“பெரியார் அறிவுலகம் ஊழல்: ஒரு தலைமுறையின் அறிவு வளர்ச்சியை பாதிக்கும் மாபெரும் முறைகேடு!” – சீமான்!

சென்னை:

தவறான தகவல்களை நூலகத்தின் வழியாக மக்களிடம் கொண்டுசேர்ப்பது, பண மோசடியையும் கடந்து ஒரு தலைமுறையின் அறிவு வளர்ச்சியையே பாதிக்கும் மாபெரும் முறைகேடு என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பேரதிர்ச்சி தருகிறது:

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவையிலுள்ள பெரியார் அறிவுலக நூலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள்முருகன் சான்றுகளுடன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பேரதிர்ச்சி தருகின்றன. மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அறிவுத்தேடலுக்கான இடமான நூலகத்திலேயே, தவறான தகவல்கள் அடங்கிய போலி நூல்கள் அதிக விலைக்குக் கொள்முதல் செய்யப்பட்டு, மாபெரும் முறைகேடு நடைபெற்றுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. முந்நூறு பக்க நூல்களுக்கு 1,395 ரூபாய் என விலை குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நூல்களின் உள்ளடக்கத்தை ஆய்வு செய்தது யார்? அவற்றின் விலையை ஏற்றுக்கொண்டது யார்? கொள்முதலுக்கு ஒப்புதல் வழங்கியது யார்? நானூறு வெண்பாக்களின் தொகுப்பான நாலடியாரை ஒரு கவிஞராகச் சித்தரிப்பதும், மதுரைக்காஞ்சியை எழுதிய மாங்குடி மருதனாருக்குப் பதிலாக இல்லாத பெயர்களையும், வரலாற்றையும் முன்வைப்பதும் எத்தகைய அபத்தம்?” என்று அவர் சரமாரியாகக் கேள்வியெழுப்பியுள்ளார்.

அரசுக்குச் சாடல்:

தொடர்ந்து அவர், “தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றையே தவறாக எழுதி வைத்துள்ள நூல்களை இளைஞர்கள் படித்தால் என்ன ஆகும்? அறியாமையை அகற்ற வேண்டிய நூலகத்தில், அறியாமையையே அச்சடித்து அடுக்கி வைப்பதுதான் அரசின் மாபெரும் சாதனையா? தவறான தகவல்களைக் கொண்டு, செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்பட்டப் போலி நூல்களைக் கொள்முதல் செய்வதில் நடைபெற்ற இம்மாபெரும் முறைகேடு ஆட்சியின் அவல நிலைக்கான சான்றாகும். ஒருபக்கம், பொழுதுபோக்குக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகாலை ஆறு மணிக்கே திரையரங்குகளைத் திறக்க ஏற்பாடு செய்கிறது தவெக அரசு. மற்றொரு பக்கம், அறிவுக்கண்ணைத் திறக்க வேண்டிய நூலகத்தில், புத்தகங்களிலேயே ஊழல் நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுமளவுக்கு நிர்வாகம் செய்கிறது,” என்று அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

நீதிவிசாரணை தேவை:

மேலும், “முந்தைய திமுகவின் ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதைக் கூறி, இன்றைய அரசு தன்னுடைய பொறுப்பிலிருந்து ஒருபோதும் விலக முடியாது. ஆகவே, பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் தொடர்பான விவரங்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு பொதுவெளியில் உடனடியாக வெளியிட வேண்டும் எனவும், தவறான தகவல்கள் கொண்ட போலி நூல்களை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், கொள்முதல் முறைகேடுகள் குறித்து நீதிவிசாரணையும், சிறப்புத் தணிக்கையும் நடத்தி, குற்றத்தில் தொடர்புடைய அதிகாரிகள் உள்ளிட்ட அனைவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுத்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாகத் தவெக அரசை வலியுறுத்துகிறேன்,” என்று சீமான் தனது அறிக்கையில் ஆவேசமாகக் குறிப்பிட்டுள்ளார்.

#Seeman #NTK #PeriyarArivulagam #BookScam #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive

7

“அவர்களே பாம் வைப்பார்களாம், அவர்களே எடுப்பார்களாம்!” – அமைச்சர் ராஜ்மோகன் கிண்டல்!

November 8, 2026

“‘சென்னை: பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு விவகாரத்தில், திமுக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்திருப்பதை அமைச்சர் ராஜ்மோகன் கடுமையாகக்

6

“பெரியார் புத்தக கொள்முதல் முறைகேடு: விசாரணைக்கு நாங்கள் தயார்!” – உதயநிதி ஸ்டாலின்!

November 8, 2026

சென்னை: முரசு புயலின்போது உயிரிழந்த காசிமேடு மீனவர்களின் குடும்பத்தை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

5

“அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த 4 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ்!” – ஜே.சி.டி.பிரபாகர் அதிரடி!

November 8, 2026

சென்னை: அதிமுகவில் இருந்து விலகித் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4 பேருக்குத் தகுதி நீக்க விவகாரம் தொடர்பாகச் சபாநாயகர்

4

“மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது!” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

November 8, 2026

சென்னை: மேகதாது அணை விவகாரத்தில், கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என முதலமைச்சர் விஜய் பிரதமர்

3

“’சண்டியர்’ திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம்!” – கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

November 8, 2026

கோவை: கமல்ஹாசன் தனது புதிய திரைப்படத்திற்கு மீண்டும் ‘சண்டியர்’ எனப் பெயர் சூட்டியுள்ளதற்குப் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்

2

“உலகிலேயே AI தொழில்நுட்பத்தில் ஊழல் செய்து சாதனை படைத்த திமுக!” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

November 8, 2026

சென்னை: உலகிலேயே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதன்முதலில் ஊழல் செய்து திமுக மாபெரும் உலக சாதனை படைத்துள்ளதாகப் பொதுப்பணி

1

“சீமானை பொது வேட்பாளராக அறிவித்தால்…!” – நயினார் நாகேந்திரன் பேட்டி!

November 8, 2026

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடும் எண்ணம் தமக்கு இல்லை என்றும், அனைத்துக் கட்சிகளும் சீமானைப் பொது வேட்பாளராக அறிவித்தால் பாஜக

sa

ரசிகர்​களுக்கு சிறப்பான அனுபவத்​தைத் தரும் ‘ஜான் டோ’ திரைப்​படம் – சஞ்​சனா நடராஜன்

November 8, 2026

அர்​ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா உள்​பட பலர் நடித்​துள்ள ‘ஜான் டோ’ திரைப்​படம் நவ.13-ல் வெளியாக இருக்கிறது.

nas

சூர்​யாவின் திரைப்​படத்தை எப்​படி நிராகரிக்க முடியும்? – நஸ்ரியா

November 8, 2026

சூர்யா நடித்​துள்ள ‘சீன்’ திரைப்​படம் வெளியானது. இதில் நஸ்ரியா, நஸ்​லென் உள்​பட பலர் நடித்​துள்​ளனர். இதன் புரமோஷனில், ‘3 அல்​லது

sa

ரசிகர்​களுக்கு சிறப்பான அனுபவத்​தைத் தரும் ‘ஜான் டோ’ திரைப்​படம் – சஞ்​சனா நடராஜன்

November 8, 2026

அர்​ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா உள்​பட பலர் நடித்​துள்ள ‘ஜான் டோ’ திரைப்​படம் நவ.13-ல் வெளியாக இருக்கிறது.

poc

பொங்கலுக்கு வருகிறது ‘பாக்கெட் நாவல்’

November 8, 2026

தியாகராஜன் குமாரராஜன் – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘பாக்கெட் நாவல்’ படம் 2027 பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

tam

‘தமிழ்ப் படம் 3’ படப்பிடிப்பு தொடக்கம்

November 8, 2026

சி.எஸ்.அமுதல் இயக்கத்தில் மிர்ச்சி சிவாவின் நடிக்கும் ‘தமிழ்ப் படம் 3’ படப்பிடிப்பு இன்று (நவ.5) தொடங்கி இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.