண்டு, கடந்த 12 ஆம் திகதி இரவு 10.00 மணியளவில் இரவு உணவு உண்பதற்காக எனக் கூறி அவரை முச்சக்கரவண்டியில் காலி நகருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதன்போது சந்தேகநபர் குறித்த பெண்ணுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்த முற்பட்டுள்ளதுடன், அதனை அவர் கடுமையாக நிராகரித்தமையால் ஆத்திரமடைந்த சந்தேகநபர், அவரது கையடக்கத் தொலைபேசியைப் பறித்துக்கொண்டு 35,000 ரூபா கப்பப் பணம் கேட்டு அச்சுறுத்தியுள்ளார்.

பின்னர் மீண்டும் முச்சக்கரவண்டியில் விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் வழியில், சந்தேகநபர் வெளிநாட்டுப் பெண்ணின் முகம் மற்றும் தலையில் தாக்கியதுடன், அவரிடமிருந்த 20,000 ரூபா பணத்தை வலுக்கட்டாயமாகப் பறித்துச் சென்றுள்ளார்.

எவ்வாறாயினும், அந்தச் சந்தர்ப்பத்தில் முச்சக்கரவண்டி சாரதி உடனடியாகத் தலையிட்டு தாக்குதலைத் தடுத்ததுடன் அவரது பயணப் பையைக் காப்பாற்றவும் உதவியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து வெளிநாட்டுப் பெண் கடந்த 13 ஆம் திகதி உனவட்டுன சுற்றுலாப் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்ததுடன் அவரது விசா காலம் முடிவடைந்ததன் காரணமாக அவர் தற்போது நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சாட்சியங்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, உனவட்டுன சுற்றுலாப் பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக காலி தலைமையகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 

heal

இன்புளுவென்சா வைரஸ் பரவல் குறித்து சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை

November 20, 2026

இலங்கையில் இன்புளுவென்சா சுவாச வைரஸ் தொற்று பரவி வருவதால், காய்ச்சல், இருமல், தொண்டை வலி மற்றும் உடல் வலி உள்ளிட்ட

915548455_1673013157557264_8006156815667786714_n

யாழ். மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்!

November 20, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம்

Namal-750x422

எயார்பஸ் (Airbus) வழக்கில் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை மறுப்பு; டிசம்பர் 2 வரை விளக்கமறியல் நீடிப்பு

November 20, 2026

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனத்தின் எயார்பஸ் விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய இலஞ்ச ஊழல் வழக்கில், ஸ்ரீலங்கா

maveerar thu22

எந்தத் தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் சாட்டியில் வழமை போன்று மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படும்..! ஏற்பாட்டாளர்கள் உறுதி

November 20, 2026

யாழ்ப்பாணம், சாட்டி மாவீரர் துயிலுமில்ல பகுதியில் மாவீரர்நாள் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான ஆரம்ப பணிகள் நேற்றைய தினம் புதன்கிழமை மாவீரர்களுக்கு அஞ்சலி

Sajith-Premadasa-4

அரசாங்கம் தற்போது தொழில்சங்க தலைவர்களை இலக்குவைத்து செயற்படுகின்றது – நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினரின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன- சஜித்

November 20, 2026

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினரின் குரல்களை அரசாங்கம் நாளுக்குநாள் நசுக்கிவருவதாக தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச நாடாளுமன்றத்தில் அவர்களின் ஒலிவாங்கிகள் செயல்இழக்கச்செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Chemmani_6

செம்மணி மனிதப் புதைகுழி: என்புத் தொகுதிகள் சாதாரண நடைமுறைக்கு அப்பாற்பட்டவை – நீதிபதி எஸ். லெனின்குமார்

November 20, 2026

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட பல என்புத் தொகுதிகள் சாதாரண நடைமுறைக்கு அமையப் புதைக்கப்படவில்லை என்பது வெளிப்படையானது என யாழ்ப்பாண

viji

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை?

November 20, 2026

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பில் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மையப்படுத்தி ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை விதிப்பதற்கு முன்னரே அந்த

ambin

மரணித்தவர்களை நினைவு கூர்வதற்கு அரசாங்கம் எந்த தடையையும் ஏற்படுத்தவில்லை – அம்பிகா சாமுவேல்

November 20, 2026

மரணித்தவர்களை நினைவு கூர்வதற்கு அரசாங்கம் எந்த தடையையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் நாட்டின் இறைமைக்கும் தேசிய ஒற்றுமைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற எந்த

in

இன்று சர்வதேச குழந்தைகள் தினம்

November 20, 2026

உலக நாடுகள் குழந்தைகள் தினத்தை வெவ்வேறு தேதிகளில் கொண்டாடுகின்றன. இருந்தாலும் சர்வதேச குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20-ந்தேதி

kad

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலியான தீ விபத்து மேலதிக தகவல்கள் வௌியான!

November 20, 2026

கடுவலை நகர மத்தியில் அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டடமொன்றில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீப்பரவலின் போது, நச்சு புகையை சுவாசித்தமையால்

strike

முக்கிய சேவைகள் இன்று முடக்கம்!

November 20, 2026

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான ஏற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச நிறைவேற்று

5

வைத்தியர்கள் அல்லாத சுமார் 40 ஆயிரம் பேர் மருந்து வழங்குகின்றனர்

November 20, 2026

நாட்டில் வைத்தியர்கள் அல்லாத சுமார் 40 ஆயிரம் பேர் மருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலைமை பொதுச் சுகாதாரத்தில்