விகாரை வளாகத்தில் சத்தியாகிரகத்தில் ஈடுபடுவோர் வௌியேற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு!

அனுராதபுரம் – ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினரை குறித்த பகுதியில் உடனடியாக வெளியேறுமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் IX ஆம் அத்தியாயத்தின் 106 (1) ஆம் பிரிவின் கீழ் அவசர சந்தர்ப்பங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தடுப்பதற்காக தற்காலிகமாகப் பிறப்பிக்கப்படும் கட்டளையாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் உதித நிசாந்த ஆகியோருடன் தங்கியுள்ள அனைத்துப் பௌத்த துறவிகளும் ஏனைய நபர்களும் அங்கு அமைத்துள்ள தற்காலிகக் கூடாரங்களை அகற்றிவிட்டு, இன்று பிற்பகல் 2 மணிக்கு முன்னர் புனிதப் பகுதி வளாகத்திலிருந்து வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த வளாகத்திலிருந்து அமைதியான முறையில் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டபோதிலும், அவர்கள் வெளியேறாமல் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் மற்றும் சத்தியாகிரகப் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும், ருவன்வெலிசாயவை வழிபட வரும் பக்தர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படுவதாகவும் அனுராதபுரம் தலைமையகப் பொலிஸ் பரிசோதகரினால் நீதிமன்றத்தில் கருத்துக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

குறித்த நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, ருவன்வெலிசாய மற்றும் ஸ்ரீ மகா போதி உள்ளடங்கலாக முழுப் புனிதப் பகுதி வளாகத்திலிருந்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெளியேற வேண்டும்.

மேலும், புனிதப் பகுதியிலுள்ள தொல்பொருள் சின்னங்களுக்கு எவ்வித சேதமோ அல்லது அழிவோ ஏற்படுத்தக் கூடாது என்றும், அமைக்கப்பட்டுள்ள தற்காலிகக் கூடாரங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நீதிமன்றத்தினால் வேறு விதமான உத்தரவு பிறப்பிக்கப்படாத பட்சத்தில், இன்றைய தினம் முதல் 14 நாட்களுக்கு இந்த உத்தரவு அமுலில் இருக்கும் என நீதவான் தனது கட்டளையில் தெரிவித்துள்ளார்.

7

“அவர்களே பாம் வைப்பார்களாம், அவர்களே எடுப்பார்களாம்!” – அமைச்சர் ராஜ்மோகன் கிண்டல்!

November 8, 2026

“‘சென்னை: பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு விவகாரத்தில், திமுக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்திருப்பதை அமைச்சர் ராஜ்மோகன் கடுமையாகக்

6

“பெரியார் புத்தக கொள்முதல் முறைகேடு: விசாரணைக்கு நாங்கள் தயார்!” – உதயநிதி ஸ்டாலின்!

November 8, 2026

சென்னை: முரசு புயலின்போது உயிரிழந்த காசிமேடு மீனவர்களின் குடும்பத்தை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

5

“அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த 4 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ்!” – ஜே.சி.டி.பிரபாகர் அதிரடி!

November 8, 2026

சென்னை: அதிமுகவில் இருந்து விலகித் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4 பேருக்குத் தகுதி நீக்க விவகாரம் தொடர்பாகச் சபாநாயகர்

4

“மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது!” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

November 8, 2026

சென்னை: மேகதாது அணை விவகாரத்தில், கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என முதலமைச்சர் விஜய் பிரதமர்

3

“’சண்டியர்’ திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம்!” – கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

November 8, 2026

கோவை: கமல்ஹாசன் தனது புதிய திரைப்படத்திற்கு மீண்டும் ‘சண்டியர்’ எனப் பெயர் சூட்டியுள்ளதற்குப் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்

2

“உலகிலேயே AI தொழில்நுட்பத்தில் ஊழல் செய்து சாதனை படைத்த திமுக!” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

November 8, 2026

சென்னை: உலகிலேயே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதன்முதலில் ஊழல் செய்து திமுக மாபெரும் உலக சாதனை படைத்துள்ளதாகப் பொதுப்பணி

1

“சீமானை பொது வேட்பாளராக அறிவித்தால்…!” – நயினார் நாகேந்திரன் பேட்டி!

November 8, 2026

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடும் எண்ணம் தமக்கு இல்லை என்றும், அனைத்துக் கட்சிகளும் சீமானைப் பொது வேட்பாளராக அறிவித்தால் பாஜக

sa

ரசிகர்​களுக்கு சிறப்பான அனுபவத்​தைத் தரும் ‘ஜான் டோ’ திரைப்​படம் – சஞ்​சனா நடராஜன்

November 8, 2026

அர்​ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா உள்​பட பலர் நடித்​துள்ள ‘ஜான் டோ’ திரைப்​படம் நவ.13-ல் வெளியாக இருக்கிறது.

nas

சூர்​யாவின் திரைப்​படத்தை எப்​படி நிராகரிக்க முடியும்? – நஸ்ரியா

November 8, 2026

சூர்யா நடித்​துள்ள ‘சீன்’ திரைப்​படம் வெளியானது. இதில் நஸ்ரியா, நஸ்​லென் உள்​பட பலர் நடித்​துள்​ளனர். இதன் புரமோஷனில், ‘3 அல்​லது

sa

ரசிகர்​களுக்கு சிறப்பான அனுபவத்​தைத் தரும் ‘ஜான் டோ’ திரைப்​படம் – சஞ்​சனா நடராஜன்

November 8, 2026

அர்​ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா உள்​பட பலர் நடித்​துள்ள ‘ஜான் டோ’ திரைப்​படம் நவ.13-ல் வெளியாக இருக்கிறது.

poc

பொங்கலுக்கு வருகிறது ‘பாக்கெட் நாவல்’

November 8, 2026

தியாகராஜன் குமாரராஜன் – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘பாக்கெட் நாவல்’ படம் 2027 பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

tam

‘தமிழ்ப் படம் 3’ படப்பிடிப்பு தொடக்கம்

November 8, 2026

சி.எஸ்.அமுதல் இயக்கத்தில் மிர்ச்சி சிவாவின் நடிக்கும் ‘தமிழ்ப் படம் 3’ படப்பிடிப்பு இன்று (நவ.5) தொடங்கி இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.