லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 1,775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 4,965 ரூபாவாக இருந்த குறித்த சிலிண்டரின் புதிய விலை 6,740 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 732 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 1,988 ரூபாவாக இருந்த அதன் புதிய விலை 2,720 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.