Google Gemini எமக்காகப் பேசவும் தயாராகிவிட்டது!

தொழில்நுட்ப வசதிகள் வளர வளர, நம்முடைய அன்றாட வாழ்க்கையும், உலகமும் மிக வேகமாக மாறி வருகின்றன. இந்த வளர்ச்சி மனித குலத்திற்குப் பல்வேறு நன்மைகளையும், அதே நேரத்தில் சில சவால்களையும் கொண்டு வந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ளவர்களுடன் நொடியில் தொடர்புகொள்ள முடிகிறது. வீடியோ கால்கள் சமூக ஊடகங்கள் உலகைச் சுருக்கிவிட்டன. வகுப்பறைக்குச் செல்லாமலேயே இணையம் மூலம் உலகத்தரம் வாய்ந்த கல்வியைக் கற்க முடிகிறது. ஆன்லைன் ஷாப்பிங், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஆகியவை வணிகத்தை எளிமையாக்கியுள்ளன. வீட்டில் இருந்தே வேலை செய்யும் வசதி பெருகியுள்ளது.

அதிநவீன கருவிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் நோய்களைக் கண்டறிவதும், சிகிச்சை அளிப்பதும் எளிதாகி, மனித ஆயுள் நீண்டுள்ளது. பயண முன்பதிவு முதல் உணவு ஆர்டர் செய்வது வரை அனைத்தும் விரல் நுனியில் கிடைப்பதால் நேரம் மிச்சமாகிறது.

இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்புவது மிகவும் எளிதாகிவிட்டது.

இதற்கிடையே தொழில்நுட்ப வளர்ச்சியில் புதிய பரிமாணமாக, கூகுள் நிறுவனம் தற்போது புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது!

அதாவது, கூகுள் நிறுவனம் தனது ஜெமினி AI (Gemini AI)-ல் Call for Me என்ற மிரளவைக்கும் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், உங்களுக்குப் பதிலாக இனி கூகுள் ஜெமினியே போன் கால்களை மேற்கொண்டு பேசும்.

கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம், இனிமேல் நீங்கள் ஹோட்டலில் டேபிள் புக் செய்வதற்கோ அல்லது கஸ்டமர் கேருக்குப் போன் பேசுவதற்கோ இனிமேல் நீங்கள் கஷ்டப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேசவேண்டுமோ, அதனை உங்களுக்காக அதுவே தானாக போன் செய்து பேசும்.

இந்த வசதியைப் பயன்படுத்துவது மிகவும் சுலபம். உங்கள் மொபைல் போனில் உள்ள கூகுள் ஜெமினி செயலியைத் திறந்து, அட் சிம்பல் போட்டு “@Call for Me” என்று டைப் செய்யவேண்டும்.

அதன்பிறகு, நீங்கள் யாருக்குப் போன் செய்ய வேண்டும், அவர்களிடம் என்ன பேச வேண்டும் என்ற விவரங்களை அதில் கொடுக்க வேண்டும்.

உதாரணமாக, நீங்கள் வேறொரு வேலையில் பிஸியாக இருக்கும்போது அல்லது ஒரு கடையில் ஏதேனும் விவரம் கேட்க போன் செய்யத் தயங்கும் போது, இந்த AI உதவியாளர் உங்களுக்குப் பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.

உங்களுக்கு ஒரு கடையில் குறிப்பிட்ட பொருள் இருக்கிறதா என விசாரிக்க வேண்டும் அல்லது ஒரு ஹோட்டலில் டேபிள் புக் செய்யவேண்டும் என்றால், அதை ஜெமினியிடம் சொன்னால் போதும். அதுவே அந்த கடைக்கு போன் செய்யும்.

“ஒன்றை அழுத்தவும், இரண்டை அழுத்தவும்” (IVR) போன்ற கணினி குரல் வழிமுறைகளை ஜெமினியே தானாகவே புரிந்துகொண்டு இயக்கும்.

லைனில் மனிதர்கள் யாராவது வந்ததும், ஜெமினி தன்னை ஒரு AI உதவியாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, உங்களுக்குத் தேவையான விவரங்களை மிக இயல்பாகப் பேசி கேட்டுத் தெரிந்துகொள்ளும்.

அதற்கு முன்பாக, அது எந்த நம்பருக்குப் போன் செய்யப் போகிறது, அவர்களிடம் என்ன பேசப்போகிறது என்ற ஒரு சிறு சுருக்கத்தை உங்களுக்குத் திரையில் Live Transcript காட்டும். நீங்கள் அதைச் சரிபார்த்து ‘ஓகே’ சொன்னவுடனே, அந்த நம்பருக்குப் போன் செய்து, தான் ஒரு ஏ.ஐ (AI) என்பதை அவர்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு, நீங்கள் சொன்ன வேலையைக் கச்சிதமாக முடித்துவிட்டு உங்களுக்குத் தகவலைத் தெரிவிக்கும்.

ஜெமினி போனில் என்ன பேசுகிறது என்பதை உங்கள் மொபைல் திரையிலேயே எழுத்து வடிவில் (Text) நேரலையாகப் பார்க்க முடியும். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் போனை ஜெமினியிடமிருந்து வாங்கி நேரடியாகப் பேசவும் முடியும்.

கூகுள் நிறுவனம் இந்த புதிய ‘Call for Me’ அம்சத்தை முதற்கட்டமாக அமெரிக்காவில் உள்ள கூகுள் பிக்சல் 11 (Google Pixel 11) ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு Beta) பதிப்பில் சோதனை முறையில் வழங்கத் தொடங்கியுள்ளது. ஜெமினி அட்வான்ஸ்டு சந்தா (Gemini Subscription) வைத்துள்ளவர்கள் மற்றும் கூகுள் போன் ஆப் பீட்டா திட்டத்தில் இருப்பவர்கள் இதை தற்போது பயன்படுத்தலாம்.

விரைவில் இந்த அம்சம் பிற நாடுகளுக்கும், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

8

“அனைத்து விவசாயிகளுக்கும் ரூ. 75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி!” – தமிழ்நாடு அரசு உத்தரவு!

November 7, 2026

சென்னை: கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபடியின்றி 75,000 ரூபாய் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும்

thamizhalai_2026-11-07_ez053nqe_2dd3cb85-04b2-48b2-9595-4d7250a46fcb

“வெற்றி மடிக்கணினி திட்டத்திற்காக ரூ.2,000 கோடி ஒதுக்கீடு!” – முதலமைச்சர் விஜய் உத்தரவு!

November 7, 2026

சென்னை: கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் வெற்றி மடிக்கணினித் திட்டத்தைச் செயல்படுத்த 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து

6

“போலி பதிப்பகத்திற்கு திமுக ஆட்சியில் கொள்முதல் ஆணை!” – ஆவணத்தை வெளியிட்ட தவெக!

November 7, 2026

சென்னை: போலிப் பதிப்பகங்களுக்கு திமுக ஆட்சியில்தான் புத்தகங்கள் கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்பட்டதாகத் தவெக ஐ.டி விங் முக்கிய ஆவணத்தை அதிரடியாக

dsfsd

நாடு திரும்பினார் பிரதமர்!

November 7, 2026

அன்டிகுவா மற்றும் பார்புடாவில் நடைபெற்ற 28ஆவது பொதுநலவாய அரச தலைவர்களின் உச்சிமாநாட்டில் (CHOGM 2026) பங்கேற்ற பிரதமர் ஹரிணி அமரசூரிய,

d

Manpower ஊழியர் முறையை ஒழிக்க அரசாங்கம் நடவடிக்கை

November 7, 2026

நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் ‘மேன்பவர்’ ஊழியர் முறையை ஒழிப்பதற்காக தற்போதைய அரசாங்கம் புதிய சட்டங்களை இயற்றி வருவதாக வர்த்தக, வாணிப, உணவுப்

in

இந்தியாவின் புதிய கடவுச்சீட்டு மற்றும் விசா விதிகள்; இலங்கைத் தமிழர் நிலை?

November 7, 2026

இந்திய அரசு வெளிநாட்டினருக்கான புதிய கடவுச்சீட்டு மற்றும் விசா விதிகளில் திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் குறிப்பிட்ட பாகிஸ்தான் குடிமக்கள்,

sa

விகாரை வளாகத்தில் சத்தியாகிரகத்தில் ஈடுபடுவோர் வௌியேற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு!

November 7, 2026

அனுராதபுரம் – ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினரை குறித்த

wa

தெனியாய பகுதியில் 4 பேர் நீரில் மூழ்கி மாயம்!

November 7, 2026

தெனியாய, பெவரலிய பகுதியில் உள்ள நீரோடையில் நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். நுகேகொட பகுதியிலிருந்து சென்ற

ff

Google Gemini எமக்காகப் பேசவும் தயாராகிவிட்டது!

November 7, 2026

தொழில்நுட்ப வசதிகள் வளர வளர, நம்முடைய அன்றாட வாழ்க்கையும், உலகமும் மிக வேகமாக மாறி வருகின்றன. இந்த வளர்ச்சி மனித

5

“திரையரங்குகளில் தினமும் 6 காட்சிகளுக்கு அனுமதி: அரசாணையை திரும்பப் பெற வேண்டும்!” – அன்புமணி!

November 7, 2026

சென்னை: திரையரங்குகளில் தினமும் 6 காட்சிகள் திரையிட அனுமதி அளித்த அரசாணையைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்

4

“பெரியார் அறிவுலகம் ஊழல்: ஒரு தலைமுறையின் அறிவு வளர்ச்சியை பாதிக்கும் மாபெரும் முறைகேடு!” – சீமான்!

November 7, 2026

சென்னை: தவறான தகவல்களை நூலகத்தின் வழியாக மக்களிடம் கொண்டுசேர்ப்பது, பண மோசடியையும் கடந்து ஒரு தலைமுறையின் அறிவு வளர்ச்சியையே பாதிக்கும்

3

“தவெக ஆட்சி விரைவில் கவிழப்போகிறது!” – செல்லூர் ராஜூ பேட்டி!

November 7, 2026

மதுரை: தமிழகத்தில் தவெக ஆட்சி விரைவில் கவிழப்போகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இவரது