சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் தென்பகுதியின் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரான படபெந்தி மத்துமகே ஷெஹான் சத்சர எனப்படும் ‘தேஹிபாலே மல்லி’ உள்ளிட்ட நால்வர் ஜோர்ஜிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்கள் நால்வரும் இரண்டு நாள்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட ஏனைய மூவரும் அவருடன் தொடர்புடைய சகாக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுபாயிலிருந்து ஜோர்ஜியா ஊடாக ஐரோப்பிய நாடொன்றுக்குச் சட்டவிரோதமாகத் தப்பிச் செல்ல முயன்றபோதே இவர்கள் ஜோர்ஜிய பாதுகாப்புப் பிரிவினரிடம் சிக்கியுள்ளனர் என டுபாயிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.