அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கண்டனப் போராட்டம் – மருத்துவ சேவைகள் பாதிக்காது!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (10) கொழும்பில் கண்டனப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்னால் இப்போராட்டம் நடைபெறவுள்ளதாக அச்சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இருப்பினும், நாளை வைத்தியசாலை அமைப்பில் எந்தவித பணிப்புறக்கணிப்பும் இடம்பெறாது எனவும், அனைத்து வைத்தியர்களையும் கொழும்புக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியர்களின் கொடுப்பனவுகள் மற்றும் சம்பளங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி இதற்கான தீர்வுகளை வழங்குவார் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க:

“நாளை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்ற ரீதியில் அனைத்து மாவட்டக் கிளைச் சங்கங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதிநிதிகளைக் கொழும்புக்கு அழைத்துள்ளோம். ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் நாளை கொழும்புக்கு வரத் தயாராகியுள்ளனர்.

அரசாங்கத்திடம் நாங்கள் கோரிக்கைகளை முன்வைக்கிறோம், எச்சரிக்கையும் விடுக்கிறோம். வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தையே நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் இலவச சுகாதார சேவை, நாட்டின் வைத்தியசாலை அமைப்பு, வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இனங்கண்டு அதற்குச் சரியான தீர்வுகளை வழங்க அரசாங்கம் தவறுமானால், இந்த நாட்டிற்கு இலவச சுகாதார சேவை தேவையில்லை, வைத்தியர்களோ விசேட வைத்தியர்களோ தேவையில்லை என்ற செய்தியையே அரசாங்கம் சொல்வதாக அமையும்.

நாங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடமாட்டோம். அனைத்து வைத்தியசாலைகளிலும் நோயாளர் பராமரிப்புச் சேவைகள் வழமை போல் முன்னெடுக்கப்படும்.

அந்தச் சேவைகள் இடம்பெறும் அதேவேளை, ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் கொழும்புக்கு வரத் தயாராக உள்ளனர். இது முதலாவது கட்ட நடவடிக்கை மட்டுமே.

அடுத்த 48 மணித்தியாலங்கள் முடிவடையும் போது வரவு செலவுத் திட்டத்தை நாங்கள் அவதானிப்போம். இரண்டரை வருடங்களாக நாங்கள் பொறுமைகாத்தோம். எமது சம்பளம் வெட்டப்பட்டது, கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டன, பாதுகாப்புப் பிரச்சினைகள் எழுந்தன, உத்தியோகபூர்வ இல்லப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கவில்லை.

பாதுகாப்பைக் கேட்டபோது சமூக ஊடகப் படைகளைப் பயன்படுத்தி வைத்தியர்கள் மீது சேறுபூசும் தாக்குதல்களை நடத்தினார்கள். அதன் விளைவை அனுராதபுரத்தில் மீண்டும் காண்கிறோம்.

எனவே, இந்தப் பயணத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்ல வைத்தியர்கள் தயார் நிலையில் உள்ளனர். அடுத்த 72 மணித்தியாலங்கள் முடிவடைந்து, தேசிய மக்கள் சக்தியின் மூன்றாவது வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது எமது பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார்.

5

“நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் சந்திக்கத் தயார்!” – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

November 12, 2026

ஈரோடு: எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தவெக அரசு முழுமையாகத் தயாராக உள்ளதாகத் தமிழக

4

“சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற பிம்பத்தை உருவாக்க திமுக முயற்சி!” – அமைச்சர் நிர்மல் குமார் சாடல்!

November 12, 2026

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற மாய பிம்பத்தை உருவாக்கப் பிரதான எதிர்க்கட்சியான திமுக தொடர்ந்து முயற்சி செய்து

3

“பஞ்ச் டயலாக் மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை!” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

November 12, 2026

சென்னை: பஞ்ச் டயலாக் மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை என்று முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக

2

“சண்டியர் திரைப்படத்தின் தலைப்பை ஒரு வாரத்திற்குள் மாற்ற வேண்டும்!” – கிருஷ்ணசாமி கெடு!

November 12, 2026

சென்னை: சண்டியர் திரைப்படத்தின் தலைப்பை நடிகர் கமல்ஹாசன் ஒரு வாரத்திற்குள் மாற்ற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் எங்குப் படப்பிடிப்பு

1

“முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் ஜாமீன் மனு!” – விசாரணையை ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்!

November 12, 2026

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு உரிமம் வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தாக்கல்

amalanayaki

மட்டக்களப்பு மாவட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் விபரங்களைச் சேகரிக்கும் நடவடிக்கை – எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் தகவல்களை வழங்குமாறு கோரிக்கை

November 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் விபரங்களை ஆவணப்படுத்தி, விரிவான புத்தகமொன்றைத் தயாரிக்கும் நோக்கில் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில்,

anura-Budget

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க 2027 வரவு செலவுத் திட்ட உரை: கடன் முகாமைத்துவம், சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகள், IMF எதிர்காலம்

November 12, 2026

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க 2027 ஆம் ஆண்டுக்கான

anura-Budget

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க2027 வரவு செலவுத் திட்ட உரை: கடன் முகாமைத்துவம், சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகள், IMF எதிர்காலம்

November 12, 2026

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அனுர குமார

ANojan-Sivarasa-family-AKD-1

நீங்கள் செய்த உதவியை ஒருபோதும் மறக்க மாட்டோம்” : ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவுக்கு அனோஜனின் குடும்பத்தினர் நன்றி!

November 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவின் குடும்பத்தினர், அவரது

pol

மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்திய 23 பேர் கைது

November 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவித்துவிட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறியும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடமாடும் மருத்துவப்

sdf

செட்டிகுளம் தனியார் காணிகள் மற்றும் குளங்களை விடுவிக்க விசேட பிரேரணை!

November 12, 2026

செட்டிகுளம் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் புதன்கிழமை (11.11.2026) பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் மற்றும் செட்டிகுளம் பிரதேச செயலாளர்

dsf

நான்கு நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன

November 12, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, விமல் சுரேந்திர, லக்சபான, கெனியன் மற்றும் மேல்