ரம்பேவ பேருந்து விபத்து -மூன்று பெண்கள் உட்பட நால்வர் பலி – 76 மருத்துவமனைகளில் – பலருக்கு எலும்பு முறிவு தலைக்காயங்கள்

ரம்பேவ மதவாச்சி வீதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 76 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள அமைச்சரவை பேச்சாளர் இவர்கள் அப்பகுதிகளில் உள்ள பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது மூன்று பேருந்துகள் மோதிவிபத்துக்குள்ளானதில் 76 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 61பேர் அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,அவர்களில் பலருக்கு எலும்புமுறிவு போன்றவற்றிற்காக சத்திரசிகிச்சை இடம்பெற்றுள்ளது. தலையில் ஏற்பட் காயங்கள் காரணமாக சிலர் தீவிரகண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்,மூவருக்கு எம்ஆர்ஐ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு ரி-56 (T-56) ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட மூவரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (10) குறித்த வழக்கு விசாரணை திறந்த நீதிமன்றில் […]

விபத்தில் சிக்கியது யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து – ஐவர் பலி

அனுராதபுரம், ரம்பேவ பகுதியில் இன்று (10) காலை A9 வீதியில் மூன்று பேருந்துகள் ஒன்றோடொன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 20 பேர் வரை காயமடைந்துள்ளனர். இன்று காலை 10.30 மணியளவில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (SLTB) சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் F.U. வூட்லர் நியூஸ்வயருக்குத் தெரிவித்துள்ளார். SLTB பேருந்துகளில் ஒன்றின் பின்னால் பயணித்த தனியார் பேருந்தொன்று, பின்னர் […]

கனடாவில் வங்கிக் கணக்குகளுக்கு இடையிலான பணப் பரிமாற்றம் விரைவில் விரைவடைகிறது

கனடாவில் வங்கிக் கணக்குகளுக்கு இடையிலான பணப் பரிமாற்றம் விரைவில் விரைவடைகிறது கனடிய நிதித் தளங்களுக்கான புதிய கட்டணச் முறைமையின் (payment system) அறிமுகத்துடன், பல கனடியர்கள் விரைவில் தங்களது வங்கிக் கணக்குகளுக்கு இடையே பணத்தை விரைவாக மாற்றவும், தங்களது கொடுப்பனவுகளை (payments) விரைவாகப் பெறவும் முடியும். கனடாவின் ரியல்-டைம் ரயில் (Real-Time Rail – RTR) கட்டணச் முறைமையை திங்கள்கிழமை அறிமுகப்படுத்துவதாக ‘பேமெண்ட்ஸ் கனடா’ (Payments Canada) அறிவித்துள்ளது. இது நுகர்வோர்களும் வணிகங்களும் உடனடியாகப் பணத்தை அனுப்பவும் […]

ஈரானுடனான தொடர்புகள் காரணமாக எட்டு கனடியப் பணப்பரிவர்த்தனை நிறுவனங்கள் மீது அமெரிக்க நிதி அமைச்சுத் தடை

நிதித் தடைகளை ஈரானிய அமைப்புகள் மீறிச் செயல்பட உதவியதாகக் குற்றம் சாட்டி, எட்டு கனடியப் பணப்பரிவர்த்தனை (currency-exchange) வணிகங்கள் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. “ஒப்பரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்”  என்று அழைக்கப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமெரிக்க நிதித் திணைக்களம் வெள்ளிக்கிழமை இந்த நடவடிக்கைகளை அறிவித்தது. ஈரானிய ரியால்கள் மற்றும் பிற நாணயங்களை கிரிப்டோகரன்சி (cryptocurrency) போன்ற டிஜிட்டல் சொத்துக்களாக மாற்றுவதன் மூலம் இந்த வணிகங்களில் சில தங்களின் வருவாயைச் சலவை செய்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளதுடன், […]

அமெரிக்க இறக்குமதிகள் மீதான சில சுங்கவரி விலக்கு நடவடிக்கைகளைக் கனடா நீடிக்கிறது வரி விலக்கு தற்போது 2028 ஜூன் 30 வரை நீட்

10 நவம்பர் 2026  அமெரிக்கப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட பதில்-சுங்கவரிகளிலிருந்து அளிக்கப்பட்ட சில விலக்குகளைக் கனடா நீடித்துள்ளதாகவும், இந்த வரி விலக்கிற்குத் தகுதியுடைய இறக்குமதிகளின் வரம்பை விரிவுபடுத்தியுள்ளதாகவும் திங்கள்கிழமை அறிவித்துள்ளது. கனடிய நிதி அமைச்சர் ஃபிரான்சுவா-பிலிப் சாம்பேன் (Francois-Philippe Champagne) இந்த மாற்றங்களை ஓர் அறிக்கையில் அறிவித்தார். அமெரிக்கச் சுங்கவரிகளால் பாதிக்கப்பட்ட கனடிய வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களுக்குச் சிறந்த ஆதரவை வழங்குவதும், சாத்தியமான இடங்களில் கனடாவில் தயாரிக்கப்படும் பொருட்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதும் இத நோக்கம் என்று அவர் […]

மரம் முறிந்து வீழ்ந்ததில் கார் சேதம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!

ஹைலெவல் வீதியின் பாதுக்க, துன்னான எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகில் வீதிக்கு மேல் விசாலாமான மரமொன்று வீதியில் முறிந்து விழுந்ததில், அவ்வழியாகப் பயணித்த காரொன்று சேதமடைந்துள்ளது. இந்த விபத்தையடுத்து, ஹைலெவல் வீதியூடான வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகப் பாதுக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இச்சம்பவத்தில் எவருக்கும் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. வீதியில் விழுந்துள்ள மரத்தை அறுத்து அகற்றி, வீதியை விரைவாக மீண்டும் போக்குவரத்திற்காகச் சீரமைக்கும் […]

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கண்டனப் போராட்டம் – மருத்துவ சேவைகள் பாதிக்காது!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (10) கொழும்பில் கண்டனப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்னால் இப்போராட்டம் நடைபெறவுள்ளதாக அச்சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். இருப்பினும், நாளை வைத்தியசாலை அமைப்பில் எந்தவித பணிப்புறக்கணிப்பும் இடம்பெறாது எனவும், அனைத்து வைத்தியர்களையும் கொழும்புக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வைத்தியர்களின் கொடுப்பனவுகள் மற்றும் சம்பளங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பில் […]

விகாரை வளாகத்தில் பதற்றம்!

அனுராதபுரம் வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலிசாய விகாரைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட சத்யாகிரகப் போராட்டத்தின்போது, அங்கு வந்த நபர் ஒருவருக்கும் தேரர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றமான நிலைமை உருவானது. புனித பூமியொன்றிற்குள் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுப்பது பௌத்த சாசனத்துக்குச் செய்யும் அவமரியாதை எனக் கூறி, குறித்த நபர் சத்யாகிரகத்தில் ஈடுபட்டிருந்த தேரர்களைக் கடுமையாகச் சாடியதை தொடர்ந்தே இந்த முரண்பாட்டு நிலைமை எழுந்துள்ளது. இதன்போது தேரர்களுக்கும் அந்த நபருக்குமிடையே காரசாரமான வார்த்தை பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. பின்னர், சம்பவ இடத்துக்கு […]

ட்ரோன்கள் தொடர்பில் நளின் பண்டார விளக்கம்!

நாட்டுக்கு சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் 39 ட்ரோன் (Drone) கருவிகள் மற்றும் 16 மைக்ரோபோன்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார நேற்று ஊடகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். தனது குடும்பத்துக்கு சொந்தமான வணிக நடவடிக்கைகளுக்காகவே குறித்த உபகரணங்கள் சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், “எங்கள் குடும்பத்தில் எனது மனைவியும் மகனும் பணிபுரியும் கெமரா மற்றும் ட்ரோன்களை வாடகைக்கு வழங்கும் மற்றும் விற்பனை செய்யும் ஒரு […]