“கவின் வழக்கு: சுர்ஜித் பெற்றோருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ரத்து செய்தது சரியே!” – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

புதுடெல்லி:

நெல்லை கவின் ஆணவப் படுகொலை வழக்கில், சுர்ஜித்தின் பெற்றோருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு காவல் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஆணவக் கொலை:

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்ததால், கடந்த 2025 ஜூலை 27 ஆம் தேதி அந்தப் பெண்ணின் சகோதரர் சுர்ஜித்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுர்ஜித், காவலர்களான அவரின் தந்தை சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி மற்றும் உறவினர் ஜெயபால் ஆகிய நான்கு பேரும் சிபிசிஐடி காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். மேலும், சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கொலை நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள், தடய அறிவியல் ஆவணங்கள் மற்றும் உயிரிழந்த கவினின் காதலி, பெற்றோர் உள்பட 83 சாட்சியங்கள் அளித்த வாக்குமூலங்கள் உள்ளிட்டவை அடங்கிய சுமார் 800 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

உயர் நீதிமன்றம் ரத்து:

அந்தக் குற்றப்பத்திரிகையில், சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோருக்குத் தங்கள் மகள் கவினுடன் கொண்டிருந்த உறவு குறித்து 2016 அல்லது 2017-ஆம் ஆண்டிலிருந்தே தெரிந்திருந்தது என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, தங்கள் மீது காவல் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி சரவணன், கிருஷ்ணகுமாரி மற்றும் ஜெயபால் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, அந்தக் குற்றப்பத்திரிகையைக் கடந்த செப்டம்பர் மாதம் ரத்து செய்தது. மேலும், ஜெயபாலுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீனும் வழங்கியது.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு:

இதையடுத்து, குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, தமிழ்நாடு காவல் துறையின் குற்றப் பிரிவு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு காவல் துறையின் மனுவைத் தள்ளுபடி செய்து, உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து அதிரடியாகத் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு காவல்துறை தரப்பிற்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

#KavinMurderCase #SupremeCourt #HonorKilling #CBCID #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive

Anura_may1

பொதுமக்களுடன் கலந்துரையாடாமல் புதிய சட்டங்களை நிறைவேற்றமாட்டோம் – ஜனாதிபதி

November 7, 2026

பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசிக்காமல் அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தையும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டமூலத்தையும் நாடாளுமன்றத்தில் அரசாங்கம்

canada immigr

கனடாவில் 2 லட்சம் தற்காலிக வசிப்பவர்களுக்கு நிரந்தர குடியுரிமை பெற வாய்ப்பு: அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

November 7, 2026

கனடாவில் ஏற்கனவே வசித்து வரும் தகுதியுடைய 2,00,000 தற்காலிக வசிப்பவர்களுக்கு (temporary residents) 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிரந்தர

harry meghan

குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகப் பொருட்கள் விவகாரம்: மேகனின் தந்தை தாமஸ் மார்க்கிள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்

November 7, 2026

ஜேமி வைட்ஹெட் (Jamie Whitehead) மற்றும் ஹென்றி மூர் (Henry Moore) ஆகியோரால் குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை

dr

புனர்வாழ்வளிக்கப்பட்ட நபர்கள் மீண்டும் போதைப்பொருளை நாடும் தொகையில் வீழ்ச்சி!

November 7, 2026

புனர்வாழ்வளிக்கப்பட்ட நபர்கள் மீண்டும் போதைப்பொருள் பாவனைக்குத் திரும்புவதில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகப் புனர்வாழ்வுப் பணியகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டைக்

c

கொழும்பு தேசிய வைத்தியசாலை மழை நீரில் மூழ்கியது

November 7, 2026

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் மழைநீரில் மூழ்கியமைக்கு, கொழும்பு மாநகர சபையினால் நொரிஸ் கால்வாய்

esp

டிஜிட்டல் மயமாகிறது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆவணப் பணிகள்

November 7, 2026

இலங்கையின் இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் மீள் ஏற்றுமதி செயற்பாடுகளுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் அனுமதிகளை டிஜிட்டல் முறையில் முகாமை செய்வதற்காகப்

jaf pri

சிறைச்சாலை நெருக்கடியை குறைக்க நியமிக்கப்பட்ட குழு கள விஜயம்

November 7, 2026

சிறைச்சாலைகளில் நிலவும் அதிகளவிலான கைதிகளின் நெருக்கடியைக் குறைப்பது தொடர்பாகக் கண்டறிவதற்காக, பொது நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய

9

“தமிழையும் பெரியார் பெயரையும் வைத்து ஊழல் செய்யும் தி.மு.க!” – முதலமைச்சர் விஜய் கடும் விமர்சனம்!

November 6, 2026

சென்னை: பெரியார் அறிவுலகத்திற்குப் புத்தகங்கள் வாங்கியதில் திமுக மாபெரும் ஊழல் செய்துள்ளதாக முதலமைச்சர் விஜய் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது

ju

IGP க்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நீதவான் உடனடியாக இடமாற்றம்

November 6, 2026

நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கூறி பொலிஸ் மா அதிபருக்கு (IGP) எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுத்த

kad

குற்றச்செயல் கும்பலின் தலைவரான ’கைவாரு முத்து’ கட்டுநாயக்கவில் கைது

November 6, 2026

பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் கும்பலின் தலைவரான மனோஜ் முத்துகுமாரண பிரியதர்ஷன என்றழைக்கப்படும் ‘கைவாரு முத்து’ என்பவரை, ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து

carney uuuuuuuuuuuuuuu

அமெரிக்காவைச் சார்ந்திருப்பக் குறைப்பதற்கு கனேடிய வரவு-செலவுத் திட்டம் உறுதிபூண்டுள்ளது

November 6, 2026

AFP செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது: நவம்பர் 5, 2026 – இர 23:32 கனடா வியாழக்கிழமை அன்று “பொருளாதார சுதந்திரத்தை”

canda budget

கனேடிய கூட்டாட்சி வரவு-செலவுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய முன்மொழிவுகள்

November 6, 2026

பிரதமர் மார்க் கார்னியின் ஆட்சியில் இரண்டாவது முறையாக, கனேடிய அரசாங்கம் தனது முன்மொழியப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தை வியாழக்கிழமை வெளியிட்டது. அதன்