மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (8) நாட்டின் பல பகுதிகளில் மதுபான விற்பனை நிலையங்களை  மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, வடக்கு மாகாணம் மற்றும் நுவரெலியா மாவட்டம், மற்றும் பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை, ரிதீமாலியத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைத் தவிர, ஏனைய அனைத்துப் பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் நாளை மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடும் அல்லது அனுமதிப்பத்திர நிபந்தனைகளை […]

நேருக்கு நேர் மோதிய பேருந்து – வான்

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்கபொல, மாஹேன பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில் இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட மூவரே உயிரிழந்துள்ள நிலையில், மேலும் நால்வர் படுகாயமடைந்து வரக்காப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த வான் ஒன்று, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில், கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி எதிர்த்திசையில் பயணித்த […]

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

வரும் திங்கட்கிழமை (9) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  மாகாண ஆளுநர்கள் அறிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் இந்த விசேட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், எதிர்வரும் சனிக்கிழமை (14) கல்வி செயற்பாடுகள்  முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் 9ஆம் திகதி வழமைபோல் இயங்கும் எனவும் ஆளுநர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக, மத்திய, ஊவா, […]

“அனைத்து விவசாயிகளுக்கும் ரூ. 75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி!” – தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை: கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபடியின்றி 75,000 ரூபாய் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் எனத் தமிழ்நாடு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. தள்ளுபடிக்குத் தகுதியான பயிர்க்கடன்களுக்கான காலவரையறை 2025 மே மாதம் முதல் 2026 மார்ச் மாதம் வரை கூடுதலாக ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. திட்டம் விரிவாக்கம்: முன்பு முதலமைச்சர் விஜய் அறிவித்த விரிவான திட்டத்தின்படி, ஒரு லட்சத்துக்கு மேல் பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு 35,000 ரூபாய் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என […]

“வெற்றி மடிக்கணினி திட்டத்திற்காக ரூ.2,000 கோடி ஒதுக்கீடு!” – முதலமைச்சர் விஜய் உத்தரவு!

சென்னை: கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் வெற்றி மடிக்கணினித் திட்டத்தைச் செயல்படுத்த 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டம் மாணவர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மடிக்கணினித் திட்டம்: இன்றைய டிஜிட்டல் உலகில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி என்பது இன்றியமையாத கல்வி உபகரணமாக விளங்குகிறது. மாணவர்கள் தங்களது தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தவும், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளவும், இணையவழிக் கல்வி மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கும் மடிக்கணினிகள் பெரிதும் உதவும். இதனைக் […]

“போலி பதிப்பகத்திற்கு திமுக ஆட்சியில் கொள்முதல் ஆணை!” – ஆவணத்தை வெளியிட்ட தவெக!

சென்னை: போலிப் பதிப்பகங்களுக்கு திமுக ஆட்சியில்தான் புத்தகங்கள் கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்பட்டதாகத் தவெக ஐ.டி விங் முக்கிய ஆவணத்தை அதிரடியாக வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய திருப்பம் அரசியல் களத்தில் மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியார் அறிவுலகம்: கோவை காந்திபுரத்தில் திமுக ஆட்சியில் 300 கோடி ரூபாயில் பெரியார் அறிவுலகம் சிறப்பாகக் கட்டப்பட்டது. தவெக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து பெரியார் அறிவுலகத்தைக் கடந்த மாதம் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இதனிடையே பெரியார் அறிவுலகத்தைப் பார்வையிட்ட எழுத்தாளர் பெருமாள் […]

நாடு திரும்பினார் பிரதமர்!

அன்டிகுவா மற்றும் பார்புடாவில் நடைபெற்ற 28ஆவது பொதுநலவாய அரச தலைவர்களின் உச்சிமாநாட்டில் (CHOGM 2026) பங்கேற்ற பிரதமர் ஹரிணி அமரசூரிய, தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துகொண்டு இன்று சனிக்கிழமை (7) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்து இலங்கை திரும்பினார். பொதுநலவாய தலைவர்களுடன் இணைந்து பிரதான உலகளாவிய பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்த கலந்துரையாடல்களில் பிரதமர் ஈடுபட்டார். பொதுவான சவால்களுக்குத் தீர்வு காண்பதற்காக உறுப்பு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் பங்குடைமைகளை வலுப்படுத்துவதில் இதன்போது […]

Manpower ஊழியர் முறையை ஒழிக்க அரசாங்கம் நடவடிக்கை

நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் ‘மேன்பவர்’ ஊழியர் முறையை ஒழிப்பதற்காக தற்போதைய அரசாங்கம் புதிய சட்டங்களை இயற்றி வருவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இன்று (07) கொழும்பில் நடைபெறும் தொழிற்சங்க தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நேரடியாக வேலை செய்து தமது உழைப்பை வழங்கும் ஊழியருக்காக இடைத்தரகர் ஒருவருக்குப் பணம் செலுத்துவதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது எனச் சுட்டிக்காட்டினார். […]

இந்தியாவின் புதிய கடவுச்சீட்டு மற்றும் விசா விதிகள்; இலங்கைத் தமிழர் நிலை?

இந்திய அரசு வெளிநாட்டினருக்கான புதிய கடவுச்சீட்டு மற்றும் விசா விதிகளில் திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் குறிப்பிட்ட பாகிஸ்தான் குடிமக்கள், மற்றும் இலங்கைத் தமிழர்கள், திபெத்தியர்கள், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மை அகதிகள் உள்ளிட்டோருக்குப் பொருந்தும்.​ நேபாள மற்றும் பூடான் குடிமக்களுக்குத் தனியாகப் பயணத் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. தங்கள் பயண ஆவணங்களைப் புதுப்பிக்க இயலாதவர்களுக்கும், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளின் கீழ் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டவர்களுக்கும் இந்தப் புதிய திருத்தங்கள் நிவாரணம் அளிக்கின்றன.​மத்திய உள்துறை […]

விகாரை வளாகத்தில் சத்தியாகிரகத்தில் ஈடுபடுவோர் வௌியேற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு!

அனுராதபுரம் – ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினரை குறித்த பகுதியில் உடனடியாக வெளியேறுமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் IX ஆம் அத்தியாயத்தின் 106 (1) ஆம் பிரிவின் கீழ் அவசர சந்தர்ப்பங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தடுப்பதற்காக தற்காலிகமாகப் பிறப்பிக்கப்படும் கட்டளையாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பலாங்கொட கஸ்ஸப தேரர் […]